வாழ்க்கைத் தரம் உயர இந்த ஒன்பது பழக்க வழக்கங்களை பின்பற்றுங்கள்!

Follow these nine habits to improve your quality of life
Follow these nine habits to improve your quality of lifehttps://www.hindutamil.in

நாம் தினந்தோறும்  கடைப்பிடிக்கும் சில விஷயங்கள் நம்முடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். நாளடைவில் அவை நமது பழக்க வழக்கங்களாகவே ஆகிவிடும். ஆரோக்கியமான உடல், மகிழ்ச்சியான, வளமான வாழ்க்கை, தனி நபர் வளர்ச்சி  போன்ற ஒருசில பழக்க வழக்கங்களை தினந்தோறும் கடைப்பிடிப்பதன் மூலம் தரமான வாழ்க்கையை ஒருவர் அடையலாம்.

1. அதிகாலை துயிலெழல்: அதிகாலையில் துயில் எழுவது ஒரு நாளை தொடங்குவதன் நல்ல அடையாளம். காபிக்கு முன்பு ஒரு டம்ளர் நீர் அருந்திவிட்டு 20 நிமிடம் யோகா செய்து மனதையும் மூளையையும் தூய்மையாக புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். ஒரு பத்து நிமிடம் அமைதியாக அமர்ந்து அன்றைய நாளில் என்ன செய்யலாம் என்பதை பற்றி யோசித்தால் அது பல அற்புதங்களைக் கொண்டு வரும்.

2. உடற்பயிற்சி: அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது, 20 நிமிட நடை பயிற்சி போன்றவை மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைக்கும்.

3. சத்தான உணவு: காய்கறிகள், புரத சத்து நிறைந்த உணவுகள், நல்ல கொழுப்பு உணவுகள், முழு தானியங்கள், உலர் பழங்கள்  போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு உண்ணும் போது போன் பார்த்துக்கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டோ உண்ணாமல் உண்ணும் உணவில் கவனம் வைத்து உண்ண வேண்டும்.

4. போதுமான உறக்கம்: ஆறிலிருந்து ஏழு மணி நேர உறக்கம் மிகவும் அவசியம். அடுத்த நாளுக்கான ஆற்றலையும் கவனக் குவிப்பையும் உடல் ஆரோக்கியத்தையும் நல்ல உறக்கம் தரும். சரியான நேரத்திற்கு உறங்கச் செல்வது அவசியம். விடுமுறை நாட்களில் நீண்ட நேரம் கண் விழித்து கேளிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

5. வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடித்தல்: அன்றைய நாளின் வேலைகளை அன்றன்றே முடித்து விட வேண்டும். எந்த வேலையையும் தள்ளிப்போடக் கூடாது. இன்றைய வேலையை தள்ளிப்போட்டால் நாளைய வேலையோடு சேர்ந்து இரண்டு நாள் பளுவையும் சேர்த்து சுமக்க வேண்டி வரும்.

6. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுதல்: ஒருவர் தன்னை எப்போதும் அப்டேட்டராக வைத்துக்கொள்வதன் மூலம் தன்னை வளர்த்துக்கொள்ள முடியும். தொழில், படிப்பு, பார்க்கும் வேலை போன்றவற்றில் சிறந்தவராக மிளிர தொடர்ந்து கற்றுக் கொண்டிருத்தல் நல்ல பலனைத் தரும்.

இதையும் படியுங்கள்:
ஞாபக சக்தியை அதிகரிக்கும் பத்து சூப்பர் உணவுகள் பற்றி தெரியுமா?
Follow these nine habits to improve your quality of life

7. உறவுகளுடன் இணக்கத்தை கடைப்பிடித்தல்: தன்னுடைய குடும்பம், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிவோர் போன்றவர்களிடம் நல்ல இணக்கமான உறவை கடைபிடிக்க வேண்டும். குடும்பத்தினருடன் தேவையான அளவு நேரம் செலவழிக்க வேண்டும். அதேபோல, வாரத்தில் சில மணி நேரங்கள் நண்பர்களுக்காக ஒதுக்க வேண்டும். அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்களுடன் எப்போதும் புன்னகை, இணக்கமான மனநிலையுடன் பழகுவது மகிழ்ச்சி, நிம்மதி மற்றும் திருப்தியான சூழலை தரும். இதுபோன்ற நேர்மறை சூழலில் மட்டுமே ஒருவர் தன்னுடைய வளர்ச்சியில் அக்கறை காட்ட முடியும்.

8. பொருளாதார சிந்தனை: ஒருவரின் வாழ்க்கை தரம் நன்றாக இருக்க பொருளாதாரத்தில் கவனம் வைக்க வேண்டும். சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல சேமிப்பது அவசியம். ஒவ்வொரு ரூபாயையும் யோசித்து செலவு செய்ய வேண்டும்.

9. மாலை நேர இளைப்பாறல்: அதிகாலையில் இருந்து மாலை வரை ஓயாமல் உழைத்து விட்டு மாலை நேரத்தில் தனக்கென சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். மனதுக்குப் பிடித்தவர்களுடன் சில மணி நேரம் செலவிடுவது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது, விளையாடுவது குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது, வளர்ப்பு பிராணிகளுடன் இருப்பது போன்றவை மனதை மகிழ்ச்சியாக வைப்பதோடு, நல்ல இரவு தூக்கத்திற்கும் வழிவகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com