புயல் எச்சரிக்கை கூண்டுகள் சொல்லும் செய்தி என்ன தெரியுமா?

Do you know the message of storm warning cages?
Do you know the message of storm warning cages?
மகாலெட்சுமி சுப்ரமணியன்

நான் மகாலெட்சுமி சுப்ரமணியன்.கல்கி குழுமத்தின் நெடுநாள் வாசகி.எனக்கு எழுதுவதிலும்,படிப்பதிலும் ஆர்வம் அதிகம்.வீட்டிலிருந்தே சிறிய அளவில் தோழியின் விழாக்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கிறேன்.வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்,கனிகளை சிறிய அளவில் விற்பனை செய்கிறேன்.பிசியாக என்னை வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்.

Updated on

ழைக்காலங்களில் அடிக்கடி புயல் சின்னங்கள் உருவாவது வாடிக்கை. அப்படிப் புயல் உருவாகி, படிப்படியாக வளர்ந்து வலுவாகும் நிலைகளுக்கேற்ப துறைமுகங்களில் ‌1 முதல் 11 எண்கள் வரையிலான எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. அதன் பொருள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

எண் 1: புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது. பலமான காற்று வீசுகிறது. துறைமுகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.

எண் 2: புயல் உருவாகியுள்ளது என அறிவிப்பு. துறைமுகத்திலிருந்து கப்பல்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவு.

எண் 3: திடீர் காற்று மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

எண் 4: துறைமுகத்தில் மோசமான வானிலை ஏற்பட்டுள்ளது. துறைமுகத்திலிருக்கும் கப்பல்கள், பொருட்களுக்கு ஆபத்து.

எண் 5: புயல் துறைமுகத்தின் இடது பக்கமாக கரையைக் கடக்கும்.

எண் 6: துறைமுகத்துக்கு வலது பக்கமாக புயல் கரையைக் கடக்கும்.

எண் 7: துறைமுகம் வழியாக அல்லது அதற்கு மிக அருகிலேயே புயல் கரையைக் கடக்கும்.

எண் 8: அபாயம் மிக்க புயல், துறைமுகத்தின் இடது பக்கமாக கரையைக் கடக்கும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும் எளிய வழிகள்!
Do you know the message of storm warning cages?

எண் 9: அபாயம் மிக்க புயல் துறைமுகத்தின் வலது பக்கமாக கரையைக் கடக்கும்.

எண் 10: அதிதீவிர புயல் துறைமுகத்தின் வழியாகவோ அதன் அருகிலோ கரையைக் கடக்கும்.

எண் 11: வானிலை எச்சரிக்கை மையத்துடன் துறைமுகத்துக்கு தகவல் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இப்படிப் பல செய்திகளை புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் பொதுமக்களுக்குச் சொல்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com