கல்விக்கு செய்தித்தாள் போதும், பணத்துக்கு அன்றாடம் பிழைப்பில் கவனம் தேவைப்படுகிறது, வீரத்துக்கு பொறுமை தேவைப்படுகிறது. கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் சேரும்போது நற்குணம் கிடைக்க துணைபுரிகிறது. இதற்கு ஓரளவு கல்வி, ஓரளவு செல்வம், ஓரளவு வீரம் இருந்தால் போதுமானது.
இது ஒன்றை வைத்துதான் மக்கள்தம்மை செம்மைப்படுத்தி கொள்கிறார்கள். இதுதான் அழகானது, மென்மையானது, சந்தோஷமானது. அதிகக் கல்வி, அதிக பணம், அதிக வீரமானது சில சமயம் பிரச்னைகளை உருவாக்கி விடுகின்றன. உருவான பிரச்னைகள் நிறுத்தப்பட வேண்டும். இல்லை என்றால் அந்த பிரச்னை பல பிரச்னைகளுக்கு வித்திட்டுக்கொண்டே இருக்கும்.
உழைப்பு என்பது மூன்றையும் அறிவுக் கட்டத்துக்கு கொண்டு செல்லும். ஆனால், மறுபடியும் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு பிறப்பாகவும் உருவாகின்றன. உழைப்பினால் வரும் வருமானம் கல்விக்காகவோ, அது சம்பந்தமான வேலைக்காகவோ அல்லது வேறு வேலைக்காகவோ இருக்கலாம். இந்த உழைப்பானது வீட்டு வேலை, இன்னும் நாட்டை காக்கும் வேலை, தோட்ட வேலை என்று எவ்வளவோ கூறலாம். பயிற்சி இல்லாது எந்த வேலையும் மிகவும் கடினமானதேயாகும்.
மென்மையானது கல்வியால், செல்வத்தால், வீரத்தால் பாதுகாக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட சமயம் வரும்போது செல்வம் பாதுகாக்கப்படாவிட்டால் அல்லது மறுபடியும் உருவாக்கத் தெரியாவிட்டால், உழைப்பு இல்லாவிட்டால் செல்வம் மறைகிறது. கல்வியும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் பக்குவப்பட்ட அந்தந்தத் தொழிலில் பயிற்சி எடுக்காவிட்டால் அதுவும் அதன் மென்மையை இழக்க நேர்கிறது. வீரம் அதன் மென்மையை பாதுகாக்க பாதுகாப்பையும், செல்வத்தையும் தேடுகின்றது. கிடைக்காவிடில் மென்மை அகன்று போய் விடுகிறது. எனவே, மூன்றுக்கும் தேவைப்படுவது உழைப்பு ஆகும்.
கல்வி என்பது துணிவுடையது, சபையில் ஏற்புடையது, மேடையில் பேசச் செய்வது, பிரச்னைகளை சமாளிக்கத் தெரிந்தது, யோசனைகளைக் கொடுப்பது, சட்டத்தை தெரியவைப்பது, செய் அல்லது செய்யாதே என்று உணர்த்துவது, சாதாரண சந்தேகங்களைத் தீர்ப்பது, வளமையைக் கொடுப்பது அடக்கத்தையும், தேவையான துணிவையும் கொடுக்கின்றது. பேச வேண்டியதை மட்டும் பேசும். எல்லோரும் சொல்வதை ஏற்பதில்லை.
இந்தக் கல்வியானது கத்தியை காட்டினால் கதி கலங்கும், பணமும் அதனை வைத்து பகட்டு காட்டி பல பிரச்னைகளை தீர்க்கின்றது. இந்த கல்வி, செல்வம், வீரம் மூன்றும் ஒருவரை ஒருவர் பெற்றுக்கொள்ள நிறைய விட்டுக்கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். எத்தனையோ வருட அனுபவத்திற்குப் பின்தான் மனிதனுக்குக் கல்வியின் பலமும் மதிப்பும் தெரிகின்றது.
மக்கள் எதில் வல்லவர்களாக இருந்தாலும் தனக்குப் பிடிக்காத விஷயங்களில் தனக்கு சரிபடாத விஷயங்களில் வேண்டும், வேண்டாம், தெரியும், தெரியாது என்ற வார்த்தைகளையே பயன்படுத்துவது நல்லது. கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கண்டிப்புக்குள் என்று அடங்கியுள்ளது? கண்டிப்பு இருந்தால்தான் கல்வி, பணம், வீரம் கிடைக்கிறது.
ஆனால், இந்த மூன்றுக்கு பின்னே அறிவு ஒளியாய் ஒரு நபர் இருப்பின் நிச்சயமாக எளிதில் காரியம் கைகூடுகின்றது. இவை ஒன்றுமே இல்லாதவர்கள் வீட்டில் எப்படிக் காரியங்கள் கைகூடும். இம்மூன்றையும் பொறுத்தவரை மன வலிமை, உடல் வலிமை, உழைப்பு வலிமை, பண வலிமை இப்படியாக பல வலிமைகள் தேவைப்படுகிறது. மக்களுக்குக் கல்வி, செல்வம், வீரம் என்று ஒரு தொப்பி இருந்தால் இன்னொரு தொப்பி வருவது இயற்கை.
கல்வி, வீரம், செல்வத்தைப் பொறுத்து வாழ்வில் பற்றற்று இருக்கச்சொல்வது இங்கே அன்பும், கடமையும் குறிப்பறிந்து செயல்படக் கூறுவதாகும்.