
ஆகஸ்ட் நிறைவாகி செப்டம்பர் பிறக்க உள்ளது. இந்நிலையில் செப்டம்பர் முதல்வாரம் தொடங்கி பல்வேறு நிலைகளில் மாணவர்களுக்கு காலாண்டு தோ்வு நடைபெற உள்ளது.
பொதுவாகவே அனைவரும் தோ்ச்சி என்ற மனோநிலையால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருவதே நிஜம். சில தனியாா் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒப்புவிக்கும் மனோநிலலையே கடைபிடிக்கும் வழிவகைகள் தொடர்வதும் அபாயம்தான். அதோடு பிள்ளைகளுக்கு கற்றல், கேட்டல் ,திறன் இருப்பது மிக மிக அவசியம்.
இந்நிலையில் மாணவர்களில் பலருக்கு தனது பெயரையே கூட ஆங்கிலத்தில் இலக்கணப் பிழையாகவே, எழுதும் நிலை தொடர்கிறது. இந்நிலை மாறவேண்டும். அரசுபள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், போதுமான ஆசிாியர்கள் எண்ணிக்கையும் குறைவு.
மேலும் காலாண்டு தோ்வுதானே என்ற அலட்சியம் பிள்ளைகளுக்கு வராத நிலையில் பெற்றோா்களுக்கான பொறுப்பு அதிகமாக தேவைப்படும் நேரமாக கருதலாம்.
எனவே பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளிடம் தோ்வு பயம் இல்லாதவாறும் தோ்வில் அதிகமதிப்பெண் பெற்றால் இறுதித்தோ்விலும் அதிக மாா்க் எடுக்கலாம் என்ற ஊக்கத்தை அதிகப்படுத்துவதோடு, தொியாத பாடங்களில் எழக்கூடிய சந்தேகங்களை நாமும் சொல்லிக்கொடுக்கலாம். அது இயலாத நிலையில் டியூசனுக்கு அனுப்பலாம்.
அன்று நடத்திய பாடங்களில் பிள்ளைகளின் திறனை கேட்டு தொிந்துகொள்ளலாம். படிப்பதற்கென பிள்ளைகளுக்கு தனி அறை ஒதுக்கிக்கொடுப்பதும் நல்ல விஷயமே அவர்களை பரிட்சைக்குப் படி படி, என தொல்லை தராமல் பாா்த்துக்கொள்வதும் அனுகூலமானதே!
வேளா வேளைக்கு சரிவிகித உணவு விஷயத்தில் அக்கறை காட்டுவதும் ஆரோக்கியமான விஷயம்தான். மாலையில் அவர்களுக்கு உடற்பயிற்சி விளையாட்டு, யோகா, பயிற்சிகள் இருந்தாலும் அதைத் தடுக்கவேண்டாம். எளிதில் சீரணம் ஆகக்கூடிய உணவுகளை இரவு நேரங்களில் வழங்குவதும் சிறப்பானதே!
நாமும் இந்த தோ்வு நாட்களில் தெருவில் நடக்கும் அக்கம் பக்கத்து வீடுகளின், மகளிா் மாநாட்டிற்கு லீவு கொடுக்கலாமே!
அதைவிட குறிப்பாய் மெகாதொடர்களுக்கு சற்று ஓய்வு கொடுப்பதும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்த சூழலில் பரிட்டைக்கு படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகள் மத்தியில் கணவன் மனைவி குடும்ப விஷயங்கள், கடன் விவகாரம், அலுவலகப் பிரச்னை, செல்போனில் மணிக்கணக்கான பேச்சுகள், இவைகளுக்கு சென்சாா் வைப்பதும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
இரவு நெடுநேரம் படிக்க வைக்காமல் இருப்பதும், விடியற்காலை ஐந்து மணிக்கு எழுப்பி படிக்க வைப்பதும் பயன் கொடுக்கும். அனைவரும் பாஸ் நமக்கு கவலையில்லை என்ற எண்ணம் பிள்ளைகளுக்கு வரவேகூடாது.
அதே நேரம் அவர்களுக்கு பரிட்சை பயம் ஏற்படுத்தும் நிலையில் விஷயத்தை பூதாகரமாகவும் மாற்றக்கூடாத நிலையில் அவர்களின் பொது அறிவு, மற்றும் பாடங்களைப் புாிந்துகொள்ளும் வகையில் ரிலாக்ஸாக படிக்கச்சொல்வதே நல்லது. பிள்ளைகள் படிப்பு விஷயம் பெற்றோா்கள் கையில்தான் இருக்கிறது. சரிதான அன்பர்களே!