வீட்டில் எல்லாமே இருந்தும் ஒருவித அசௌகரியமா? நிம்மதி தரும் 10 எளிய மாற்றங்கள்!

சோஃபா வைக்கும் இடம் முதல் வீட்டின் வாசனை வரை உங்கள் மனதை அமைதிப்படுத்தும் உள்ளக அலங்கார ரகசியங்கள்.
வீட்டு அலங்காரம்
வீட்டு அலங்காரம்Gemini image
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on

ங்கள் வீட்டில் அலங்கார சோபாக்கள் இருக்கலாம்‌ கலைநயம் நிறைந்த பொருட்கள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், பலவித சௌகரியங்கள் இருந்தாலும் ஒருசிலர் வீட்டில் இருக்கும்போது ஒருவித அசௌகரிய உணர்வைத் பெறுவார்கள். நம் வீட்டில் நாம் சௌகரியமாக இருக்க கவனிக்க வேண்டிய பத்து விஷயங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

1. சோஃபா வைக்கும் முறை;

சோஃபாவில் அமரும்போது நம் முதுகு நன்றாகப் பாதுகாப்பாக உள்ளதா என்பதை முதலில் கவனிக்க வேண்டும்‌. சுவர்களை ஒட்டி சோஃபா இருக்கும்போது நம்மால் நம்மைச் சுற்றியுள்ள எதையும் நன்றாகப் பார்க்க முடியும்‌. சோஃபா சுவரை ஒட்டி வைக்கப்படும் போது நீங்கள் வாசல் மற்றும் பல இடங்களை சௌகரியமாக காண முடியும்.

2. அமர்ந்து படிக்க ஒரு நாற்காலி

எல்லா நாற்காலிகளையும் நடுவிலேயே வைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது‌. ஜன்னல் அருகில் அமர்ந்து படிக்க ஒரு நாற்காலி, மூலையில் ஒரு பென்ச் மற்றும் இரண்டு நாற்காலிகளை சேர்த்து வைத்தல் போன்ற அமைப்பு இருந்தால் அந்த இடத்தை விட்டு போக வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது.

3. பெரிய விளக்குகள் தவிர்க்கவும்

மிகப்பெரிய வெளிச்சம் கொடுக்கக் கூடிய பெரிய விளக்கை வைப்பதைப் தவிர்த்து, குறைந்த வெளிச்சம் கொண்ட விளக்குகளை பலவிதங்களில் வைப்பதன் மூலம் உங்கள் கண்களுக்கு இதமான வெளிச்சமும் மேலும் அந்த அறையோடு உங்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுவதை உணர்வீர்கள்.

4. கால்களுக்கு

தரை விரிப்புகள் கார்ட்டூன்கள் போன்றவைகள் உங்கள் உடலுக்கு சௌகர்யமான உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும். காஃபி டேபிளுக்கு அடியில் விவரிக்கப்படும் விரிப்பு உங்கள் கால்களுக்கு மெத்தென்ற உணர்வை ஏற்படுத்தும். அறையில் எதிரொலியைக் குறைத்து உங்களுக்கு காலை கீழே வைக்கும் போதும் உட்காரும் போதும் ஒரு இதமான உணர்வைத் கொடுக்கும்.

5. இயற்கைப் பொருட்கள்

உங்கள் வீட்டு அறைகளில் வைக்க வேண்டிய பொருட்கள் அதிக விலையுயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில்லை. கண்ணாடிகள்,உலோகம் மற்றும் பளபளப்பான அறைகளில் மரநாற்காலி, மூங்கில் நாற்காலிகள் என்று இயற்கையான பொருட்களால் செய்யப்பட்ட பொருட்களால் நிரம்புவதால் உங்களுக்கு ஒரு நிறைவு ஏற்படுவதை உணர்வீர்கள்.

வீட்டு அலங்காரம்
வீட்டு அலங்காரம்Gemini image

6. நிலைவாயில்

நீங்கள் வீட்டின் உள்ளே நிலைவாசல் வழியாக நுழையும் போது உங்கள் வீட்டு வாசலில் ஒரு பென்ச் அல்லது ஒரு மரநாற்காலி என்று அமர்வதற்காக இருக்கிறதா அல்லது நம் பைகளை வைக்க ஒரு கூடை இருக்கிறதா என்று கவனிக்கவும்‌. இதனால் நாம் வெளியிலிருந்து உள்ளே நுழையும்போதே ஒருவித சௌகர்யமான உணர்வைப் பெறுவோம்.

இதையும் படியுங்கள்:
எறும்புகள் வீட்டை முற்றுகையிடுவது ஏன்? தடுக்கும் எளிய வழிகள்!
வீட்டு அலங்காரம்

7. நுழைவாயில் கதவு

நாம் உள்ளிருந்து பார்க்கும் போது வாசலில் நுழையும் நபரை நம்மால் சுலபமாக பார்க்க முடியும் என்ற அளவிற்கு நம் வீட்டு வாசல் கதவு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதனாலேயே நுழைவாயில் உனக்கு எதிராக உட்காரும் படியான இருக்கைகளை வைப்பது சிறந்தது.

8. மணம்

ஒரு அறையில் இதமான சூழல் இருக்க வேண்டுமென்றால் அந்த அறையில் நமக்கு இதமான வாசனை இருக்க வேண்டும்‌ அதற்காக மிகவும் அதிகமான அளவில் மணமூட்டிகளை பயன்படுத்தாமல் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தாலேயே கூட இதமான மணத்தை தர முடியும். நெடி தரக்கூடிய மணங்கள் தேவையில்லை.

9. அறையில் எல்லா இடங்களையும் நிரப்புதல்

ஒரு அறையில் அளவிற்கு மீறி பொருட்களைத் திணித்து வைக்கக் கூடாது. உங்கள் அறையின் செல்ஃப் ஒவ்வொன்றிலும் பூச்சாடி, செடி மற்றும் மெழுகுவர்த்தி என்று அனைத்து இடங்களிலும் வைத்தால் அது கடை போன்ற அமைப்பை ஏற்படுத்தும்‌ சில இடங்களை வெறுமையாகவே வைப்பதால் கூட உங்கள் கண்களுக்கு இதமான உணர்வைப் பெறுவீர்கள்.

இதையும் படியுங்கள்:
இதெல்லாம் தெரியாம போச்சே! வாழ்க்கையை எளிதாக்கும் 15 லைஃப் ஹேக்ஸ்!
வீட்டு அலங்காரம்

10. உணர்வுபூர்வமாகவும் வரும் உடல் பூர்வமாகவும்

உங்கள் வீட்டில் உங்கள் தாத்தா நினைவாக உடைந்த நிலையில் உள்ள நாற்காலி, ஒன்றுமே புரியாத பெயிண்டிங், பழைய மங்கிய விளக்குகள் என்று பலரின் நினைவுகள் குறிக்க பழைய பொருட்களை அறையில் நிரப்பாதீர்கள்‌. நீங்கள் இருக்கும் உங்கள் வீடு உங்களுக்கு உணர்வுபூர்வமாக வரும் உடல் பூர்வமாகவும் சௌகர்யமானதாக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் கவனத்தில் வையுங்கள்.

மேற்கூறிய பத்து விஷயங்களில் நீங்கள் கவனம் வைத்தால் உங்கள் வீடு சொர்க்கமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உங்கள் வீட்டு அலங்காரம் அமைப்பைச் சிறிய மாற்றங்கள் மூலம் சீரமைத்து, உடல் மற்றும் மன ரீதியான முழுமையான அமைதியையும் சௌகரியத்தையும் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com