ஹோட்டலை விட வீட்டு சாப்பாடுதான் பெஸ்ட்: நிபுணரின் விளக்கம் இதோ!

Home Food
Home Food
Published on

பொதுவாக ஹோட்டல் சாப்பாடை விட வீட்டு சாப்பாடு தான் நல்லது என்று பலருக்கும் தெரியும். தொடர்ந்து ஹோட்டல் சாப்பாடை உட்கொள்வதால் உடல்நல பாதிப்புகள் ஏற்படக் கூடும். இருப்பினும் எதனால் இந்த வித்தியாசம் என்று உங்களுக்குத் தெரியுமா? இப்போது தெரிந்து கொள்ளுங்கள்!

“உயிர் வாழ்வதற்காக உண்; உண்பதற்காக உயிர் வாழாதே” என்றொரு பழமொழியின் படி, நாம் உயிர் வாழ உணவு அவசியமான ஒன்று. அடிப்படைத் தேவைகளில் கூட முதலிடம் என்றும் உணவுக்குத் தான். இந்தச் சூழலில் நாம் உண்ணும் உணவு நல்லவையாக இருக்க வேண்டுமல்லவா! அதற்கு எப்போதுமே வீட்டு சாப்பாடு தான் நல்ல தேர்வு. வீட்டில் சமைக்கப்படும் சமையலில் சுவை குறைவாக இருந்தாலும், எந்தவித கலப்படமும் இருக்காது. மேலும், குறைந்த நபர்களுக்கு சமைக்கப்படுவதால், வீட்டு சமையல் தரமாகவும் இருக்கும்.

ஹோட்டலில் சமைக்கப்படும் உணவுகளில் செயற்கை சுவையூட்டிள் மற்றும் செயற்கை நிறமூட்டிகளும் பயன்படுத்தப்படுவதால், அது உடல் நலத்திற்கு தீங்கானது. வேலையின் காரணமாக வெளியூரில் தனியாகத் தங்கியிருப்பவர்களுக்கு ஹோட்டல் உணவு தான் பிரதான உணவாக இருக்கிறது. இதனுடைய பாதிப்பு இப்போது தெரியாது. இருப்பினும், வருங்காலத்தில் இதன் பாதிப்பை நம்மால் உணர முடியும். அந்த சமயத்தில் அடிக்கடி ஹோட்டலில் சாப்பிட்டு நம் உடல்நலத்தை நாமே கெடுத்துக் கொண்டோமே என்று வருந்துவதில் எந்தப் பயனும் இருக்காது.

ஹோட்டல் உணவுகள் குறித்து உணவுத் துறை நிபுணர் சரவணன் அவர்களிடம் பேசிய போது, அவர் அளித்த தகவல் இதோ உங்கள் பார்வைக்கு.

“நாம் வீட்டில் சமைக்கும் போது ஒவ்வொரு நாளும் சுவை வேறுபட்டுக் கொண்டே இருக்கும். ஒரு நாள் காரம் அதிகமாக இருக்கும்; ஒருநாள் புளிப்பு அதிகமாக இருக்கும். ஏனெனில் தினந்தோறும் சரியாக ஒரே அளவில் நாம் மிளகாய், புளி மற்றும் சில மசாலா பொருள்களை எடுக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு நாளும் தேவையான பொருள்களின் அளவு ஏறக்குறையத் தான் இருக்கும். நம் உடலை சீராக வைத்துக் கொள்ள சுவையில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்கள் அவசியம் தேவை.

இதையும் படியுங்கள்:
உண்ணும் உணவு மற்றும் சாப்பிடும் முறை குறித்து சாஸ்திரங்கள் கூறுவதென்ன?
Home Food

ஆனால், ஹோட்டலில் இப்படி நடக்க வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் தினந்தோறும் எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என்ற கணக்கு இருப்பதால், தேவையான பொருள்களின் அளவு எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். இதனால் உணவின் சுவையும் எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கும். இதுதவிர செயற்கை சுவையூட்டிகளும் பாதிப்பை அளிக்கிறது. என்றாவது ஒருநாள் ஹோட்டலில் சாப்பிடுவது என்றால் பரவாயில்லை. அடிக்கடி ஹோட்டல் சாப்பாடு ஆபத்தான ஒன்று தான். ஒருவேளை தினமும் ஹோட்டலில் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருந்தால், தொடர்ந்து ஒரே ஹோட்டலில் சாப்பிட வேண்டாம். அடிக்கடி சாப்பிடும் ஹோட்டலை மாற்றிக் கொள்வது நல்லது. ஏனெனில், சுவையானது ஒவ்வொரு ஹோட்டலுக்கும் வேறுபடும்.”

நம்மால் முடிந்த அளவிற்கு ஹோட்டல் உணவுகளைத் தவிர்ப்போம். நல்லவற்றை உண்டு நலமுடன் வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com