உங்கள் வீட்டு குக்கர் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டுமா? இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்!

Cooker cooking
Cooker cooking
Published on

துவரை வெவ்வேறு பாத்திரங்களில் சமைத்து வந்த நீங்கள் முதன் முதலாக குக்கரில் சமைக்கப் போகிறீர்கள் என்றால் கீழ்க்கண்டவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

குக்கரில் சமைத்து முடித்தவுடன் குக்கரின் கேஸ்கட், விசில் போன்றவற்றை தனித்தனியாக கழுவி துடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

குக்கரின் உள்தட்டு வைத்து சமைக்கும்போது உப்பு கறை போல் ஏற்படும். அதைத் தவிர்க்க புளித்துண்டு அல்லது பிழிந்த எலுமிச்சம் பழத் தோல் போட்டு சமைத்தால் கறை பிடிக்காது.

குக்கரின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது குக்கரின் முக்கால் பகுதிக்கு மட்டும் அரிசி மற்றும் காய்கறிகளை போட்டு சமைக்க வேண்டும்.

சமைப்பதற்கு குக்கரை வைத்தவுடன் உடனே வெயிட்டை போடக்கூடாது. குக்கரில் உள்ள வென்ட் பைப் மூலம் நீராவி வந்தவுடன் வெயிட்டை போட வேண்டும். நீராவி வரவில்லை என்றால் அடுப்பை சிறிய அளவில் வைத்துவிட்டு குக்கர் மூடியை எடுத்து வென்ட் பைப் வழியாக பொருட்கள் அடைத்து இருந்தால் அவற்றை சுத்தம் செய்துவிட்டு மறுபடியும் மூடி நீராவி வந்தவுடன் வெயிட்டை போட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அர்த்தமுள்ள ஆன்றோர் சொல்மொழியும் ஆய்வு முடிவு உண்மைகளும்!
Cooker cooking

குக்கரை தரையில் வைத்து தேய்த்து இழுக்கக் கூடாது. அதேபோல், அடிக்கடி சேப்டி வால்வை மாற்றினால் எரிபொருள் செலவு குறையும்.

குக்கரின் கைப்பிடி உடைந்து விட்டால் உடனே போட வேண்டும். ஏனென்றால், குக்கரில் பொருட்களை வைத்து மூடுவதற்கும் திறப்பதற்கும் கஷ்டமாக இருக்கும். அதோடு, அழுத்தத்தில் இருக்கும் நீராவி நம் உடலில் படுவதற்கும் வழியாக அமைந்து விடும்.

கேஸ்கட்டை சூட்டோடு அப்படியே தண்ணீரில் போட்டால் இறுகி விடும். அதிக நாட்கள் உழைக்காது. சிறிது நேரம் கழித்து கழுவி உரிய இடத்தில் மாட்டி வைக்க வேண்டும். இதனால் நீண்ட நாட்களுக்கு உழைக்கும். குக்கர் மூடியுடன் கேஸ்கட்டை எடுக்காமல் வைக்கக் கூடாது.

குக்கரில் இருக்கும் கைப்பிடிக்கு மாதம் ஒரு முறை எண்ணெய் விட வேண்டும். அப்போதுதான் துருப்பிடிக்காமல் இருக்கும்.

குக்கரின் அடிப்பகுதியை ஸ்க்ரப் கொண்டு தேய்க்காமல் மென்மையான ஸ்பான்ச் கொண்டு கழுவ வேண்டும்.

குக்கரின் வெயிட்டை ஒவ்வொரு முறையும் தூசி மற்றும் அடைப்புகள் இல்லாமல் இருக்கிறதா எனப் பார்த்த பிறகு பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
திருமண விருந்து பசியைப் போக்கவா? பகட்டைக் காட்டவா?
Cooker cooking

குக்கரில் கறை படிந்திருந்தால் எலுமிச்சை தோல் அல்லது வினிகர் கொஞ்சம் போட்டு கழுவினால் கருப்பு நிறம் மாறிவிடும்.

கேஸ்கட் சரியாகப் பொருந்தாமல் ‘தொள தொள’ என்று இருந்தால் ஃப்ரிட்ஜில் உள்ள பிரீசரில் சில மணி நேரம் வைத்து எடுத்து பிறகு பயன்படுத்தலாம்.

குக்கரை பயன்படுத்தும்போது குழாயின் மீது  வெயிட் வைத்த பின்பு கைப்பிடியை திருப்பக் கூடாது. வெயிட் வால்வை கீழே போடக் கூடாது.

அடிப்பகுதியில் ஏற்படும் கரியைப் போக்க அதைக் கவிழ்த்து போட்டு தேய்க்க கூடாது. அப்படிச் செய்தால் மேல்பகுதி தரையில் உராய்ந்து குக்கர் பழுதாகிவிடும்.

குக்கரில் அரிசி, பருப்பு, காய்கறிகள் வைக்கும்போது மூடியின் மேல் பாகத்தை தொடும்படி வைக்கக் கூடாது. அப்படி வைத்தல் மூடியின் நடுவில் உள்ள துளையில் அடைத்துக் கொண்டு வெயிட் வால்வு சரியான முறையில் நீராவியை வெளியேற்ற இயலாது போய்விடும்.

குக்கரை அடுப்பில் வைத்து விட்டு வெளியில் எங்கும் போகக்கூடாது. வீட்டிலேயே வேறு வேலை செய்து கொண்டிருக்கலாம்.

குக்கரை எண்ணெய் விட்டு வதக்குவதற்கோ கிளறுவதற்கோ பயன்படுத்தக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com