ஃபிரிட்ஜ்ல ஸ்வீட் வச்சா சுவை போயிடுதா? இந்த 1 தப்பை மட்டும் பண்ணாதீங்க!

sweets
sweets
Published on

பண்டிகை நேரம் வந்துட்டா போதும், நம்ம வீட்ல ஸ்வீட் பாக்ஸ் குவிஞ்சிடும். வந்த சந்தோஷத்துல ஒன்னு ரெண்டு சாப்பிட்டுட்டு, மிச்சத்தை அப்படியே அந்த கடை பெட்டியோட தூக்கி ஃபிரிட்ஜுக்குள்ள வச்சிடுவோம். ஆனா, அடுத்த நாள் எடுத்துப் பார்த்தா, சாஃப்டா இருந்த மைசூர்பாகு கல்லு மாதிரி ஆகிடும், பாதுஷாவோட சுவையே போயிருக்கும். இதுக்குக் காரணம் ஃபிரிட்ஜ் இல்லை, நாம அதைச் சேமிக்கிற முறைதான். இனிப்புகளை அதோட சுவை, மணம், மிருதுவான தன்மை மாறாம எப்படிப் பாதுகாக்கிறதுனு இந்தப் பதிவுல பார்ப்போம்.

ஏன் சுவை மாறுகிறது?

நாம கடையில வாங்குற அந்த அட்டைப் பெட்டிகள் பார்க்க அழகா இருக்கலாம், ஆனா அது காத்து புகாத டப்பா கிடையாது. ஃபிரிட்ஜுக்குள் இருக்கிற குளிர்ந்த, வறண்ட காத்து, அந்த பெட்டிக்குள் சுலபமா நுழைஞ்சிடும். அது சும்மா நுழையாது, ஸ்வீட்ல இருக்கிற ஈரப்பதத்தை மொத்தமா உறிஞ்சி எடுத்துடும். இதனாலதான் ஸ்வீட்ஸ் எல்லாம் காய்ந்து போய், சுவையே இல்லாம சக்கையா மாறிடுது. இனிமேல் இந்தத் தவறைச் செய்யாதீங்க.

சரியான சேமிப்பு முறை

நல்ல தரமான, காத்து புகாத டப்பாவை எடுத்துக்கோங்க. அதுல ஸ்வீட்டை அடுக்கறதுக்கு முன்னாடி, அந்த டப்பாவுக்குள்ள ஒரு 'பட்டர் பேப்பர்' அல்லது 'அலுமினியம் ஃபாயில்' பேப்பரை விரிச்சிடுங்க. அதுக்கு மேல இனிப்புகளை அடுக்குங்க. இன்னும் ஒருபடி மேல போய், இனிப்புக்கு மேலயும் ஒரு லேயர் பட்டர் பேப்பர் போட்டு மூடிட்டா, ஈரப்பதம் வெளியேறவே வாய்ப்பில்லை. இந்த மாதிரி செய்யும்போது, ஸ்வீட்ஸ் 8-ல இருந்து 10 நாள் வரைக்கும் ஃப்ரெஷ்ஷா இருக்கும்.

ஒரு சின்ன டிப்ஸ்: டப்பாவை மூடும்போது, மூடியை லேசா அழுத்தி, ஒரு ஓரத்துல லேசா திறந்துவிட்டு பிறகு இறுக்கமா மூடுங்க. இப்படிச் செஞ்சா உள்ளே இருக்கிற தேவையில்லாத காத்து வெளியேறி, இனிப்புகள் இன்னும் பல நாட்களுக்குப் புத்துணர்ச்சியா இருக்கும்.

எல்லாவற்றையும் ஒன்றாக வைக்காதீர்கள்!

நாம செய்யுற இன்னொரு பெரிய தப்பு, எல்லா ஸ்வீட்டையும் ஒரே டப்பாவுல போட்டு வைக்கிறது. காய்ந்த இனிப்புகளான மைசூர்பாகு, சோன்பப்டி போன்றவற்றையும், பாகு நிறைந்த ரஸ்குல்லா, குலாப் ஜாமூன் போன்றவற்றையும் தயவு செஞ்சு ஒண்ணா வைக்காதீங்க. அப்படி வச்சா, ஜாமூனோட ஈரப்பதம் மைசூர்பாகுல இறங்கி, அதை சொதசொதன்னு ஆக்கிடும். ரெண்டுத்தோட மணமும் ஒண்ணோட ஒண்ணு கலந்து, மொத்த சுவையும் கெட்டுப்போகும்.

இதையும் படியுங்கள்:
விதவிதமான ஜாமூன் வகைகள்: வீட்டிலேயே சுலபமாகத் தயாரிக்கும் முறை!
sweets

ரஸ்குல்லா, ஜாமூன் போன்றவற்றை, அது விற்கப்பட்ட அந்த சர்க்கரைப் பாகுடனேயே ஒரு தனி டப்பாவில் போட்டு வைங்க. ஏன், அதை அப்படியே ஃப்ரீசர்ல கூட வைக்கலாம், ரொம்ப நாள் நல்லா இருக்கும்.

இந்த சின்னச் சின்ன விஷயங்களைக் கவனிச்சா போதும். இனிமே, உங்க வீட்டு இனிப்புகளை இந்த மாதிரி முறையா சேமிச்சு வைங்க. எப்போ எடுத்துச் சாப்பிட்டாலும், கடையில் இருந்து அப்போதான் வாங்கிட்டு வந்த மாதிரி ஃப்ரெஷ்ஷா, அதே சுவையோட இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com