இவற்றை மறந்தும் கூட குக்கரில் சமைத்து விடாதீர்கள்!

Cooker
Cooker

இப்போது அனைவரின் சமையலறையிலும் கட்டாயம் இருக்கும் ஒரே பொருள் குக்கர். வேகவைப்பதிலிருந்து வறுப்பது வரை அனைத்து வசதிகளும் கொண்டக் குக்கர்கள் இப்போது வந்துவிட்டன. ஆனால் அனைத்திற்கும் குக்கர் பயன்படுத்தலாமா? பொதுவாக சிலர் சாதத்தையே குக்கரில் வைத்து செய்யக்கூடாது என்றும் அது உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்றும் கூறுவார்கள். இந்தப் பதிவில் பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாத 8 உணவுப்பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

பாஸ்தா:

பாஸ்தாவை அதிகமாக சமைக்கும்போது மிருதுவான நிலைக்கு விரைவாக மாறிவிடும். பிற்பாடு அது குழைந்துவிடும். ஆகையால் பாஸ்தாவைத் கடாயில் சமைப்பதுச் சிறந்தது. கடாயில் சுடுநீரில் சமைத்து வடிக்கட்டிக் கொள்ளலாம்.

பால் பொருட்கள்:

பால் சார்ந்த உணவுகளையும் சாஸ்களையும் குக்கரில் சமைக்கும்போது அவற்றின் உண்மையான சுவையையும் சாரத்தையும் இழந்துவிடும். பால் சார்ந்த உணவுப் பொருட்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும்போது அதன் சுவையையும் மற்றும் அமைப்பையும் இழந்துவிடும்.

பழங்கள்:

பொதுவாகப் பழங்கள் என்றாலே மென்மையானவைதான். பழங்கள் சார்ந்த இனிப்புகள் அல்லது உணவுகள் செய்யும்போது குக்கரில் செய்வதைத் தவிர்த்துப் பேக்கிங் அல்லது வறுத்தல் முறையில் சமைப்பது நல்லது.

வறுத்த உணவுகள்:

பிரஷர் குக்கரை நீராவியில் சமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குக்கரைத் திறந்துக்கொண்டே வறுத்து சமைப்பது உணவையே கெடுத்துவிடும். ஆகையால் மொறுமொறுப்பான உணவுகளை சமைக்கும்போது குக்கரில் சமைக்க வேண்டாம்.

சூப்கள்:

தடிமனான க்ரீம் அடிப்படையிலான சூப்கள் செய்வதைத் தவிர்க்கவும். நீங்கள் பால் பொருட்களுடன் சமைக்கும்போது அது அதிக வெப்பநிலையில் தயிராகக் கூட மாறிவிடும். மேலும் எந்த சமையல் முறையாக இருந்தாலும் இறுதியில் மட்டுமே பாலை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பச்சை இலைக் காய்கறிகள்:

கீரை அல்லது முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைக் குக்கரில் சமைப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் அதிக வெப்பம் அந்த உணவுப் பொருட்கள் மெலிதாகப் பிளவுபடக் காரணமாகிவிடும். ஆகையால் அவற்றைக் குக்கரில் சமைப்பதைத் தவிர்க்கவும்.

இதையும் படியுங்கள்:
ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு.. ஏன் தெரியுமா?
Cooker

கடல் உணவுகள்:

பொதுவாக மென்மையான உணவுகளை குக்கரில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் இறால், மீன், மத்தி மீன் ஆகியவற்றைத் தவிர்க்கவும். இவை குழைந்து உணவையே கெடுத்துவிடும்.

பேக்கிங் உணவுகள்:

இப்போதெல்லாம் கேக் செய்கிறேன் என்றுக்கூறி குக்கரில்தான் பலர் சமைக்கிறார்கள். ஆனால் அது தவறு. கேக்குகள் மற்றும் டிலைட்களுக்கானச் சரியான அமைப்பையும் சுவையையும் கண்டிப்பாக குக்கரில் கொண்டு வர முடியாது. அது மிகவும் கடினம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com