ட்ரீம் கேட்சர்கள்: கனவுகளின் பாதுகாவலர்கள் பற்றிய ரகசியம்! 

Dream catcher
Dream catcher
Published on

ட்ரீம் கேட்சர்கள் பார்ப்பதற்கு அழகாக மட்டுமல்ல, அவை ஆன்மீக ரீதியாகவும் மிகவும் சக்தி வாய்ந்தவை என்று பல கலாச்சாரங்களில் நம்பப்படுகிறது. குறிப்பாக பூர்வீக அமெரிக்க கலாச்சாரத்தில் ட்ரீம் கேட்சர்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. ட்ரீம் கேட்சர்கள் கனவுகளை வடிகட்டி, கெட்ட கனவுகளை விரட்டி, நல்ல கனவுகளை மட்டும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் ஆன்மீக பாதுகாவலர்களாக நம்பப்படுகிறார்கள். 

ட்ரீம் கேட்சர்கள் முதலில் ஒஜிப்வே (Ojibwe) பழங்குடியினரால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவர்கள் ட்ரீம் கேட்சர்களை தாயத்து போல தொட்டில் கட்டில்களில் தொங்க விடுவார்கள். ட்ரீம் கேட்சர் சிலந்தி வலையை போன்று வட்ட வடிவத்தில் இருக்கும், நடுவில் ஒரு ஓட்டை இருக்கும். கெட்ட கனவுகள் வலையில் சிக்கி விடியற்காலையில் சூரிய ஒளியில் கரைந்துவிடும் என்றும், நல்ல கனவுகள் நடுவில் உள்ள ஓட்டை வழியாக இறங்கி தூங்குபவர்களை சென்றடையும் என்றும் அவர்கள் நம்பினார்கள். ட்ரீம் கேட்சர் தூங்கும் போது நம்மை பாதுகாக்கும் ஒரு ஆன்மீக கவசம் என்பது அவர்களின் நம்பிக்கை.

ட்ரீம் கேட்சர்களில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு தனி அர்த்தம் உண்டு. வண்ணங்கள் ட்ரீம் கேட்சரின் ஆன்மீக சக்தியை மேலும் அதிகரிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
சிவப்பு நிற ரயில்களுக்கும் நீல நிற ரயில்களுக்கும் என்ன வித்தியாசம்?
Dream catcher
  • நீலம்: நீல நிறம் அமைதியையும், பாதுகாப்பையும் குறிக்கிறது. இது நல்லிணக்கம், அமைதி மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை உணர்த்தும். நீல நிற ட்ரீம் கேட்சர் மன அமைதியை தருவதாகவும், பாதுகாப்பான தூக்கத்தை உறுதி செய்வதாகவும் நம்பப்படுகிறது.

  • வெள்ளை: வெள்ளை நிறம் தூய்மை மற்றும் நேர்மையை குறிக்கிறது. இது உண்மை, ஒளி மற்றும் நல்ல தொடக்கத்தை அடையாளப்படுத்துகிறது. வெள்ளை நிற ட்ரீம் கேட்சர் கனவுகளை சுத்தப்படுத்தி, தெளிவான மற்றும் நேர்மறையான எண்ணங்களை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

  • சிவப்பு: சிவப்பு நிறம் ஆற்றல், தைரியம் மற்றும் வலிமையை குறிக்கிறது. இது சக்தி, வீரம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை உணர்த்துகிறது. சிவப்பு நிற ட்ரீம் கேட்சர் பயங்கர கனவுகளை விரட்டி, தைரியத்தையும், மன உறுதியையும் தருவதாக நம்பப்படுகிறது.

  • பச்சை: பச்சை நிறம் இயற்கை, வளர்ச்சி மற்றும் குணப்படுத்துதலை குறிக்கிறது. இது ஆரோக்கியம், செழிப்பு மற்றும் புது வாழ்வை அடையாளப்படுத்துகிறது. பச்சை நிற ட்ரீம் கேட்சர் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக நம்பப்படுகிறது.

  • மஞ்சள்: மஞ்சள் நிறம் மகிழ்ச்சி, அறிவு மற்றும் ஆற்றலை குறிக்கிறது. இது நம்பிக்கை, புத்திசாலித்தனம் மற்றும் நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும். மஞ்சள் நிற ட்ரீம் கேட்சர் மனதை தெளிவுபடுத்தி, நல்ல முடிவுகளை எடுக்க உதவுவதாக நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மேத்தி ஊறுகாய் மற்றும் பத்துவா பரோட்டா: வீட்டில் எப்படி தயாரிப்பது?
Dream catcher

வீட்டில் ட்ரீம் கேட்சர் தொங்க விடுவது மன அமைதியை தருவதோடு மட்டுமல்லாமல், கெட்ட சக்திகளிடமிருந்து நம்மையும், நம் கனவுகளையும் பாதுகாக்கும் என்பது பலரின் நம்பிக்கை. வண்ணங்களின் ரகசியத்தையும், அதன் ஆன்மீக சக்தியையும் புரிந்து கொண்டு ட்ரீம் கேட்சர்களை பயன்படுத்துவது, நம் வாழ்க்கையில் மேலும் நேர்மறை எண்ணங்களையும், அமைதியையும் கொண்டு வர உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com