
சமையலறையில் கவனம் என்றாலே முதல் எச்சரிக்கை சமையல் கேஸ் சிலிண்டர் (Gas cylinder) மீது தான் இருக்கும். கேஸ் சிலிண்டர்கள் விபத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நமது கவனத்தை அவ்வப்போது சிதறடித்து நம் வீட்டிலும் இதுபோல் நிகழுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவது உண்மைதான்.
ஆனால் கேஸ் சிலிண்டர் மீதான தீ விபத்துகள் நேர்வது பெரும்பாலும் நமது அஜாக்கிரதை மற்றும் எச்சரிக்கை இன்மை காரணங்களால் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சிலிண்டர்கள் நமது வீட்டுக்கு வரும்போது கேஸ் நிறுவனங்களின் முழுமையான பரிசோதனைகளுக்கு பின் தான் நம்மிடம் வந்து சேரும் என்பதால் இதுபோன்ற விபத்துக்கள் நிகழும் வாய்ப்புகள் மிகக் குறைவு.
அதையும் மீறி விபத்துக்கள் நிகழ்வது குறிப்பிடத்தக்கது. கேஸ் சிலிண்டர்கள் மீது எந்தெந்த விஷயங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டும் எப்படி தீ விபத்துகள் நடைபெறாமல் தடுக்கலாம் என்பது குறித்து இங்கு காண்போம்.
எந்தெந்த வழிமுறைகளில் கேஸ் லீக் ஆகலாம்?
1. வாசர் எனப்படும் சிறு ரப்பர் வளையம் ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர் மேலே காணப்படும். இந்த வாசர் தேய்ந்து போனாலும் கேஸ் லீக் ஆகும் வாய்ப்பு உண்டு. ஆகவே அடிக்கடி அதை செக் பண்ண வேண்டும்.
2. கேஸ் சிலிண்டரின் மீது அதன் காலாவதி தேதியை குறிப்பிட்டு இருப்பார்கள். அதாவது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஏ பி சி டி) (ABCD) என்ற குறியீட்டை தந்து அதன் மூலம் நாம் அந்த சிலிண்டர் சரியான நேரத்தில் உபயோகிக்கிறோமா என்று பார்த்துக் கொள்ளலாம்.உதாரணமாக D -25 என்று இருந்தால் டிசம்பர் மாதம் 25ஆம் வருடம் வரை மட்டுமே அதை உபயோகிக்கும் உபயோகிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
3. அந்த கேஸ் சிலிண்டரின் மேலேயே சுவிட்ச் ஆஃப் ரெகுலேட்டர் வில் நாட் யூஸ் (Switch off regulator will not use) என்னும் குறிப்பு இருக்கும். இதை பெரும்பாலும் நாம் அலட்சியம் செய்வோம். ஆனால் இதில் தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் கேஸ் அடுப்பை பயன்படுத்தாத போது நிச்சயமாக ரெகுலேட்டரை மூடி வைக்க வேண்டும் நாம் வீட்டில் இல்லாத சமயங்களிலும் இரவு நேரங்களிலும் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தவறுதலாக கேஸ் அடுப்பை பற்ற வைத்து அதை அப்படியே விட்டு சென்றாலும் பயமின்றி இருக்கலாம்.
4. டியூப் பில் எச்சரிக்கை தேவை. காஸ் சிலிண்டரையும் கேஸ் அடுப்பையும் இணைக்கும் இது பெரும்பாலும் தற்போது ஐஎஸ்ஐ முத்திரையுடன் தான் பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது .அப்படியே இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அடுப்பு மற்றும் இந்த ட்யூபை சரி பார்த்துக் கொள்வது நல்லது. அடுப்பை சுத்தம் செய்தும் டியூபை மாற்றியும் மாற்றிக் கொள்வதும் நல்லது.
கேஸ் லீக் ஆவது தெரிந்தால் என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்?
நீங்கள் சமைத்துக் கொண்டிருக்கும் போது கேஸ் லீக் ஆவது போல் நினைத்தால் அல்லது அந்த மணத்தை நுகர்ந்தால் உடனடியாக அடுப்புகளை அணைத்துவிட்டு ரெகுலேட்டர் எடுத்து விட்டு சேஃப்டி லாக் கொண்டு அந்த சிலிண்டரை மூட வேண்டும் .
அதன் பிறகு அந்த சிலிண்டரை எடுத்து வந்து வீட்டின் வெளியே வைத்துவிட்டு உடனடியாக கேஸ் டெலிவரி நிறுவனத்திற்கு பேச வேண்டும் .அவர்கள் வந்து பரிசோதித்த பிறகு நீங்கள் வீட்டிற்குள் தைரியமாக செல்லலாம் .
அதற்கு முன் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் வீட்டில் காற்றாடி , டிவி போன்ற மின் இணைப்புகளை நிச்சயமாக போடக்கூடாது. மெழுகுவர்த்தி ,விளக்கு போன்றவைகளை தீயினால் பற்ற வைக்க கூடாது. ஏனெனில் கேஸ் எந்த அளவுக்கு லீக்காகி உள்ளது என்பது நமக்கு தெரியாது. இதனால் விபத்துக்கள் எளிதில் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
கேஸ் சிலிண்டர் விபத்தை என்னென்ன முன்னெச்சரிக்கைகள் செய்யலாம்?
6 மாதத்திற்கு ஒரு முறை அடுப்பை கேஸ் அடுப்பை சர்வீஸ் செய்து கொள்ள வேண்டும் .
ஒரு வருடத்திற்கு ஒரு முறை சிலிண்டரின் டியூப் வால்வுகளை மாற்றி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சிலிண்டரில் உள்ள எக்ஸ்பயரி தேதி போன்றவற்றில் கவனம் வைக்க வேண்டும்.
குறிப்பாக சமையலறையிலேயே பிரிட்ஜ் வைப்பது தவறானது. அதன் வெப்பநிலை கேஸ் லீக்கின் போது ஆபத்து தரலாம் என்பதால் பெரும்பாலோர் செய்யும் இந்தத் தவறை தவிர்த்து பிரிட்ஜை சமையலறை வெளியே வைக்கவேண்டும்.
பாலோ அல்லது வேறு ஏதாவது மறதியாக வைத்துவிட்டு அடுப்பில் பொங்க விடுவதால் அடுப்பு அணைந்து அதனால் கேஸ் லீக் ஆகும் வாய்ப்பு உண்டு என்பதால் சமைக்கும் போது அதில் மட்டும் கவனம் வைத்து அருகிலேயே இருந்து சமைத்து முடித்த பின் ரெகுலேட்டரை மூடி விடுவது தான் பாதுகாப்பு.
பொதுவாக கேஸ் சிலிண்டர் விபத்துக்கள் அதிக வெப்பம் மற்றும் பிரஷரினால்தான் நிகழும் என்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை. இருப்பினும் நமது பாதுகாப்பு நமது கையில் என்பது போல் நமது கேஸ் நமது பராமரிப்பு மூலம் எச்சரிக்கையாக இருந்து இது போன்ற விபத்துகளை தடுக்க முடியும்.