வீட்டில் பண வரவு அதிகரித்து வாழ்வில் வளம் பெருக இதையெல்லாம் பின்பற்றித்தான் பாருங்களேன்!

The way to a happy life
Happy life
Published on

ன்றைய பரபரப்பான சூழலில் நிதிநிலைமை, அதிர்ஷ்டம், சொத்து சேர்க்கை போன்றவற்றில் முன்னேற்றம் பெற்று, வளமான ஆடம்பர வாழ்வு வாழ்வதையே இலக்காகக் கொண்டு பலரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். மேலும் மேலும் எந்த வழிகளிலெல்லாம் பண வரவை அதிகரிக்கச் செய்து மகிழ்ச்சியாக வாழலாம் என்பதை யோசித்துக்கொண்டே நாட்களை நகர்த்துகிறோம்.

பழங்காலத்தில் நம் முன்னோர்கள், சோதிடர்கள் கணித்துக் கூறியபடி, என்னவெல்லாம் செய்தால் பணமும் மற்ற செல்வங்களும் தங்கு தடையின்றி நம் வீட்டிற்குள் வந்து குவியும் என்பதை அறிந்து வைத்திருந்தனர். அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்போடு பணம், வீடு, வாகனம் போன்ற சொத்துக்களை குறைவின்றிப் பெற சில ஆன்மிக சடங்குகளை செய்வது அவசியம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. பட்டை பவுடர் (Cinnamon powder) மகாத்மியம்: வீட்டில் எந்தவிதமான சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்கு முன்பும், அதற்கு முந்தின பௌர்ணமி தினத்தன்று சிறிது பட்டை பவுடரை எடுத்து வீட்டின் நுழைவு வாயில் கதவின் மீது தூவி வைத்தால், அதன் மூலம் நேர்மறை சக்தியும், புதுப்புது சொத்துக்களும் வீட்டிற்கு வரும் என்பது உண்மை என்று நம் முன்னோர்கள் நம்பினார்கள்.

இதையும் படியுங்கள்:
மனதையும் உடலையும் சுத்திகரித்து மேம்படுத்தும் மன்னிக்கும் மாண்பு!
The way to a happy life

2. பிரிஞ்சி இலை தீர்வு (Bay Leaf Remedy): வாழ்வில் பண வரவு பன்மடங்கு செழித்தோங்க, பிரிஞ்சி இலை ஒரு சக்தி வாய்ந்த பொருள் என அவர்கள் கூறியுள்ளனர். ஒரு பிரிஞ்சி இலையில் உங்களின் விருப்பங்களை எழுதி, அந்த இலையை, ஆறு போன்ற நீர் ஓடிக் கொண்டிருக்கும் பரப்பில் சேர்த்துவிட்டால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். முழு நிலவு பண வரவின் அடையாளம் என்பதுபோல் ஓடும் நீரும் பணத் தட்டுப்பாட்டை நீக்கும் என்பது ஐதீகம்.

3. வளம் சேர்க்கும் வஸ்துகள்: ஒரு கண்ணாடி பௌலில் அட்சதை அரிசியை (Unbroken rice with raw turmeric powder) நிரப்பி, அதன் மேல் சில்லறை நாணயங்கள் மற்றும் ஐந்து கிறிஸ்டல்களைப் போட்டு வீட்டின் வடமேற்கு மூலையில் வைத்து விட்டால் பண வரவு அதிகரித்து நிலைத்து நிற்கும். ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாயே’ என்ற ஸ்லோகத்தை நூற்றியெட்டு முறை கூறிக்கொண்டு, கண்ணாடி பௌல் மற்றும் கிறிஸ்டல்களை தினசரி சுத்தப்படுத்தி வைப்பது அவசியம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளை மளிகைக் கடைக்கு கூட்டிச் செல்வதால் என்ன பயன்?
The way to a happy life

4. தேன் பாட்டில் தீர்வு: ஒரு வெற்றுக் காகிதத்தில் உங்கள் இலக்குகள் மற்றும் தேவைகளை, ஒரு ஊதா நிறத்தில் எழுதும் பேனாவினால் தெளிவாக எழுதுங்கள். வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை, கவுதுளி அல்லது ட்வைலைட் (Gaudhuli or Twilight) நேரத்தில், தெசி நெய் ஊற்றிய விளக்கில் தீபம் ஏற்றுங்கள். மணம் வீசும் ஊதுபத்திகளை ஏற்றி வையுங்கள். பிறகு, ‘ஓம் மஹாலட்சுமி நமோ நமஹ’ என்ற நாமத்தை நூற்றியெட்டு முறை கூறிக்கொண்டு, நீங்கள் எழுதி வைத்த பேப்பரை, சுத்தமான தேன் வைத்துள்ள ஒரு பாட்டிலுக்குள் போட்டு பாட்டிலை இறுக  மூடி, எவரும் பார்க்காத ஓர் இடத்தில் மறைத்து வைத்து விடுங்கள். இதனால் உங்கள் வீனஸின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டு வாழ்வில் வளம் பெருகும்.

5. க்ரீன் அவென்ச்சரைன் (Green Aventurine): நடப்பது எதுவும் திருப்தி இல்லாதது போல் நீங்கள் உணரும்போது, ஒரு மினுமினுக்கும் பச்சை நிற படிகக்கல் (Green Aventurine) ஒன்றை வாங்கி, சிறிது நேரம்  உங்கள் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, பிள்ளையார் முன்பு நின்று பிரார்த்தனை செய்யுங்கள். அவரிடம் உங்கள் தேவைகளைக் கூறி, ‘ஓம் கண் கணபதாய நமஹ’ என்ற மந்திரத்தை நூற்றியெட்டு முறை கூறி பிரார்த்தனையை முடியுங்கள். அதன் பிறகு அந்தப் படிகக் கல்லை தடிமனான நூலில் கட்டி உங்கள் இடது கையில் கட்டிக்கொள்ளுங்கள். நீங்கள் நினைத்தது விரைவில் கைகூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com