

ஃபிரிட்ஜ்ஜிலிருந்து ஏதேனும் ஒரு பொருளை வெளியே எடுக்கும் போது, அது சற்று பனி படிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். நம்முடைய காய்கறிகள், பழங்கள், பால், தயிர் போன்றவற்றை fresh ஆகவும் கெடாமலும் வைத்திருக்க நாம் அனைவரும் குளிர்சாதனப் பெட்டிகளையே நம்பியிருக்கிறோம். சரியான வெப்பநிலையில் இந்த குளிர்சாதனப் பெட்டியை வைத்திருந்தால், அதன் வேலையைச் சிறப்பாகச் செய்வதுடன், பொருட்கள் நீண்ட காலத்திற்குப் புத்துணர்ச்சியுடன் இருப்பதையும் அது உறுதி செய்யும்.
ஆனால், ஒரு குளிர்சாதனப்பெட்டி எவ்வளவு குளிராக இருக்க வேண்டும்? குளிர்சாதனப் பெட்டியில் உள்ள டயலை எந்தப் பக்கம் திருப்ப வேண்டும்? வெயில் காலத்திலிற்கு எது நல்லது? குளிர் காலத்திற்கு எது நல்லது? என பல கேள்விகள் எழலாம். இந்தக் கேள்விகளுக்கான விளக்கத்தை இப்பதிவில் காணலாம்.
குளிர்சாதனப் பெட்டியின் உகந்த வெப்பநிலை என்ன?
குளிர்சாதனப் பெட்டிக்கான உகந்த வெப்பநிலை 37°F (3°C) முதல் 40°F (5°C) வரை ஆகும். இது குளிர்சாதனப் பெட்டியின் ஆற்றல் பயன்பாட்டைக் குறைந்த பட்சமாக வைத்திருப்பதோடு, மிக முக்கியமாக, உணவுப் பொருட்கள் புத்துணர்ச்சியுடனும், உண்பதற்குப் பாதுகாப்பாகவும் இருக்க உதவும்.
குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலை சரியான அளவில் (3-5°C) இருந்தால், உங்கள் உணவு நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலை மிக அதிகமாக இருந்தால், பாக்டீரியாக்களும் நுண்ணுயிரிகளும் அதிக வேகத்தில் வளரக்கூடும். இதனால் பலவிதமான மோசமான கிருமிகளை உண்டாக வாய்ப்பிருக்கிறது.
குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலை அளவியில் உள்ள எண்களைக் கண்டு குழப்பமா? எண் அதிகமாக இருந்தால், குளிர்சாதனப் பெட்டி அதிகக் குளிராக இருக்கும். அளவியை கூட்டிக் கொண்டே போனால், குளிர்சாதனப் பெட்டியை அது இருக்கக்கூடிய அதிகபட்சக் குளிரான நிலைக்குக் கொண்டு வரலாம். ஒரு சில பெட்டிகளில் ஐந்து வரை எண்கள் இருக்கலாம். மேலும் சிலவற்றில் ஏழு வரை இருக்கும்.
எண்களின் அமைப்பும் செயல்பாடும்:
கிட்டத்தட்ட எல்லா டயல் வகை குளிர்சாதனப் பெட்டிகளிலும், 1 என்பது அதிகபட்ச சூடான நிலையையும் மற்றும் அதிகபட்ச எண் மிகக் குளிரான நிலையையும் குறிக்கும். எனவே, 1–5 டயலில், “5” என்பது மிகக் குளிரானது; 1–7 டயலில், “7” என்பது மிகக் குளிரானது. டயலை “மேலே” திருப்புவது குளிரை அதிகரிக்கும். உங்கள் உணவு மிக வேகமாக கெட்டுப் போனால், நீங்கள் அது இருக்கும் எண்ணிலிருந்து இன்னும் ஒரு எண்ணை மேலே உயர்த்த வேண்டும். வெயில் காலங்களில் அதிகபட்ச எண்ணிலும் குளிர் காலத்தில் குறைந்த பட்ச எண்ணிலும் வைப்பது தான் சிறந்தது. அதாவது வெயில் காலத்தில் 3 க்கு மேலேயும் குளிர் காலத்தில் 3 க்கு கீழேயும் செட் செய்ய வேண்டும்.
பொதுவாகவே, எப்போதும் 3 ல் வையுங்கள் ஏனென்றால் 3 தான் இயல்புநிலை அமைப்பாகக் கருதப் படுகிறது. பின்னர், பருவத்தைப் பொறுத்தோ அல்லது நீங்கள் வீட்டிற்கு வாங்கி வந்த பொருட்களின் அளவைப் பொறுத்தோ அதை நீங்கள் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
உணவுகள் ஏன் சீக்கிரம் கெட்டுப் போகின்றன என்ற குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, உங்கள் ஃபிரிட்ஜ் டயலை எந்தப் பருவத்திலும் சரியான அளவில் அமைத்து உணவைப் பாதுகாப்பாக வைக்கும் தெளிவு.