சேஃப்டி பின்னில் இருக்கும் ஓட்டை எதற்காகத் தெரியுமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

Safety Pin
Safety Pin
Updated on

மது அன்றாட வாழ்க்கையில் மிகச்சிறிய பொருட்கள் கூட மிகப்பெரிய வேலைகளைச் செய்கின்றன. உடை கிழிந்தாலோ, துணிகளை இணைக்க வேண்டும் என்றாலோ நாம் உடனே தேடுவது சேஃப்டி பின் தான் (Safety Pin). சேலை கட்டுவது முதல் குழந்தைகளுக்கான டயப்பர்களை மாட்டுவது வரை இதன் பயன்பாடு மிக அதிகம். நாம் பல ஆண்டுகளாக இதைப் பயன்படுத்தி வந்தாலும், அதன் அடிப்பகுதியில் இருக்கும் சிறிய வட்ட வடிவத் துளை எதற்காக அங்கே இருக்கிறது என்று சிந்தித்திருக்க மாட்டோம். 

ஏதோ டிசைனுக்காகவோ அல்லது நூலைக் கோர்ப்பதற்காகவோ அது வைக்கப்பட்டிருக்கிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. அந்தச் சிறிய வளைவிற்குப் பின்னால் ஒரு மிகச்சிறந்த காரணம் உள்ளது.

கண்டுபிடிப்பு! 

இந்தச் சிறிய கருவியைக் கண்டுபிடித்தவர் வால்டர் ஹன்ட் என்ற அமெரிக்கர். அவர் ஒரு பழைய கம்பித் துண்டை வைத்துத் திருகிக் கொண்டிருக்கும்போதுதான் இந்த யோசனை அவருக்கு வந்தது. அவர் இந்த வடிவமைப்பை உருவாக்கியபோது, அது பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்பதைவிட, அது சரியாக வேலை செய்யவேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். அவர் உருவாக்கிய அந்த வடிவமைப்புதான் இன்றும் எந்த மாற்றமும் இல்லாமல் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பிளாஸ்டிக் சேரில் அந்த ஓட்டை ஏன் இருக்கு தெரியுமா? தெரிஞ்சா இனிமேல் வேற மாதிரி பார்ப்பீங்க!
Safety Pin

அது ஓட்டை அல்ல, அது ஒரு ஸ்பிரிங்: 

அந்த ஊசியின் அடிப்பகுதியில் நாம் பார்க்கும் துளை உண்மையில் ஒரு ஓட்டை கிடையாது. அது ஒரு முழுமையான வட்டமாக வளைக்கப்பட்ட கம்பிச் சுருள் ஆகும். இதை ஆங்கிலத்தில் 'டார்ஷன் ஸ்பிரிங்' (Torsion Spring) என்று அழைப்பார்கள். இந்தச் சுருள்தான் அந்த ஊசிக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுக்கிறது. நாம் ஊசியைத் திறந்து மீண்டும் மூடும்போது, அது தானாகவே பழைய நிலைக்குத் திரும்புவதற்குக் காரணம் இந்தச் சுருள் அமைப்புதான்.

ஏன் வளைக்க வேண்டும்?

ஒருவேளை அந்த இடத்தில் அந்த வட்ட வடிவ வளைவு இல்லாமல், கம்பியை நேரடியாக ‘V’ வடிவிலோ அல்லது ‘L’ வடிவிலோ மடித்திருந்தால், ஓரிரு முறை ஊசியைப் பயன்படுத்திய உடனேயே அந்தக் கம்பி உடைந்து போயிருக்கும். காரணம், கூர்மையான வளைவுகளில் அழுத்தம் அதிகமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
'இலவசம்' என்று ஆசைப்பட்டு ஆபத்தை விலைக்கு வாங்காதீர்கள்... உங்களை வேவு பார்க்கும் அந்த 3 செயலிகள்!
Safety Pin

ஆனால் வட்டமாகச் சுருட்டி வளைக்கும்போது, நாம் கொடுக்கும் அழுத்தம் அந்தக் கம்பி முழுவதும் சமமாகப் பரவுகிறது. இதனால் ஊசி வளைந்து கொடுக்குமே தவிர உடையாது. இதுதான் அதன் நீண்ட உழைப்பிற்குக் காரணமாகும்.

logo
Kalki Online
kalkionline.com