கருப்பு வெள்ளை சிந்தனை ஏற்படுத்தும் விளைவுகள் தெரியுமா?

Black and white thinking
Black and white thinkinghttps://leadlifewell.com
Published on

ருப்பு வெள்ளை சிந்தனை என்பது ஒரு கடினமான மனநிலையை குறிக்கிறது என்கிறது உளவியல். இது ஒரு அறிவாற்றல் சிதைவை குறிக்கும் சொல்லாகும். இது ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கருப்பு வெள்ளை சிந்தனையின் அறிகுறிகள்:

1. கருப்பு வெள்ளை சிந்தனை, ஒரு மனிதரின் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த சிந்தனை உள்ள மனிதர் அடிக்கடி 'எப்போதும், ஒருபோதும் இல்லை, சரியானது, பயங்கரமானது, நல்ல, மோசமான| போன்ற வார்த்தைகளை உபயோகிப்பார்கள்.

2. இவர்கள் எப்போதும் எதிர்மறையான சுய பேச்சுகளில் ஈடுபடுபவர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பார்கள்.

3. மனிதர்களை மிகவும் நல்லவர்கள் அல்லது மிகவும் கெட்டவர்கள் என்று இரு வகையாக மட்டுமே இவர்கள் பிரிப்பார்கள். பொதுவாக மனிதர்கள் யாரும் முழுக்க முழுக்க நல்லவர்களும் அல்ல, கெட்டவர்களும் அல்ல. ஆனால், கருப்பு வெள்ளை சிந்தனை உள்ள மனிதர்கள் பிற மனிதர்களை ஒரு நடுத்தர நிலையில் இருந்து பார்க்க மாட்டார்கள். ஒருவர் 90 சதவிகிதம் நல்லவர், பத்து சதவிகிதம் கெட்டவர் என்று இருக்கும் நிலையை இவர்கள் முழுக்க முழுக்க நல்லவர்கள் அல்லது மிகவும் கெட்டவர்கள் என பிரித்து விடுவார்கள்.

கருப்பு வெள்ளை சிந்தனை ஏற்படுத்தும் விளைவுகள்:

1. உறவுகளில் எதிர்மறையான தாக்கம்: கருப்பு வெள்ளை சிந்தனை உறவுகளை சிதைக்கும். ஏனென்றால். அது நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தக்கூடும். யாரோ ஒருவர் மற்றவர்களை முழுக்க முழுக்க சரியானவர்களாகவோ அல்லது முற்றிலும் குறைபாடு உள்ளவர்களாகவோ பார்க்கும்போது ஆரோக்கியமான, சமநிலையான உறவுகளை பேணுவது கடினம்.

2. மன அழுத்தம் மற்றும் பதற்றம்: இவர்கள் எப்போதும் எக்ஸ்ட்ரீம் லெவல் எனப்படும் உச்ச நிலையில் சூழ்நிலைகளை பார்ப்பதால் எப்போதும் அதிக மன அழுத்தம் மற்றும் பதற்றத்திலேயே இருப்பார்கள். உதாரணமாக, தான் எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவார்கள். ஒரு சிறு தோல்வியைக் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் மன அழுத்தமும் பதற்றமும் எப்போதும் இருக்கும்.

3. பரிபூரணத்துவம் (Perfection): இந்த சிந்தனையாளர்கள் பெரும்பாலும் எல்லாவற்றிலும் பரிபூரணத்துவத்தை எதிர்பார்ப்பார்கள். இது தனிப்பட்ட வளர்ச்சியை தடுக்கும். அல்லது முயற்சி செய்வதையே முடக்கும்.

4. தவறான முடிவுகள்: இந்த சிந்தனை உள்ளவர்கள் எப்போதும் மனக்கிளர்ச்சியுடன் முடிவுகளை எடுப்பதால் அது பெரும்பாலும் தவறாகவே இருக்கும். நுணுக்கத்தை கருத்தில் கொள்ள மாட்டார்கள். நன்மை. தீமைகளை எடை போடாமல் முடிவெடுப்பதால் அது தவறாகவே இருக்கும்.

5. மோதல் தன்மை: பிறருடன் எப்போதும் மோதல் தன்மையுடனேயே இருப்பார்கள். இது பிரிவை உருவாக்கி பயனுள்ள தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை தடுக்கும். இது மாதிரியான நபர்களை சமரசம் செய்வது மிகவும் கடினம். வேலையை விட்டு விடுவார்கள். உறவை மற்றும் நட்பை முறித்துக் கொள்வார்கள்.

6. தோல்வி பயம்: எப்போதும் பரிபூரணத்துவத்தை எதிர்பார்ப்பதால் தோல்வி பயத்திலேயே இயங்குவார்கள். அதனால் இவர்கள் வேலையில் பெரும்பாலும் தோல்விகளே ஏற்படும்.

இதிலிருந்து விடுபடுவது எப்படி?

1. மனம் அல்லது உடல் ரீதியான பதற்றத்தை உணரும்போது எந்த மாதிரி எண்ணங்கள் அவர்களை அது மாதிரி பதற்றப்பட செய்தது என்பதை அடையாளம் காண வேண்டும்.

2. 'எப்போதும்', 'ஒருபோதும்' போன்ற வார்த்தைகளை 'சில நேரங்களில்', ‘ஒருவேளை’ என்று மாற்றிப் பேச வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கோயில் கோபுரக் கலசங்களில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?
Black and white thinking

3. எந்த ஒரு சூழ்நிலையையும் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

4. எல்லா எண்ணங்களும் உண்மைகள் அல்ல என்று உணர வேண்டும். எதிர்மறை எண்ணங்களை மாற்றி, நேர்மறை எண்ணங்களை அங்கு நிரப்ப வேண்டும்.

இந்தப் பயிற்சி முதலில் கடினமானதாக இருக்கும். ஆனால், நமது மூளையில் உள்ள நியூரோபிளாஸ்டி சிட்டியால் இது அறியப்படும்போது எண்ணங்களையும், பழக்க வழக்கங்களையும் மாற்ற முடியும். புதிய பழக்கங்களை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதன் மூலம் மூளைக்கு வித்தியாசமாக சிந்திக்கப் பயிற்சி அளிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com