

லிஃப்டிற்குள் கண்ணாடிகள் அலங்காரத்திற்காகவோ அல்லது தங்கள் தோற்றத்தை சரிபார்த்துக் கொள்ளவோ வைக்கப்படவில்லை. மாறாக, அவை பல முக்கிய நோக்கங்களுக்காக வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் மக்கள் லிப்ட்டில் இருக்கும் கண்ணாடிகளில் தங்கள் அழகை பார்க்கவும், தலைமுடியை சரி செய்து கொள்ளவும், ஆடைகளை சரி செய்து கொள்ளவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், லிஃப்டில் உள்ள கண்ணாடிகள் இந்த நோக்கத்திற்காக வைக்கப்படவில்லை. பின் எதற்காக என்கிறீர்களா? அதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்!
1. கிளாஸ்ட்ரோஃபோபியா (குறுகிய இடத்தின் பயம்) குறைப்பு: சிறிய மற்றும் மூடிய இடமான லிஃப்டிற்குள் இருக்கும் பொழுது சிலருக்கு மூச்சுத் திணறல் அல்லது பயம் ஏற்படலாம். கண்ணாடிகள் அந்த இடம் பெரியதாக இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி அவர்களை நிதானமாக இருக்க வைக்கும். கண்ணாடி லிஃப்டின் இடத்தை பெரிதாக காட்டுவதால் குறுகிய இடத்தின் பயம் உள்ளவர்களுக்கு இது பதற்றத்தை குறைக்கும். குறுகிய இடங்களில் அடைபட்ட உணர்வை அனுபவிப்பவர்களுக்கு, கண்ணாடி அந்த இடத்தை பெரிதாகக் காட்டி மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
2. பாதுகாப்பு உணர்வு: லிஃப்டிற்குள் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்ணாடியின் உதவியுடன் பின்னால் திரும்பாமலேயே கவனிக்க முடியும். இது பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. லிஃப்டின் உள்ளே இருக்கும் நபர்கள் மற்றவர்களை கண்காணிக்கவும், அசௌகரியமான சூழ்நிலைகளைத் தவிர்க்கவும் உதவுகிறது. கண்ணாடி இருப்பதால் லிஃப்டில் உள்ளவர்கள் மற்ற பயணிகளின் நடவடிக்கைகளை கவனிக்க முடியும். இது திருட்டு அல்லது தாக்குதல் போன்ற அசம்பாவிதங்களை தடுப்பதற்கும், சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டறிவதற்கும் உதவுகிறது.
3. கவனத்தை திசை திருப்புதல்: லிஃப்டில் ஏறி, தாங்கள் செல்ல வேண்டிய மாடிக்கு சென்றடையும் வரை காத்திருக்கும்பொழுது, மக்கள் பெரும்பாலும் பொறுமையின்றி உணர்கிறார்கள். இந்த நேரத்தில் கண்ணாடியில் பார்ப்பது அவர்களை திசை திருப்பி அவர்களது காத்திருப்பை குறுகியதாகவும், சலிப்பில்லாமலும் தோன்ற வைக்கும். பயணிகள் கண்ணாடியைப் பார்ப்பதன் மூலம், நேரத்தை மறக்கவும், லிஃப்ட் நகர்வதை உணராமல் இருக்கவும் உதவும். லிஃப்ட் மெதுவாக நகரும் பொழுது பயணிகள் தங்கள் தோற்றத்தை பார்ப்பதன் மூலம் நேரத்தை கடத்துகிறார்கள். இதனால் பயணம் விரைவாக கடந்து செல்வதாகத் தோன்றும்.
4. சக்கர நாற்காலி பயனர்களுக்கான வசதி: சக்கர நாற்காலியை பயன்படுத்துபவர்கள் லிஃப்டிற்குள் சென்றவுடன், அதை திருப்புவதற்கு இடம் இருக்காது. அத்தகைய சூழலில் பின்னால் இருக்கும் தளத்தின் எண்களை பார்க்கவும், பாதுகாப்பாக வெளியே வரவும் கண்ணாடிகள் உதவுகின்றன. சக்கர நாற்காலியில் இருப்பவர்கள், திரும்பாமல் எளிதாக உள்ளே நுழையவும், வெளியேறவும், தங்கள் நிலையை சரிசெய்யவும் உதவுகிறது. சக்கர நாற்காலியில் வருபவர்கள் லிஃப்டில் எளிதாக சுழன்று தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பெரிதும் உதவுகிறது.
5. இடத்தை பெரிதாக்குதல் (Enhancing Space): கண்ணாடிகள் ஒளியை பிரதிபலித்து லிஃப்ட் சிறியதாகத் தெரியாமல், பரந்த இடமாகத் தோன்றச் செய்கின்றன. கண்ணாடி லிஃப்ட் அறையை உண்மையில் இருப்பதை விட பெரியதாகவும், விசாலமானதாகவும் காட்டும்.
லிஃப்டில் உள்ள கண்ணாடி என்பது ஒரு அலங்காரப் பொருள் மட்டுமல்ல, அது பயண அனுபவத்தை மேம்படுத்தவும், அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலை உருவாக்கவும் உதவுகிறது.