கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடா? சமாளிப்பது எப்படி? இதோ சிம்பிள் ஐடியாக்கள்!

gas cylinder booking
gas cylinder booking
Published on

ன்றைய சூழ்நிலையில் ஏரிவாயு தட்டுப்பாடு என்பதை எந்த நேரத்திலும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அப்படி தட்டுப்பாடு ஏற்பட்டால் அதை சமாளிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.

கேஸ் சிக்கனம் செய்ய ஏற்ற வழிகள்:

சமையலுக்கு முன் தயாரிப்பு: காய்கறிகளை நறுக்குவது, மசாலா அரைப்பது தேவையான பொருட்களை பக்கத்திலேயே வைத்திருப்பது போன்ற வேலைகளை சமையல் தொடங்குவதற்கு முன்பே முடித்து விட வேண்டும். அடுப்பை பற்ற வைத்த பிறகு இவற்றை செய்வது எரிவாயு வீணாகும்.

மூடி வைத்து சமைக்கவும்: எப்போதும் பாத்திரங்களை மூடி வைத்து சமைக்கவேண்டும் .இது வெப்பத்தை உள்ளே தக்கவைத்து உணவை 20% வேகமாக சமைக்க உதவும்.

பாத்திரங்கள்:

சிறிய பாத்திரங்களை பெரிய பர்னரில் வைத்தால் வெப்பம் வீணாகும். சுடர் பாத்திரத்தின் அடிபரப்பை தாண்டி வெளியே தெரிந்தால் வெப்பம் வீணாகிறது என்று அர்த்தம். ஆதலால் பாத்திரத்தின் அளவுக்கு ஏற்ப பர்னரை தேர்வு செய்யவேண்டும்.

சிறந்த பிராண்ட், அதிரடி வாட்டேஜ் மற்றும் நவீன பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த ஸ்மார்ட் இண்டக்ஷன் அடுப்புகள் இப்போது இவ்வளவு மலிவா? - இப்போதே முந்துங்கள்!

தண்ணீர் அளவு:

சமையலுக்கு தேவையான அளவு மட்டும் தண்ணீரை பயன்படுத்தவும். அதிக தண்ணீரை சூடுபடுத்துவது அதிக எரிவாயுவை செலவழிக்கும்.

பர்னர் சுத்தம்:

அடுப்பின் பர்னர் மஞ்சள் நிற சுடர் உடன் இருந்தால் அதில் அடைப்பு உள்ளது என்று அர்த்தம். பர்னரை சுத்தமாக வைத்திருந்தால் நீல நிறச்சுடர் உடன் எரிந்து அதிக வெப்பத்தை தரும். இதனால் எளிதில் சமைத்து முடிக்கலாம். சமையல் முடிந்தவுடன் மற்றும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு மறக்காமல் அணைத்துவிட வேண்டியது அவசியம்.

பருப்பு, அரிசி போன்றவற்றை சமைப்பதற்கு முன்பு அரைமணி நேரத்திற்கு தண்ணீரில் ஊறவைத்தால் அவை மிக விரைவாக வெந்துவிடும். இதனால் 10% முதல் 15 சதவீதம் வரை கேஸ் மிச்சம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
25 நாள் ஆகுமா சிலிண்டர் வர? இந்த ஐடியாவ ஃபாலோ பண்ணுனா ஒரு சிலிண்டர் 3 மாசம் வரும்!
gas cylinder booking

சமையல் சிலிண்டர் நீண்ட நாள் வருவதற்கு:

ஈரமான பாத்திரங்களை கழுவி அப்படியே அடுப்பில் வைக்கக் கூடாது. துணியால் துடைத்துவிட்டு வைத்தால் பாத்திரத்தில் உள்ள நீரை உலர்த்த தேவைப்படும் கேஸ் மிச்சமாகும்.

முடிந்தவரை அதிக உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கப் பழகுங்கள். இது நேரத்தையும் கேசையும் பெருமளவுக்கு மிச்சப்படுத்தும்.

