
நாம் தினசரி பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களை அன்றாட உணவோடு சரிவிகிதத்தில் சேர்த்துக்கொண்டாலே நம் உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்களைப் போக்கிக் கொள்ளலாம். அந்த வகையில் என்னென்ன காய்கறிகள், பழங்களைக் கொண்டு என்னென்ன உடல் பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
* பீட்ரூட் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.
* பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்து வர சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன், குடலில் உள்ள பூச்சிகள் அழியும்.
* முட்டைக்கோஸ் சாறை அருந்தி வர வயிற்றுப் புண் மறையும்.
* கேரட் சாறை குடித்து வர, பற்கள் கறையின்றி இருப்பதுடன் மேனி எழிலும் கூடும்.
* வெள்ளரிக்காயை சாறு எடுத்து குடித்து வர, மலச்சிக்கல் நீங்குவதுடன் வயிறு சம்பந்தமான பிரச்னைகளைப் போக்கும்.
* தக்காளி சாறுடன் தேன் கலந்து அருந்த உடலில் ரத்தம் சுத்தமாகும்.
* பரங்கிக்காய் சாறு கடும் வெயிலினால் ஏற்படும் மயக்கத்தைப் போக்கும்.
* பிஞ்சு அவரைக்காயை சமைத்து உண்டு வர, கண் நோய்கள் மறையும். கொலஸ்ட்ராலை குறைக்கும்.
* கத்தரிக்காய் பசியைத் தூண்டும். இரத்தத்தை தூய்மையாக்கும்.
* வெண்டைக்காய் ஊறிய தண்ணீர் அருந்தி வர, மலச்சிக்கல் சரியாகும்.
* ஆப்பிள், அன்னாசி, ஆரஞ்சு சாறில் ஏதாவது ஒன்றை தொடர்ச்சியாக அருந்தி வர இதய நோய்கள் வராது.
* முருங்கைப்பூவை பருப்புடன் சமைத்து உண்ண, வாய்க்கசப்பு நீங்கும். ஆண்மையை பெருக்கும்.
* துளசி இலைச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் சளித் தொல்லை அகலும்.
* பப்பாளி சாறை ஒருவேளை அருந்தி வர மேனி எழில் கூறுவதுடன் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும்.
* புளியந்தளிரை துவையலாக்கி சாப்பிட்டு வர, வயிற்று உப்புசம், வயிறு மந்தம் இவற்றைப் போக்கி நன்கு பசியைத் தூண்டும்.
* அன்னாசி பழச்சாறு அருந்தி வர, மூச்சிரைப்பை குணப்படுத்தும்.
* கரிசலாங்கண்ணி சாறை தினசரி காலையில் குளிக்கும்போது தலையில் தடவி சிறிது நேரம் கழித்து அலசி குளித்து வர வழுக்கை விழாது. முடி செழித்து வளரும்.
* கொத்தமல்லி சாறு எடுத்து அதில் சீரகம் சேர்த்து அருந்த கொழுப்பு குறையும். இரத்த அழுத்தம் சீராகும்.
* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊறவிட்டு பின் காய வைத்து பொடி செய்து தினமும் ஒரு டீஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.