பணம், பதவி இருந்தும் நிம்மதி இல்லையா? நிஜமான சந்தோஷம் இருக்குமிடம்!

Where true happiness resides
Happy woman
Published on

ருவருக்கு என்னதான் பணம், புகழ், பதவி இருந்தாலும் மகிழ்ச்சியில்லை என்றால் அத்தனையும் இருந்தும் பயனே இல்லை. எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், இன்ப துன்பங்கள் வாழ்க்கையில் வருகின்றன. அத்தனைக்கும் இடையில் மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் மகிழ்ச்சியான மனிதர்கள்தானா என்பதை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வாழ்க்கை என்பது ரோலர் கோஸ்டர் போல எதிர்பாராத திருப்பங்களையும் வளைவுகளையும் கொண்டது. நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியான மனிதர்கள் என்றால் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வீர்கள். எதிர்த்துப் போராட மாட்டீர்கள். மிகவும் கடினமான காலகட்டத்தில் கூட அதிலும் ஒரு நன்மையைத் தேடி மகிழ்வீர்கள்.

இதையும் படியுங்கள்:
தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் கூறும் மூன்று வகை நட்பு!
Where true happiness resides

இந்த நிமிடத்தில் வாழத் தெரிந்தவர்கள்: ‘போன வருடம் நான் எவ்வளவு எல்லாம் கஷ்டப்பட்டேன்’ என்று பழைய வாழ்க்கையை நினைத்து வேதனைப்படுவது, ‘இனி எதிர்காலம் எப்படி இருக்குமோ?’ என்று நினைத்து அச்சம் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடாமல், இப்போது இருக்கும் நிகழ்கால வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வது.

உறவுகளை மதிப்பது: நல்ல உறவுகளை நண்பர்களை வைத்திருப்பவர்கள் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ‘சந்தோஷம் என்பது எங்கோ வெளியிடத்தில் இல்லை. நம்மை போன்ற சக மனிதர்களிடையேதான் இருக்கிறது. பிடித்த நபர்களுடன் என் மேல் அன்பு வைத்திருப்பவர்களிடம் நான் தேவையான அளவு நேரம் செலவழிக்கிறேன்’ என்று இருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

நன்றி உணர்வு: எப்போதும் நன்றி உணர்வுடன் இருப்பது எதிர்மறை எண்ணங்களை விரட்டி அடிக்கிறது. நல்ல முடிவுகளை எடுக்கத் தூண்டுகிறது. மன ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. எப்போதும் சந்தோஷமாக வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஆன்லைன் ஷாப்பிங் போதையில் இருந்து மீள எளிய வழிகள்!
Where true happiness resides

உங்களிடமே மிகுந்த அன்புடன் இருப்பது; நாம் செய்யும் செயல்களில் ஏதாவது சிறிய தவறு ஏற்பட்டால் கூட தன்னைதானே மோசமாக திட்டிக்கொள்வது, தன்னைப் பற்றி வெறுப்புக் கொள்வது, இதெல்லாம் தன்னை நேசிக்கும் ஒரு நபர் செய்வதில்லை. பிறரிடம் அன்பாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக முக்கியம் தன்னிடமே ஒருவர் மிக மிக அன்பாக இருப்பது. அப்படி இருந்தால் மட்டுமே பிறரை நேசிக்க முடியும் சந்தோஷமாகவும் இருக்க முடியும்.

ஆரோக்கியத்தில் அக்கறை: சந்தோஷமாக இருக்கும் நபர் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார். அதற்காக தேகப்பயிற்சிகள் செய்வார். அதேபோல மன ஆரோக்கியத்திலும் அக்கறை கொள்வார். உடற்பயிற்சி ஒருவரை சந்தோஷமாக வைக்கிறது என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள்.

பிறருக்கு உதவுவதில் சந்தோஷம்: பிறரால் காயம்பட்டவர்கள், மற்றவரை காயப்படுத்துகிறார்கள். ஆனால், சந்தோஷமான மனதை உடைய மக்கள் பிறருக்கு உதவுகிறார்கள். பிறருக்கு எந்த எதிர்பார்ப்புமின்றி உதவும்போது எல்லை இல்லாத மகிழ்ச்சி உண்டாகும்.

எஸ்.விஜயலட்சுமி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com