குறிப்பாக இரண்டு நேரத்திற்கு வேண்டிய சமையலை ஒரே நேரத்தில் செய்து முடித்துவிடுங்கள். இதனால் கேஸ் சிலிண்டரை நீண்ட நாள் மிச்சப்படுத்தலாம்.

உணவு வெந்து முடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே அடுப்பை அணைத்துவிடுங்கள். பாத்திரத்தில் உள்ள அந்த வெப்பத்திலேயே மீதமுள்ள உணவு வெந்துவிடும்.

குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுக்கும் பால், காய்கறிகள் அல்லது மாவு, சூடு பண்ண வேண்டியவைகள் அனைத்தையும் எடுத்து நேரடியாக சமைக்காமல் அரைமணி நேரம் முன்பு வெளியே எடுத்து வைத்து சாதாரண வெப்ப நிலைக்கு வந்த பிறகு சமைத்தால் கேஸ் நீண்ட நாள் வரும்.

பேசிக்கொண்டே சமைக்காமல் கொஞ்சம் அமைதியாக சமைத்தால் சட்டென்று சமைத்துவிடலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தோசை சப்பாத்தி போன்றவைகள் செய்து முடித்ததும் அதே தவாவில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை வைத்துவிட்டால் அதுவே அந்த சூட்டில் வெந்நீராகக் கிடைக்கும்.

மிஷினில் அரைக்க வேண்டியவை: மிளகாய், மல்லி அதில் சேர்க்கும் பருப்பு வகைகள், வெந்தயம், கடுகு, போன்ற அனைத்தையும் நன்றாக வெயிலில் காயவைத்து அரைத்து விடுங்கள். அதற்காக ஸ்டவ்வை பற்ற வைக்காதீர்கள். அப்பொழுது கேஸ் மிச்சமாகும்.

சாதம் வடித்து சாப்பிடுபவர்கள் தட்டுப்பாடு தீரும் வரை குக்கரில் வைத்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது அவசியம். அதேபோல் நீண்ட நேரம் வேகும் பாரம்பரிய அரிசிகளையும் நன்றாக ஊறவைத்து குக்கரில் சமையுங்கள். பாத்திரத்தில் சமைக்க வேண்டாம்.

காய்கறி சாலட், பழங்களை அப்படியே சாப்பிடுங்கள். சமைக்காமல் சாப்பிடும் உணவுப் பொருட்களை அதிகம் தேர்ந்தெடுக்கலாம். நுங்கு, வெள்ளரிக்காய் நீர் காய்கறி, பழங்கள், முளைகட்டிய பயறு வகைகள் போன்ற சீசனுக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களை அதிகம் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
குக்கரில் சமைக்க கூடாத உணவுகள்!
gas cylinder booking

அடிக்கடி டீ காபி குடிப்பவர்கள் அதை நிறுத்தலாம். லெமன் சிரப் போன்றவற்றை தயாரித்து வெயிலில் வைத்து உண்டாக்கலாம். இதனால் கேஸ் மிச்சமாகும். உணவுப் பொருளின் தரமும் சுவையாகும்.

இண்டக்ஷன் ஸ்டவ் ஒன்றை வாங்கி வையுங்கள். கடைகளில் அதிகம் கரிப்பிடிக்காத விறகு அடுப்பு கிடைக்கிறது. அதையும் வாங்கி வையுங்கள். வீட்டிற்கு பக்கத்தில் தோட்டம் வைத்திருப்பவர்கள் அங்குள்ள விறகுகளையும் பத்திரப்படுத்தி வையுங்கள். பெரிய குக்கர் வைத்திருப்பவர்கள் அதிலேயே அரிசி பருப்பு காய்கறி அனைத்தையும் வேகவைத்து எடுக்க வழி செய்யுங்கள். சமையலில் அதிக வெரைட்டி செய்யாதீர்கள். உறவினர்கள் வந்தாலும் எளிமையாகவே சமையுங்கள். சூழ்நிலை புரிவதால் யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள்.

சிறந்த பிராண்ட், அதிரடி வாட்டேஜ் மற்றும் நவீன பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த ஸ்மார்ட் இண்டக்ஷன் அடுப்புகள் இப்போது இவ்வளவு மலிவா? - இப்போதே முந்துங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com