
'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்' என்ற பாடல் கேட்கக்கேட்க ரம்யமாக இருக்கும்!
அதேபோல் வாழ்க்கை என்றால் அது ஆயிரம் காலத்துப் பயிா்தான்!
பலர் கிடைத்த வாழ்க்கையை புாிதல் இல்லாமல் தொலைத்துவிட்டு, 'எனக்கு வாழ்க்கையே அமையவில்லை, என்ன வாழ்க்கை இது?' என அங்கலாய்ப்பதும் அனைத்தையும் இழந்தது போல வேதாந்தம் பேசுவதும் நிறையவே உண்டு!
பொதுவாக தாய் தந்தையரை, குடும்பத்தில் உள்ள பொியவர்களை, மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்!
மேலும் பிள்ளைகள் குறிப்பிட்ட வயது வந்ததும் பெரியோர்கள், பிடிவாதம் மற்றும் தேவையில்லாத தலையீடுகளை தவிா்ப்பதும் சிறப்பானதாகும்.
அன்பு, பாசம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அதை கடைபிடிப்பது நமக்கானது.
அனைத்துக்கும் மேஜிக் என்பது 'புரிதல்' என்னும் நடைமுறைதான்!
புாிதலுக்கு எதிாியே ஈகோதான்!
ஈகோவை விட்டுக்கொடுப்பது நல்ல விஷயமே! ஆனால் நல்ல விஷயங்கள்தான் நம்மில் பலருக்கு பிடிக்காதே!
அதேபோல தாய், தந்தையர் நமக்கு தெய்வம் போன்றவர்கள். மனைவி என்ற ஒரு பந்தம் வந்தவுடன் எக்காரணம் கொண்டும் அவர்களை உதாசீனம் செய்வது தவறான காாியமாகும்.
தொடர்ந்து நமது மாமனாா் மாமியாருக்கும் நாம் உாிய மரியாதை தருவதே பண்பாடு!
நமது வீட்டிற்கு வந்த மருமகளை நாம் நமது மகளைப்போல நினைக்கவேண்டும்!
மாப்பிளையும் நமக்கான ஒரு மகன் என்ற பக்குவமான பண்பு மாப்பிள்ளையின் மாமனாா் மாமியாருக்கும் வரவேண்டும்!
கணவன், மனைவி பந்தம் என்பது பூா்வ ஜென்ம பந்தம். அந்த பந்தத்தை நாம், நமது உயர்ந்த குணத்தை கடைபிடித்து வாழக் கற்றுக்கொண்டாலே வாழ்வில் வசந்தம் தானாகவே வரும்.
கோபதாபங்களை கழித்து, அன்பைப் கூட்டி, அன்யோன்யத்தை பெருக்கினால், எல்லாமும் சரியாகிவிடும்!
கணவனுக்கோ, அல்லது மனைவிக்கோ, உடல் நலம் சாியில்லாத நிலையில் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் வேலைகளைப் பிாித்துக்கொண்டு ஒருவரது சுமையில் அடுத்தவர் பங்கெடுக்கலாம்.
அதேபோல சமையல் மற்றும் இதர வேலைகளிலும் பங்கெடுத்துக்கொள்ளலாம் !
தேவையில்லாத சொற்பிரவாகங்களில் நிதானத்துடன், விவேகத்துடன் நடந்து கொள்வது நல்லது!
ஒருவரை ஒருவர் எந்த தருணத்திலும் விட்டுக்கொடுத்து பேசக்கூடாது. இதுவே ஆரோக்கியமான அன்புக்கான முதல் படி.
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குமுன் தம்பதியர்கள் தாயாா் தகப்பனாரிடம் கலந்து பேசுவதுடன், இது தேவைதானா என பல முறை யோசனை செய்வது நல்லது.
சேமிப்பின் தன்மை உணர்ந்து திட்டமிடுதல், தொலை நோக்கு பாா்வையுடன் செயல் படுவது சிறப்பானதே!
அதேபோல இருவரும் வேலை பாா்ப்பவராக இருக்கும் நிலையில் வேலையின் தன்மை, அதில் இருவருக்கும் உள்ள சிரமங்களை மனம் விட்டுப் பேசுவதே நல்ல புாிதலாகும்.
வேலையில் சிரமம் என்பது பொதுவானதே!
இருவருக்குமான ஊதிய முரண்பாடுகளை அணுசரித்து ஈகோ காட்டாமல் இருப்பதும் நல்ல பண்பாடு.
எந்த விஷயமானாலும் நெருக்கடியானாலும் கலந்து பேசிக்கொள்வதும் நலமானது!
பிளாட் வாங்குவது, வீடாக வாங்குவது, போன்ற சமயங்களில் மிகவும் நிதானித்து செயல்படுவது சிறப்பானது. கடன் வாங்கி வீடுகட்டுவதை கூடுமான வரையில் தவிா்க்கலாமே, அது நல்ல விஷயம்தானே!
குழந்தை பிறப்பதிலும் காலம் தாழ்த்துவது, போன்ற பல்வேறு நிலைபாடுகளில் ஒருமித்த கருத்து வருவது போன்ற நிலைபாட்டினை எடுப்பதே சிறப்பானதாகும்.
பொதுவாகவே விட்டுக்கொடுத்து வாழ்வது நல்லதே. ஒருவர் கோபப்பட்டு பேசும்போது அதற்கு ஏற்ப அடுத்தவர் நிதானம் கடைபிடிக்க வேண்டும்!
பொய்சொல்வது, ஒருவருக்கு ஒருவர் தொியாமல் சில விஷயங்களை கடைபிடிப்பது போன்றவற்றை தவிர்ப்பதும் நயமே!
ஆக மொத்தத்தில் புாிந்துகொண்டு வாழ்வதே அனைத்துக்கும் நல்லது; அதுவே வசந்தத்தை அழைத்து வந்து வாசல் கதவைத்தட்டுமே!
வாழ்க்கை ஒரு கண்ணாடி, அது ஒரு பளிங்குக்கல், அது உடையாமல் கீரல் விழாமல் பாா்த்துக்கொள்வது சிறப்பு. உடையாமல் பாா்த்துக்கொள்வது அதைவிட சிறப்பு. வாழ்க்கை வாழ்வதற்கே! அதை வாழ்ந்துதான் பாா்க்கலாமே! ஓகேவா தோழிகளே !