இனிக்கும் கரும்பு பல மருத்துவப் பலன்களைக் கொண்டது. கரும்பு சாப்பிடுவதாலும் கரும்பு சாறு அருந்துவதாலும் உடல் பெறும் பல்வேறு நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
கரும்பு சாறில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் தொண்டைப் புண், வயிற்றுப் புண் குணமாகும். கரும்பை சாப்பிடுவதால் உடனடி ஆற்றல் கிடைக்கும். இதில் அதிக அளவில் சர்க்கரை நிறைந்துள்ளதால் வேலை ஆரம்பிப்பதற்கு முன் சிறிது கரும்புச் சாற்றை குடித்தால் நம் செயல்திறன் மேம்படும்.
கல்லீரல் நன்றாக செயல்பட கரும்பு உதவுகிறது. இது செரிமான பிரச்னைகளை சரிசெய்ய கரும்பை உண்பது நல்லது. கரும்பில் உள்ள பாலிஃபீனால் என்ற வேதிப்பொருள் இரத்தத் தட்டு அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படக் கூடியது. இது இரத்த உறைவதைத் தடுப்பதுடன், இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் பிளவனாய்ட்ஸ் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
கரும்பில் உள்ள இயற்கையான வேதிப்பொருள் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை உடையது. கரும்பு சாற்றோடு ரோஜா இதழ்களை அரைத்து கலந்து சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் நீங்கும்.
கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். கரும்பில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் எலும்பு மற்றும் பற்களுக்கு வலிமை தரும். கரும்பில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பிளவனாய்ட்ஸ் புற்றுநோய் செல்களை அழிப்பதோடு, வர விடாமலும் தடுக்கும். சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமச் சுருக்கம், வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கும். கரும்பைக் கடித்து சாப்பிடும்போது பற்கள் மற்றும் வாய்ப் பகுதியில் உள்ள கிருமிகளை அழிக்கும். பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால் இது மலச்சிக்கலை நீக்கும்.
கரும்பு உடலில் உள்ள அதிக அளவு பித்தத்தை சீராக்கி, சமநிலைப்படுத்துகிறது. உடல் சூட்டை குறைத்து உடலின் தட்பவெட்ப நிலையை சீராக்குகிறது. உடலில் உள்ள நச்சுக்களையும், மாசுகளையும் நீக்கி உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கிறது.
கரும்பு சாற்றில் தேன் கலந்து குடிக்க இரத்த சோகை குணமாகும். தேங்காய் பாலுடன் கரும்புச் சாறு சேர்த்துப் பருகினால் சீதபேதி குணமாகும். கரும்புச் சாற்றில் ரோஜா இதழ்களை அரைத்து சாப்பிட்டு வர, உடலுக்கு வலிமை தரும்.