பிரிட்ஜ் கரண்ட் பில்லை பாதியாக குறைக்க உதவும் ‘2 அடுக்கு’ ரகசியம்!

மின் கட்டணத்தை மிச்சப்படுத்தி உங்கள் பணத்தை பாதுகாக்கும் எளிய பிரிட்ஜ் பராமரிப்பு முறை.
கரண்ட் பில்
கரண்ட் பில்Gemini image
Updated on

அது என்ன பிரிட்ஜ்க்கு தேவையான விசேஷ அடுக்கு முறை? இது தெரிந்தால் உங்கள் ‘பேங்க் பாலன்ஸ்’ குறையாமல் இருக்கும். பிரிட்ஜில் மேற்கொள்ளும் இந்த இரண்டு அடுக்கு முறையைப் எப்படி புரிந்துகொள்ளலாம்?

இரண்டு அடுக்கு முறை(Two Shelf Method) என்பது பிரிட்ஜ் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் ஒரு நுட்பமாகும். காரணம், இடைவெளி விடாமல் பிரிட்ஜில் உள்ள எல்லா இடங்களிலும் பொருட்கள் வைப்பதற்கு பதிலாக, அதிலுள்ள ‘இரண்டு அடுக்குகளிலே’ தேவையான பொருட்களை சேமித்து வைக்கலாம். இதன் நோக்கம், நிறைய இடைவெளிகள் இருந்தால்தான் பிரிட்ஜின் உள்ளே ‘குளிர் காற்று’ நன்றாக பரவி இருக்கும்; இது குளிரை தரும் கம்ப்ரசர்(Compressor) வேலையை சற்று குறைகிறது. சர்வதேச இதழில் (International Journal of Refrigeration) வெளிவந்த அறிவியல் ஆய்வுகளின் படி, பிரிட்ஜின் உள்ளே காற்றோட்டம் தடைபடும்போது தான் கம்ப்ரசர்கள் அதிக நேரம் இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும்; இதனால் மின்சார தேவை 25% வரை அதிகரிப்பதாகவும் காட்டுகின்றன.

நம் மாநிலத்தின் ஈரப்பதமான காலநிலையில், பிரிட்ஜ் கதவைத் திறக்கும்போதெல்லாம் சூடான காற்று உள்ளே சென்று பிரிட்ஜை கூடுதல் நேரம் செயல்பட வைக்கின்றன. இதற்கு இடையில் அதன் உள்ளே அனைத்து பகுதிகளும் பொருட்களால் சூழப்பட்டால்; அதனுள்ளே குளிரை தக்கவைக்க அதிக நேரம் கம்ப்ரசர் வேலை செய்யும். ஆக, இந்த இரண்டு அடுக்கு முறை மூலம் பிரிட்ஜில் உங்களால் அதிகம் கையாளபடும் பொருட்களை ‘கைக்கு எட்டும் தூரத்தில் வைப்பது’, கதவு திறந்திருக்கும் நேரத்தைக் குறைப்பதன் மூலமும்; இதை கட்சிதமாக செயல்படுத்தலாம்.

இந்த முறை எவ்வாறு மின்சாரத்தை சேமிக்கிறது?

இந்த அடுக்கி வைக்கும் முறை என்பது, பிரிட்ஜில் பொருட்களை அருகருகே இறுக்கமாக வைப்பது அல்ல. ‘முடிந்தவரை எப்படி இடைவெளி விட்டு பொருட்களை அடுக்கி வைக்கலாம் என்பதே’. அந்த இடைவெளிகளுடன் அடுக்கப்படும்போது தான், குளிர் காற்று தடையின்றி பிரிட்ஜ் முழுக்க சுழல உதவுகிறது.

கரண்ட் பில்
கரண்ட் பில்Gemini image

டிஜிட் இந்தியா(Digit India) மேற்கோள் காட்டிய ஒரு ஆய்வின்படி, நமக்கு அடிக்கடி தேவைப்படும் பொருட்களை முறையாக அடுக்கி வைப்பதாலும், அவற்றுக்கு இடையே இடைவெளி விடுவதாலும் இந்திய வீடுகளில் பிரிட்ஜின் மின்சார பயன்பாட்டை 10–15% வரை குறைக்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுற்றுப்புற வெப்பநிலை பெரும்பாலும் 35°C-ஐத் தாண்டும், அதில் இந்த அடுக்குமுறை நுட்பம் இதற்கு பயனுள்ளதாக இருக்கிறது. முடிந்தவரை கம்ப்ரசரின் வேலையை குறைப்பதன் மூலம், வீடுகளில் மாத மின்சார கட்டணத்தில் ₹150–₹300 அல்லது அதற்கு அதிகமாகவும் சேமிக்க முடியும்.

