பீதாம்பரி பவுடர் இனிமேல் வேண்டாம்... செம்பு பாத்திரங்கள் தங்கம் போல ஜொலிக்கும்!

வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களை வைத்து கறுத்துப் போன செம்பு பாத்திரங்கள் புத்தம் புதிதாகப் பளபளக்கச் செய்யும் அட்டகாசமான 5 ரகசிய குறிப்புகள்.
Copper vessels cleaning செம்பு பாத்திரங்கள்
Copper vessels cleaning செம்பு பாத்திரங்கள்AI Image
Updated on

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குத் திரும்ப நினைக்கும் பலரும் இப்போது மீண்டும் பாரம்பரியப் பொருட்களையே தேடிச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அருமையான பொருள் தான் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தாமிரம். பழங்காலம் முதலே நமது வீடுகளில் இந்த பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஒரு சிறப்பான வழக்கமாக இருந்து வருகிறது. இரவில் இதில் தண்ணீரை ஊற்றி வைத்துவிட்டு, மறுநாள் காலையில் குடிப்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மாபெரும் நன்மைகளை அள்ளித் தரும். 

ஆனால், இதைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது காற்று மற்றும் ஈரப்பதம் காரணமாக அவை மிக விரைவாகக் கருத்துப் போய்விடும். அந்தப் பழைய பளபளப்பை மீண்டும் கொண்டு வரப் பலரும் கடைகளில் விற்கும் விலையுயர்ந்த ரசாயனப் பொருட்களை வாங்கித் தேய்த்துச் சிரமப்படுவார்கள். ஆனால் நமது சமையலறையில் உள்ள சில சாதாரணப் பொருட்களை வைத்தே இதை புதிதாக மாற்ற முடியும். 

எலுமிச்சை மற்றும் உப்பால் மிளிரும் செம்பு பாத்திரங்கள்!

கருமையைப் போக்குவதில் எலுமிச்சைக்கு எப்போதுமே ஒரு தனி இடமுண்டு. இதில் உள்ள இயற்கையான சிட்ரிக் அமிலம் கறைகளை மிக எளிதாக உடைத்தெறியும். ஒரு பாதியாக நறுக்கிய எலுமிச்சைப் பழத்தின் மீது சிறிதளவு கல் உப்பை தூவி, அதைக் கொண்டு நேரடியாகப் பாத்திரத்தின் மீது மென்மையாகத் தேய்க்க வேண்டும். சில நிமிடங்களிலேயே அந்தப் பிடிவாதமான அழுக்குகள் அனைத்தும் மாயமாக மறைந்துவிடும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவினால், அது கடையில் புதிதாக வாங்கியது போலத் தகதகவென மின்னும்.

புளி மூலம் பளபளக்கும் செம்பு பாத்திரங்கள்!

நமது பாட்டிகள் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்படும் ஒரு மாஸ் ட்ரிக் தான் இது. சமையலுக்குப் பயன்படுத்தும் புளியை கொஞ்சமாக எடுத்துத் தண்ணீரில் நன்கு ஊறவைத்துக் கொள்ள வேண்டும். புளியில் உள்ள இயற்கையான டார்டாரிக் அமிலம் உலோகங்களில் படியும் துரு மற்றும் கறைகளை உடனடியாக நீக்கும் ஆற்றல் கொண்டது. 

Copper vessels cleaning செம்பு பாத்திரங்கள்
Copper vessels cleaning செம்பு பாத்திரங்கள்

அந்தப் புளிக் கரைசலை ஒரு பேஸ்ட் போல மாற்றி, பாத்திரத்தின் எல்லாப் பக்கங்களிலும் நன்றாகத் தடவி ஊறவிட வேண்டும். அரை மணி நேரம் கழித்து லேசாகத் தேய்த்துக் கழுவினால், பல மாதங்களாகப் படிந்திருந்த கருமை கூடப் பஞ்சு போலப் பறந்துவிடும். இது எந்தவிதச் செலவும் இல்லாத ஒரு சூப்பரான ஐடியாவாகும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் நிலத்திற்கு பட்டா, சிட்டா இருக்கிறதா? இல்லையென்றால் என்னவாகும் தெரியுமா?
Copper vessels cleaning செம்பு பாத்திரங்கள்

வினிகர் மற்றும் சோடா கலவையால் தூய்மையாகும் செம்பு பாத்திரங்கள்!

மிகவும் அடர்த்தியான அழுக்குகள் மற்றும் பச்சை நிறக் கறைகள் படிந்திருந்தால், இந்த வழிமுறை உங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் ஆகும். பேக்கிங் சோடா மற்றும் வினிகர் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கலந்தால் ஒரு நுரை பொங்கும் பேஸ்ட் கிடைக்கும். அந்தப் கலவையை எடுத்துப் பாத்திரத்தின் மீது பூசி ஒரு மென்மையான துணியைக் கொண்டு லேசாகத் துடைத்து எடுக்க வேண்டும். கடினமான நாரைப் பயன்படுத்திக் கீறல் விழாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.

தக்காளி மூலம் புதுப்பிக்கப்படும் செம்பு பாத்திரங்கள்!

பழுத்த தக்காளி வெறும் குழம்புக்குச் சுவை கூட்ட மட்டும் பயன்படுவது கிடையாது. இதில் உள்ள லேசான அமிலத்தன்மை பாத்திரங்களில் உள்ள கருமையை நீக்கப் பெரிதும் உதவுகிறது. தக்காளியை நன்றாக அரைத்து அந்தச் சாற்றைப் பாத்திரத்தின் மீது பூசி சிறிது நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். பிறகுத் தண்ணீரால் அலசினால், மங்கிப்போன பளபளப்பு மீண்டும் மிக அழகாகத் திரும்பி வந்துவிடும். இதோடு சிறிது மாவு, வினிகர் மற்றும் உப்பு கலந்த கலவையைப் பயன்படுத்தினாலும் அட்டகாசமான ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பட்ஜெட் விலையில் நீங்கள் வாங்கக்கூடிய சிறந்த 5 மின்விசிறிகள்!
Copper vessels cleaning செம்பு பாத்திரங்கள்

கறுத்துப் போன பாத்திரங்களைச் சுத்தம் செய்வது என்பது இனி ஒரு கஷ்டமான வேலையே கிடையாது. கடைகளில் விற்கும் ரசாயனப் பவுடர்களைத் தவிர்த்துவிட்டு, இயற்கையான இந்த எளிய வீட்டு வைத்தியங்களை நீங்கள் தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம். 

logo
Kalki Online
kalkionline.com