
உங்கள் வீட்டில் தாத்தா காலத்து ஃ பேனை இப்போதும் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதனை உடனே மாற்றி விட்டு புதிய ஃபேனை பயன்படுத்துங்கள். மிகவும் பழைய ஃபேன்களுக்கு மின்சாரச் செலவு அதிகரிக்கும்.
சில வீடுகளில் யாருமே பார்க்க இல்லாமல் டிவி ஆன் செய்தே இருக்கும். டிவி பார்த்து முடிந்ததும் டிவியை உடனே அணைக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கு ஏற்படுவது தேவையில்லாமல் மின்சாரம் பாழாவதுதான்.
வீட்டில் உள்ள வாஷிங் மெஷினை தினமும் இரண்டு மூன்று தடவை பயன்படுத்துவதைத் தவிர்த்து ஆடைகளையெல்லாம் சேர்த்துத் துவைத்து எடுங்கள். இது மின்சாரச் செலவை குறைக்கும்.
வீட்டில் உள்ள பம்பு செட்டின் சுவிட்சை வாட்டர் டேங்கில் தண்ணீர் நிறைந்தவுடன் அணைத்து விவேண்டும். இல்லாவிட்டால் அதிகமாவது உங்கள் வீட்டு மின்சார பில் தொகைதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
சமையலறையில் இருக்கும் மிக்ஸியில் ஒரே நேரத்தில் உணவுப்பொருட்களை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பல தடவைகளாக மிக்ஸியைப் பயன்படுத்தினால் மின்சார செலவும் அதிகரிக்கும்.
வீட்டில் உள்ள எதாவது அறையில் ஃபேன் தேவையில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தால் அதை உடனேஅணைக்க வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். தேவையில்லாமல்
எரிந்து கொண்டிருக்கும் லைட்டையும் மறக்காமல் ஆஃ ப் செய்து விடவேண்டும்.
வீட்டில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் உணவு அருந்தினால், ஒவ்வொருவருக்காக உணவு சூடுபண்ண இன்டக்ஷன் குக்கரையோ, மைக்ரோவேவ் அவனையோ பயன்படுத்துவதை தவிர்க்கலாம். இதனால் தேவையில்லாமல் ஏற்படும் மின்சார விரயத்தையும் தவிர்த்து விடலாம்.
சாயங்காலம் ஆறுமணி முதல் இரவு பத்துமணி வரை மின்சார பயன்பாட்டை கட்டுப்படுத்துங்கள். ஏனென்றால் இதுதான் பீக் அவர்.
வீட்டில் ஏசி இருக்கிறது என்றால் அதன் ஃ பில்ட்டரை மாதத்துக்கு ஒருமுறையாவது எடுத்து நன்றாக சுத்தம் செய்து மீண்டும் பொருத்த வேண்டும். இல்லாவிட்டால் ஏசி பயன்படுத்தும்போது மின்சார செலவு அதிகரிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
மின்சார தேப்புபெட்டி பயன்படுத்தும்போது ஒரே நேரத்தில் அனைத்து ஆடைகளையும் அயர்ன் செய்து கொள்ளவும். ஒரு நாளில் பல தடைவை அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தினால் மின்சாரம் அதிகமாக விரயமாகும்.
வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜின் டோரை அடிக்கடி திறந்து மூடாதீர்கள். இதனால் மின்சாரம் அதிகம் செலவாகும் என்று மட்டுமல்லாமல் ஃ ப்ரிட்ஜின் ஆயுட் காலமும் (Life Time) குறைந்து விடும்.
அதுபோல் இன்டக்ஷன் ஸ்டவை பயன்படுத்திய பிறகு ஐந்து நிமிடம் கழித்து அதன் சுவிட்ச்சை அணைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் மின்சாரம் தேவையில்லாமல் விரயமாகும்.