நம்முடைய அன்றாட நடைமுறையில் இதை எப்படி பின்பற்றலாம்?

‘பிரிட்ஜில் கண்ணுக்கு தெரியும் இடத்தில் பொருட்களை வைப்பதை விட’, எந்தெந்த பொருட்களை எங்கே வைத்தால் நமக்கு உள்ளே, வெளியே பொருட்களை எடுத்து வைக்க சுலபமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இதன் பலன் முற்றிலும் நமக்கு கிடைக்கும்.

● அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருட்களான (பால், தயிர், காய்கறிகளை) நீங்கள் எளிதில் எடுப்பதற்காக நடு அடுக்கில்(Middle row) வைக்கலாம். அது உங்கள் பார்வைக்கு நேராக இருக்கும்.

● சமைத்த உணவு அல்லது பாட்டில்கள் போன்ற கனமான பொருட்களை சுற்றி இடைவெளி இருக்கும்படி, கீழ் அடுக்கில் வைக்கலாம்.

இந்த கனமான பொருட்களை பிரிட்ஜின் பின் பகுதியில் அழுத்தி வைக்காதீர்கள்; இது குளிர் காற்று சுழல்வதை தடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
15 நாளானாலும் காய்கறி அப்படியே ஃப்ரெஷ்ஷா இருக்கும்... இந்த 4 டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
கரண்ட் பில்

● கீரைகள், காய்கறிகள் போன்ற ஈரப்பதம் அதிகம் உள்ள பொருட்கள் குளிரில் உறைவதை தடுக்க, அவற்றை பிரிட்ஜின் கீழ் பகுதியில் உள்ள காற்றோட்டமான பெட்டியில் வைக்கலாம்.

இந்த வழிகள், பிரிட்ஜ் கதவைத் திறந்து வைக்கும் நேரத்தை குறைத்து, அதனுள்ளே குளிர்ச்சியை தக்க வைக்கவும், மின்சார பயன்பாட்டை குறைக்கவும் உதவுகிறது.

சமையல் கலைஞர் ஜோர்டான் வில்லியம்ஸ்(Chef Jordan Williams) ஒருமுறை கூறினார், “ஆற்றல் அல்லது மின்சார சேமிப்பில் பிரிட்ஜ் போற்றப்படாத நாயகன்” என்று குறிப்பிட்டார். இதன் மூலம் பிரிட்ஜை நன்றாக பராமரித்தால், மின்கட்டணங்களை எவ்வாறு கையாளலாம் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

இதையும் படியுங்கள்:
சமையலறையில் எந்த பொருளை எங்கே வைப்பது? சீக்ரெட் டிப்ஸ் இதோ!
கரண்ட் பில்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை, “இயற்கையை ஆழமாகப் பாருங்கள், அப்போது நீங்கள் எல்லாவற்றையும் சிறப்பாக புரிந்துகொள்வீர்கள்,” என்றார்; இந்த வார்த்தைகளும் இங்குப் பொருந்துகிறது. காரணம் சுற்றியுள்ள காற்றோட்டம், ஒரு சாதனத்தின் தேவை போன்ற விஷயங்களை தெரிந்து கொள்வதன் மூலமும். பின் மேலே கூறியதுபோல் ‘எவ்வாறு பொருட்களைச் சிறந்த முறையில் அடுக்கி வைக்கலாம்’ போன்றவற்றையும் இது நினைவுபடுத்துகிறது.

இந்த எளிய முறையை இன்றே உங்கள் வீட்டில் பின்பற்றுவதன் மூலம், கம்ப்ரசர் மீது விழும் தேவையற்ற சுமையைக் குறைத்து, ஒவ்வொரு மாதமும் ₹150 முதல் ₹300 வரை கரண்ட் பில் நேரடியாகச் சேமிக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com