ஜங்க் ஃபுட் குழந்தைகளை இப்படியெல்லாம் பாதிக்குமா?

junk food
junk food
Published on

உங்கள் குழந்தைகளும் ஜங்க் ஃபுட் சாப்பிட அதிகமாக அடம் பிடிப்பவர்களா? அப்ப இந்த கட்டுரை உங்களுக்குத்தான்.. குழந்தைகள் அடம்பிடிக்கிறது, ஆசைப்படுகிறது என்றெல்லாம் மனம் இரங்கி ஒருமுறை தான் என்று நீங்கள் வாங்கி கொடுக்கும் ஜங்க் ஃபுட், பேராபத்தை விளைவிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் குழந்தைகள் ஜங்க் ஃபுட்டிற்காக அடம் பிடிக்கிறார்கள் என்றால், முதலில் குறை சொல்ல வேண்டியது உங்களைத்தான். குழந்தைகள் என்றால் அடம்பிடிக்கத்தான் செய்வார்கள். அவர்களை சமாளிக்க வேண்டியது பெற்றோரர்களாகிய நீங்கள்தான். அதற்காக அவர்களிடம் கோபத்தை காண்பித்து, அவர்கள் கேட்பதை மறுப்பது நியாயம் அன்று.....

அதேபோல், அதிக பாசத்தை காண்பிக்கிறோம் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கி கொடுக்க சொல்லவில்லை. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எந்த விதத்திலும் முகம் சுழித்துவிட கூடாது என்று அவர்கள் சொல்வத்திற்கெல்லாம் தலையாட்டுவதுண்டு.... நீங்கள் அவ்வாறு செய்வது  குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. குழந்தைகளிடம் அவர்கள் அடம்பிடிக்கும் போது உங்கள் பாசத்தை (வாங்கி கொடுப்பதில்) காட்டாமல், அவர்களை செல்லமாக கொஞ்சி, தவிர்க்க வேண்டிய விஷயங்களை எடுத்துக் கூறுங்கள். அவர்களின் மன நிலையை மாற்றும்போது கோபப்படாமல், அந்த இடத்தில் உங்கள் பாசத்தை காட்டி அவர்களுக்கு புரிய வையுங்கள்.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்களே! ஆரம்பத்திலேயே இதை கவனிங்க! இல்லனா வருத்தப்படுவீங்க!
junk food

ஏனெனில், ஜங்க் ஃபுட்டான பீசா, பர்கர், நூடுல்ஸ் போன்றவை எல்லாம் சாப்பிட அருமையாகத்தான் இருக்கும். ஆனால், அதை சாப்பிடுவதால், பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பொதுவாகவே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாகவே இருக்கும் என்பதால், அவர்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது பாதிப்புகள் உடனே தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

  • அதிக பதப்படுத்தப்பட்ட ஜங்க் ஃபுட் உணவுகளை உட்கொள்வதால், பெரியவர்களை விட குழந்தைகள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

  • குழந்தைகள் ஜங்க் ஃபுட் எடுத்துக் கொள்வதால்,  உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் இளம் வயது நீரிழிவு நோய் போன்ற பாதிப்புகள் சிறிய வயதிலே ஏற்படலாம்.

  • அதிகப்படியான சர்க்கரைகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த ஜங்க் ஃபுட் உணவுகளை குழந்தைகள் உட்கொள்வதால், குழந்தைகளுக்கு கல்லீரல் அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

  • மேலும், பிற்காலத்தில் இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் சில புற்றுநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

  • அதோடு, குழந்தைகளின் பார்வையில் குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளும் ஏற்படும் என கூறப்படுகிறது.

பெற்றோர்களே! நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சத்தான காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை தான் கொடுக்க வேண்டும். உடனே நீங்கள், 'அவர்கள் அதை சாப்பிட மாட்டார்களே' என்று மனதிற்குள் குமுறுவது புரிகிறது .... குழந்தைகள் கண்டிப்பாக சாப்பிட மாட்டார்கள் தான். தற்போதுதான் சத்தான உணவுகளை வைத்தே  ஜங்க் ஃபுட் போன்ற சுவைக்கு உணவுகளை தயாரிக்க ரெசிபிஸ் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. நீங்கள் ஆர்டர் போட்டு வாங்கிவிடலாம் என்று நினைக்காமல், உங்கள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, நீங்களே செஃப்பாக மாறலாம் என்கிறேன்........

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com