செல்போன் இல்லாமல் உங்கள் மூளையின் கூர்மையை அதிகரிக்கும் 4 வழிகள்!

Focus Without Phone
Focus Without Phone
Published on

நம் முன்னோர்கள் காலத்திலிருந்து, அரச குலம் உள்ளிட்ட அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படைத் தேவை என்பது உணவு, உடை, இருப்பிடம் ஆகிய இம்மூன்று மட்டுமே. இடையில் வந்த இந்த ஆன்ட்ராய்ட் போன் என்ற தொழில்நுட்பக் கருவி இல்லாமலே அவர்கள் அனைவரும் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்கள்தான். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாய் உருவான இந்த செல்போன் மூலம் கிடைக்கும் நன்மை தீமைகளை இங்கு பார்க்கலாம்.

போன் இல்லாமல் கவனம் செலுத்துவது ஏன் கடினம்? (Why it is hard to Focus Without Phone?)

  • போனின் நிறமும் வடிவமைப்பும் உங்கள் கவனத்தை ஈர்க்கும். அதனால் மூளையில் உள்ள டோபமைன் என்னும் நியூரோ ட்ரான்ஸ்மிட்டரின் செயல்பாடுகள் அதிகரிக்கவோ குறையவோ செய்யும். அப்படி ஆகும்போது உடலின் இயக்கங்கள், ஞாபகசக்தி, மன நிலை போன்றவை சரிவர இருக்காது. பார்க்கின்சன், ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் மற்றும் ஹைப்பர் ஆக்ட்டிவிட்டி டிஸ்ஆர்டர் போன்ற உடல்நலக் குறைபாடுகள் உண்டாகவும் வாய்ப்புள்ளது.

  • போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு அருகில் இருந்தாலும், நம் அறிவாற்றல் குறைவது போன்ற உணர்வு ஏற்படும். பழக்க தோஷத்தின் காரணமாக போன் மூலம் கிடைக்கும் விரைவான தகவல்களை சேகரிக்க மனம் விழையும். இதன் தொடர்ச்சியாய், முழு கவனத்துடன் செய்து முடிக்க வேண்டிய வேலையில் கவனம் செல்லாது. மன வருத்தம் உண்டாகும்.

போன் இல்லாமல் உங்கள் கவனத்தை மேம்படுத்த குறிப்புகள் (Tips to improve your Focus Without Phone)

  • உங்கள் போனை 'தொந்தரவு செய்யாதே (Do not disturb)' செயல்பாட்டில் (Mode) வைத்து விட்டு அதனிடமிருந்து தூர விலகி இருந்து, மற்ற வேலைகளை கவனமுடன் செய்து முடிக்கலாம்.

  • டிஜிட்டல் உபகரணங்கலிருந்து விலகி வந்து அச்சிட்டு வெளியான புத்தகங்கள் படிக்கலாம்.

  • மெடிடேஷன் செய்யலாம்.

  • உடற்பயிற்சி செய்யலாம்.

  • பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடலாம்.

போன் இல்லாமல் கவனம் செலுத்த உங்கள் மூளையை எவ்வாறு பயிற்றுவிப்பது?( How to train your brain to fFocus Without Phone)

  • டிஜிட்டல் கருவிகளால் உண்டாகும் கவனச் சிதறலை தடுக்க அமைதியான சூழலை உருவாக்கிக் கொள்வது அவசியம். நேர மேலாண்மைக்கு 'பொமோடோரோ' (Pomodoro) போன்ற டெக்னிக்களை கையாளலாம்.

  • தினசரி பின் பற்ற வேண்டிய பழக்கங்களையும், அடைய வேண்டிய இலக்குகளையும் தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளுதல் நல்லது.

  • செய்யும் செயலை உணர்ந்து, அதற்கு செலுத்த வேண்டிய கவனத்தை குறைவின்றி செலுத்தி, செய்து முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுதல் அவசியம்.

  • மெடிடேஷன் செய்வதை வழக்கமாகக் கொள்ளுதல், நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சி செய்வது மற்றும் செஸ் போன்ற மூளைக்கு வேலை தரும் விளையாட்டை விளையாடலாம்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையே ஒரு முடிவில்லா போராட்டம் தாங்க...
Focus Without Phone

போன் இல்லாமல் கவனம் செலுத்துவதின் நன்மைகள் (The banefits of practising Focus Without Phone)

  • போன் இல்லாமல் கவனமுடன் ஒரு வேலையில் ஈடுபடும்போது படைப்பாற்றல் பெருகும். மூளையின் ஆரோக்கியம் மேம்படும். கூர்நோக்கும் திறன் அதிகரிக்கும். போனை தூர வைத்துவிட்டு விலகியிருந்து வேலை செய்யும்போது மூளை ஆழ்ந்த அறிவாற்றாலுடன் நீண்ட நேரம் கவனமுடன் பணி புரியும்.

  • போனில் வரும் நோட்டிபிகேஷன்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது, மூளை ஒரே வேலையில் கவனத்துடன் ஈடுபட உதவியாயிருக்கும்.

  • போனை கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் வைத்துவிட்டு வேலை செய்யும்போது, போன் மெசேஜ் பாக்கணும், ஃபிளாஷ் நியூஸ் தெரிஞ்சுக்கணும் என்றெல்லாம் மூளை அலைபாய்வது தடுக்கப்பட்டு அதிக அறிவாற்றலோடு மூளை செயல்படும்.

  • போன் அருகில் இல்லாமல் நாம் வேலை செய்யும்போது, நம்மை நாமே நன்கு புரிந்துகொள்ளவும், எமோஷனல் இன்டலிஜன்ஸ் அதிகரிக்கச் செய்யவும் முடியும்.

  • மாணவர்களின் படிப்பாற்றல் மேம்படும். மன அழுத்தம் குறையும்.

இதையும் படியுங்கள்:
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி!
Focus Without Phone

சிறந்த தொழில்நுட்பம் கூடிய ஒரு புதிய கருவி நம்மிடம் கிடைக்கும் போது, அதிலிருந்து கிடைக்கும் நன்மை தீமைகளை நன்கு ஆராய்ந்து அறிந்துகொண்டு, நன்மைக்காக மட்டும் குறைந்த அளவில் பயன் படுத்துவோமானால் அனைத்தும் நல்லவிதமாகவே நடக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com