தேவை என்பது சிறியதுதான். ஆனால், மனிதர்கள் ஒருசில பிரச்னைகளோடு போட்டி போட்டுச் செல்ல முடிவதில்லை. தேவையில் ஒரு சிறிய நிழல் என்பது முக்கியமானது. இதைப் பெற முடியாமல் பலர் சிரமப்படுவது தெரிகிறது. தேவை என்பது அமைதியான வாழ்வை பெற முயற்சிப்பதாக இருக்க வேண்டும். இங்கே அதிக ஆசை, அதிக செலவு இவற்றை விட திறமையான போக்கு சிறந்தது. தேவையில் தொழிலுக்குக் கல்வி என்று வரும்போது கல்வி கட்டாயமாகத் தேவைப்படுகிறது.
இருபால் மக்களுக்கும் தனது தேவையில் வேண்டுமென நினைப்பது நளினமான பேச்சாக இருக்க வேண்டும், நல்லதொரு உணவாக இருக்க வேண்டும், சுத்தமாக இருக்க வேண்டும், அலங்காரமாக இருக்க வேண்டும், மென்மையாக இருக்க வேண்டும் என்பதேயாகும். நியாயமான ஆசைகள் மறுக்கப்படலாகாது. இது சமுதாயத்தையும் பாதிக்கும் விஷயமாகும். தேவை என்பதில் தாய் படைக்கும் அமுது என்பதுதான் குடும்பத்தை நிறைவாக்குவது ஆகும்.
தேவைக்கு எல்லை என்பது எப்போதும் தேவை. தேவையின் எல்லை இல்லாதவர்கள் எதையும் எளிதில் சாதிக்க முடிவதில்லை. பலவிதமான நிலைமைகள், பலவிதமான, துன்பங்கள் என்பதை சிரிப்பு என்பது மறைக்கின்றது. இந்த சிரிப்பில் ஓரம் இல்லை. பலவிதமான துன்பங்கள் பந்தாவுக்குள் மறைகின்றன. பலவிதமான தவறுகள் கௌரவத்திற்குள் மறைகின்றன. அதுபோல் அறிவின்மையானது பணத்திற்குள் மறைக்கப்படுகிறது.
தேவையில் நிலைமையை உணர்தல்: தேவையில் நிலைமையை உணர்தல் என்பது சட்டத்தை புரிதலும், சட்டத்தால் தண்டிக்கப்படுதலை புரிதலும், அதற்கேற்ப தன்னுடைய வேலையையும் குழந்தைகளின் தேவைகளையும் சமயத்துக்கே புரிந்து அதற்குத் தகுந்த மாதிரி ஊர் உலகத்தோடு சேர்ந்து போவதிலும் வேண்டியதாக உள்ளது. இதுபோல் நம்மோடு பேசுபவர்களின் வயதை, நிலையை, பருவத்தை எல்லாம் கவனிக்க வேண்டியுள்ளது.
தேவையின் எல்லை என்று கூறும்போது சரியானதை செய்பவர்கள், மனநிலை, உடல் நிலை நன்றாக உள்ளவர்கள், சரியானவற்றிற்கு அஞ்சாதவர்கள், சபலமில்லாதவர்கள், உண்மை தெரிந்தவர்கள், முடிவு தெரிந்தவர்கள், வேலை தெரிந்தவர்கள், தனக்கு அப்பாற்பட்டதை நல்லவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முயல்பவர்கள் என்றே கூறலாம். இவர்கள், இவர்களுக்குக் கீழே உள்ளவர்களை வழிநடத்தத் தெரிந்தவர்கள். இங்கே உழைப்பும், சந்தோஷமும் காணப்படும். அதன் மதிப்பே தனிதான் என்றும் கூறலாம்.
தேவையற்றது: தேவையில்லாதது எனக் கருதப்படுவது தேவையில்லாத ஆடல், பாடல், விளையாடல், அதோடு பிறர் உரிமைகளை பறித்துக்கொள்ளல் என்றும் கூறலாம். பொழுதுபோக்கில் விபரீதத்தை உருவாக்குவது போன்றவையேயாகும். உரையாடலிலும் இதை இதைத்தான் கூற வேண்டும் என்றும் உள்ளது.
அவரவர் நிலைமைக்கு தக்க கடினபட்ச எதிர்பார்ப்பு இவ்வளவு என்பது தெரிய வேண்டும். அதிகபட்ச எதிர்பார்ப்பு என்பதில் பலர் தனது கவனத்தைக் காட்டுவது உண்டு. இவ்வாறு எதிர்பார்ப்பவர்களில் பலர் கடமையுணர்வில் கண்ணியமானவர்களாக இருப்பார்கள் என்று கூற முடியாது.
வேலை கற்றுக்கொள்ளும் நேரம் என்பது கெடுபிடியானதாகும். பெற்றோர்கள் உதவியே இல்லாது கடினமான வேலைகளைச் செய்து இந்த இடத்தை பூர்த்தி செய்பவர்கள் உண்டு. நம்பிக்கை இவர்களுக்குத் தேவைப்படுகிறது. தன்னை மூன்றாவது நபராக நினைத்து துக்கமும் துயரமும் மோத சரியான உணவும், உடையும் இல்லாது மனவேதனைக்கு ஆளாகின்றனர். அதிக சம்பளத்தை எதிர்பார்ப்பதும், பிற்கால வாழ்வுக்கு படிக்கல் இடவுமே இந்த வேதனையும், சோதனையும் ஆகும். இதில் தீராத நோய்க்கும், தற்கொலைக்கும் முடிவாவதுண்டு. தேவை இல்லாதது என்பது அழுகையாகவும், பிரச்னையானதாகவும் கூட ஆகலாம்.