கேஸ் சிலிண்டரில் A, B, C, D என்று எழுதியிருப்பது ஏன் தெரியுமா? பலரும் அறியாத ரகசியம்!

சமையல் கேஸ் சிலிண்டர் ஹேண்டில்பார் பிளேட்டின் உள்ளே எண் எழுத்து எழுதியிருப்பதை நீங்கள் கவனித்துள்ளீர்களா? அந்த எண்ணின் அர்த்தம் என்ன? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
Gas cylinder
Gas cylinder
Updated on

ங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்களின் (LPG) பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள்தான் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

வீட்டில் சிலிண்டர் பயன்படுத்தும் இல்லத்தரசிகள் அதன் பாதுகாப்பு குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும். தவறாக கையாளப்பட்டால் இது ஆபத்தானது. ஏனெனில் வாயு கசிவுகள் மற்றும் ஷார்ட் சர்க்யூட் காரணமாக சில நேரங்களில் சிலிண்டர்கள் வெடித்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இவ்வாறு ஏற்படும் விபத்துகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

சிலிண்டர் வாங்கும் முன், அதன் காலாவதி தேதி, எடை மற்றும் பாதுகாப்பு முத்திரை (Seal) ஆகியவற்றைச் சரிபார்ப்பது மிக முக்கியம். எல்பிஜி சிலிண்டர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலாவதி தேதி இல்லை, ஆனால் சட்டப்பூர்வ சோதனைக்கான இறுதித் தேதி சிலிண்டரின் மேற்புறத்தில் உள்ள உலோகக் கலனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தேதிக்கு பிறகு சிலிண்டரை பயன்படுத்துவது ஆபத்தானது. எனவே, புதிய சமையல் கேஸ் சிலிண்டர் வாங்கும் போது, அதன் சோதனை காலத்தைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.

இதையும் படியுங்கள்:
சிவப்பு, நீலம், மஞ்சள்... சிலிண்டர் நிறங்களின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?
Gas cylinder

சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்பவரிடமிருந்து கேஸ் சிலிண்டரைப் பெறும்போது, ​​ஹேண்டில்பார் பிளேட்டின் உள்ளே எண் எழுத்து எழுதியிருப்பதை நீங்கள் கவனித்துள்ளீர்களா? அவ்வாறு குறிப்பிட பட்டிருக்கும் எண்ணின் அர்த்தம் தான் என்ன? சிலிண்டரில் ஏன் இது குறிப்பிடப்பட்டுள்ளது? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

ஒவ்வொரு சிலிண்டரின் உருளையில் மேல் வளையம் அல்லது கைப்பிடியுடன் இணைக்கும் உலோக கீற்றுகளின் உள் பக்கத்தில் (Stay plate) குறிப்பிட்ட எண்கள் காலாவதி தேதி ஆங்கில எழுத்துடன் குறிப்பிடப் பட்டிருக்கும். அவை ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதன் மூலம் சிலிண்டரின் காலாவதி தேதியை கண்டுபிடிக்கலாம். இதில் A, B, C, D என்ற ஆங்கில எழுத்துக்கள் மாதங்களைக் குறிக்கும்:

A-24: ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களையும்,

B-25: ஏப்ரல், மே, ஜூன் மாதங்களையும்,

C-26: ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களையும்,

D-26: அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களையும் குறிக்கின்றன.

ஆங்கில எழுத்துடன் சேர்த்து ஒரு இரண்டு இலக்க எண்ணும் இடம் பெற்றிருக்கும். எண்கள்: ஆண்டைக் குறிக்கும் (எ.கா: 26 என்பது 2026-ஆம் ஆண்டைக் குறிக்கும்).

உதாரணமாக,உங்கள் சிலிண்டரில் B-24 என்று எழுதப்பட்டிருந்தால், உங்கள் சிலிண்டரின் காலாவதி தேதி ஜூன் 2024 என்பது பொருள். காலாவதி தேதி முடிந்திருந்தால் உடனடியாக நீங்கள் அதை மாற்ற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் சிலிண்டர் வெடிக்கும் அபாயம் அதிகம். சிலிண்டரில் B25 என்று குறிப்பிட்டு இருந்தால், அந்த சிலிண்டர் மார்ச் 2026க்குள் காலாவதியாகிவிடும்.

அதேபோல் நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் எந்த எல்பிஜி சிலிண்டரின் அதிகபட்ச ஆயுட்காலம் (காலாவதியாகி)15 ஆண்டுகளாகும். முதல் சோதனை 5 ஆண்டுகள் முடிந்த பிறகும் இரண்டாவது சோதனை 10 ஆண்டுகளுக்குப் பிறகும் நடத்தப்படும். இந்த சோதனை விவரம்தான் எண்ணெழுத்து வடிவில் உங்கள் சிலிண்டரின் மேற்புறத்தில் எழுதப்பட்டுள்ளது.

காலாவதியான சிலிண்டரை பயன்படுத்துவது சில ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் வேறு காரணங்களாலும் கசிவு ஏற்படலாம். எனவே நீங்கள் ஒரு சிலிண்டரை வாங்கும் போதெல்லாம், அதை எடைபோடுவதோடு, அது எங்கிருந்தும் கசிகிறதா இல்லையா என்பதை சரியாகச் சரிபார்க்கவும் மற்றும் அதன் காலாவதி தேதியையும் சரிபார்க்கவும்.

காலாவதியான சிலிண்டர்கள் எதிர்பாராத விதமாக உங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டால் உடனே அதை உரிய டெலிவரி நபரிடம் கொடுத்து மாற்றிவிடுங்கள். மேலும், சிலிண்டரின் வால்வு கசிகிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

விநியோகஸ்தரிடமிருந்து சிலிண்டரைப் பெற்றுக்கொண்டதும் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:

* டெலிவரி செய்யும் நபரின் முன்னிலையிலேயே சீல் (Seal) சரியாக உள்ளதா எனப் பார்க்கவும். ரப்பர் வளையம் (O-ring) சரியாக இருக்கிறதா என்றும், சிலிண்டரில் எந்தவிதமான சேதமும், துருப்பிடித்தலும் அல்லது கசிவு வாசனையும் இல்லை என்பதை உறுதி செய்யவும்.

* குழாய்களில் வெடிப்பு அல்லது சேதம் உள்ளதா என அவ்வப்போது சரிபார்த்து, ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் ரெகுலேட்டரையும் அடுப்பையும் இணைக்கும் குழாயை மாற்றி விடுவது பாதுகாப்பானது.

* சிலிண்டர் டெலிவரி பெறும்போது நிறுவனத்தின் முத்திரை மற்றும் சிலிண்டர் சரியாக சீல் செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க மறக்க வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
LPG Cylinder | ஒரு மாதத்தில் எத்தனை சிலிண்டர் புக் பண்ணலாம் தெரியுமா?
Gas cylinder

* ஒருபோதும் சீல் உடைந்த கேஸ் சிலிண்டரை பயன்படுத்த வேண்டாம்.

logo
Kalki Online
kalkionline.com