மாணவர்களே! உணவுத்துறையை ஒதுக்காதீர்கள்! வாய்ப்புகளை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
நம் இந்தியாவில் மட்டும் வருடாவருடம் லட்சக்கணக்கான பொறியாளர்கள் தங்கள் படிப்பை முடித்து, உலக வளர்ச்சியின் நன்மைக்காக உழைக்க வருகிறார்கள். அதில் பலரின் தேர்வாக இருப்பது தகவல் தொழில்நுட்பம் (IT) அல்லது பிற தொழிற்சாலை வாய்ப்புகள். இவற்றைத் தவிர்த்து அவர்களின் ஆர்வம் உணவுத் துறையை நோக்கி வரலாமே!
உணவுத்துறையில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?
1. உணவு செயல்முறைப் பொறியாளர்கள் (Food Process Engineers) உணவு தயாரிப்பு தொடர்பான விஷயங்களை முழுவதும் வடிவமைக்கின்றனர்.
2. தர உறுதி பொறியாளர்கள் (Quality Assurance Engineers) உணவு தரத்தை உறுதி செய்பவர்கள்.
3. பேக்கேஜிங் பொறியாளர்கள்(Packaging Engineers) தயாரித்த உணவுகளை பொறியியல் தரவுப்படி பேக் செய்வார்கள்.
4. ஆட்டோமேஷன் பொறியாளர்கள் (Automation Engineers) AI ரோபாட்டிக்ஸ்(Robotics) போன்ற பொறியியல் யுக்திகளைப் பயன்படுத்தி உணவு தயாரிப்பு செயல்திறனை மெருகேற்றுவார்கள்.
5. R&D பொறியாளர் உணவுச் சந்தையில் தனித்துவமாக இருக்க புது புது கண்டுபிடிப்புகளைப் பற்றி ஆராய்வார்கள்.
6. Cold chain Engineers தயாரித்த உணவுகளைப் பதப்படுத்தி வேறு நாடுகளுக்கு அனுப்ப, அதன் வெப்பநிலை சம்பந்தமான விஷயங்களைக் கையாளக்கூடியவர்கள்.
7. நிலைத்தன்மை பொறியாளர்கள்(Sustainability Engineers) உணவு தொழிற்சாலைகளில் உண்டாகும் கழிவுகளைப் பராமரிப்பார்கள், அதை வருங்காலங்களில் குறைக்கவும் திட்டம் தீட்டுவார்கள்.
இதோடு உணவு பாதுகாப்பு தணிக்கையாளர்கள்(Food Safety Auditors), உபகரண வடிவமைப்பு பொறியாளர்கள்(Equipment Design Engineers), செய்த உணவுகளை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்ல (Supply Chain Optimization Engineers) போன்ற பல பொறியியல் வேலைவாய்ப்புகள் உணவுத்துறையில் இருக்கின்றன.
ஒரு பொறியாளராக உணவுத்துறையில் என்னென்ன நன்மைகளைப் பெறுவோம்?
ஒரு பொறியாளராக இந்த உணவுத் துறையில் பணிபுரிவதால் நம் வேலை அங்குள்ள இயந்திரங்களை மட்டும் பராமரிப்பதற்காகத்தான் என்பது அர்த்தமில்லை. அதனால், ஒரு பொறியாளராக, பெறப்போகும் சிறந்த உணவு, பிறரின் ஆரோக்கியமான வாழ்க்கை, இறுதியில் ஒரு நிலையான கிரகத்தை (sustainable planet) உருவாக்குவோம்.
உணவு சம்பந்தமான பொறியியலில் பணிபுரிவதால் நமக்கு அமைப்புகள் சிந்தனை(systems thinking), பகுப்பாய்வு(analytics), பல்வேறு துறைகளில் நிகழும் விஷயங்கள் (cross-disciplinary collaboration) போன்ற நெறிமுறை திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்.
இந்தத் துறையில் கிடைக்கும் அனுபவங்களால் ஒருவரால் வேளாண் தொழில்நுட்பம்(agri-tech), உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களில்(biotech firms) தலைமைப் பாத்திரங்களுக்குப் பொருந்துவார்கள். அவர்களால் தங்களுக்கான உணவு பிரண்டைத்(food brand) தொடங்க முடியும். சர்வதேச அளவில் உணவுப் பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்குவதற்கும் பொருந்துவார்கள்.
இப்படி ஒரு பொறியாளராக இந்தத் துறையில் ஒருவர் கற்றுக்கொள்ளும் பாடங்கள் வாழ்க்கைக்கான பாதுகாப்பிற்கும் உதவுகிறது. இறுதியில் உலகளாவிய நல்வாழ்வை வடிவமைப்பதற்கான ஒரு வாய்ப்பையும் அவர்களுக்குத் தருகிறது.