ஷூ வாங்குறீங்களா? GST-யில் மறைந்திருக்கும் சூப்பர் சேமிப்பு டிப்ஸ்!

Shoes
Shoes
Published on

சாதாரணமா ஷூ வாங்கும்போது அதோட விலையையும், தரத்தையும் மட்டும்தான் பார்ப்போம். ஆனால், ஷூவுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (GST) விவரத்தை கவனித்தால், நீங்க நினைப்பதை விட கொஞ்சம் அதிகமாவே பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

ஒரு சின்ன டீடைல் அவ்வளவு முக்கியமா? என நீங்கள் கேட்கலாம்.

ஆம்! சமீபத்தில் ஜிஎஸ்டி கவுன்சிலின் (GST Council) சீர்திருத்தத்தின்படி, காலணிகளுக்கான ஜிஎஸ்டி (GST) 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஒரு கண்டிஷன் உள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் (GST Council) சீர்திருத்தத்தின்படி காலணிகளுக்கான ஜிஎஸ்டி விலக்கில் முக்கியமான 'விலை வரம்பு' (Price Cap) செய்யப்பட்டுள்ளது.

₹2500 வரை உள்ள காலணிகளுக்கு மட்டுமே இந்த 5% ஜிஎஸ்டி பொருந்தும். ₹2500-ஐ விட அதிகம் உள்ள ஷூக்களை வாங்கும்போது அவற்றுக்கு 18% ஜிஎஸ்டி கட்ட வேண்டியிருக்கும்.

அதாவது, ஒரு ஷூவின் விலை ₹2501 ஆக இருந்தால் கூட, நீங்கள் 18% வரி செலுத்த வேண்டியிருக்கும். வெறும் ஒரு ரூபாய் வித்தியாசம் எவ்வளவு பெரிய வரி மாற்றத்தை ஏற்படுத்துகிறது என பார்த்தீர்களா?

பிராண்டட் ஷூ வாங்குபவர்களுக்கு என்ன ஆகும்?

பொதுவாக, வெளிநாட்டு மற்றும் பெரிய பிராண்டட் ஷூக்கள் ₹2500-க்கு மேலதான் இருக்கும். அதனால், இந்த விலைக்கு மேல் ஷூ வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய 5% வரி குறைப்பில் இருந்து எந்தப் பயனும் கிடைக்காது. அவர்கள் 18% வரியை செலுத்த நேரிடும்.

இதையும் படியுங்கள்:
35 வயதிற்கு முன் பணக்காரர் ஆக அவசியம் அறிய வேண்டிய 7 விதிகள்!
Shoes

யாரெல்லாம் லாபம் அடையலாம்?

'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' (Made in India) ஷூக்கள் மற்றும் குறைந்த MRP உள்ள உள்ளூர் தயாரிப்புகளை வாங்குபவர்களுக்கு இந்த 5% வரிச் சலுகை பெரிய அளவில் உதவும்.

தோல் மற்றும் காலணித் தொழிலில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கான ஜிஎஸ்டியும் (Chamois leather, Composition leather போன்றவற்றுக்கு) 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டிருப்பதால், இந்தியத் தயாரிப்புகளின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital marketing): பணம் கொட்டும் தொழில் ரகசியம்! மாதம் பல ஆயிரம் சம்பாதிப்பது எப்படி?
Shoes

இந்த GST விகித மாற்றங்கள், இளம் உற்பத்தியாளர்களின் சுமையைக் குறைத்து, நுகர்வோருக்கு குறைந்த விலையில் தயாரிப்புகளைக் கிடைக்கச் செய்யும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

அடுத்த முறை ஷூ வாங்கப் போகும்போது, அதன் விலையை ₹2500-க்குள் இருக்கும்படி பார்த்து வாங்குங்க. இது ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும், 13% அதிக வரியைச் செலுத்துவதை தவிர்க்கலாம்! புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்து, உங்கள் பணத்தை மிச்சப்படுத்துங்க!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com