Gen Z-ன் புதிய டேட்டிங் மந்திரம்: பிடிச்சா பேசு... இல்லைன்னா விலகு!

Hot take dating
Hot take dating
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ஹாட் டேக் டேட்டிங் (Hot take dating) என்பது 2026ல் பிரபலமாகி வரும் ஒரு டேட்டிங் முறையாகும். இதில் முதல் சந்திப்பிலேயே தங்களின் அரசியல், சமூகம் அல்லது வாழ்க்கைக் கொள்கைகள் குறித்த தீவிரமான, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து, இருவருக்கும் இடையே இணக்கம் (compatibility) இருக்கிறதா என்பதை உடனடியாக தீர்மானிக்கிறார்கள். இது நேரத்தை மிச்சப்படுத்தவும், உண்மையான இணக்கத்தை கண்டறியவும் உதவுவதாக சொல்லப்படுகிறது.

இப்போது இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக ஹாட் டேக் டேட்டிங் என்னும் புதிய கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. பொதுவாகவே மக்கள் ஒருவரை பிடித்திருக்கிறது என்றால் ஆரம்பகட்டத்தில் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை மட்டுமே பேசுவதும், நடந்து கொள்வதுமாக இருந்து ஒருவரையொருவர் இம்ப்ரெஸ் செய்யவே விரும்புவார்கள்.

ஆனால் இந்த புதிய முறையில் முரண்பாடான கருத்துக்களை ஆரம்பத்திலேயே வெளிப்படையாக பேசி தங்களுக்கு செட் ஆகாத அதாவது பொருந்தாத நபர்களை ஆரம்பத்திலேயே வடிகட்டுவதை இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகிறார்கள்.

நேரடித் தன்மை:

இதில் முதல் தேதியிலேயே தங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் மற்றும் கொள்கைகளைத் தெளிவாக கூறி விடுவதால் வீணான நேர விரயம் தவிர்க்கப்படுவதாக எண்ணுகிறார்கள்.

வெளிப்படை தன்மை:

இன்றைய genz தலைமுறையினர் எதைப் பற்றியும் சுற்றி வளைத்துப் பேச விரும்புவதில்லை. இதுதான் நான்! எனக்கு இதுதான் பிடிக்கும்! வேண்டும்! என்ற தெளிவான மனநிலைக்கு வந்துள்ளதால் டேட்டிங் செயலிகளில் நடக்கும் அர்த்தமற்ற உரையாடல்களை குறைத்து ஆழமான மற்றும் உண்மையான புரிதலை கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.

உண்மைத்தன்மை:

தாங்கள் யார் என்பதை மறைக்காமல் தங்களின் உண்மையான கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் இருவருக்கும் கருத்து ஒற்றுமை இருக்கிறதா என்பதைக் கண்டறிகிறார்கள். ஒரு உறவு நீண்ட காலம் நிலைக்க வேண்டுமானால் இந்த பண்பு மிகவும் அவசியம். இது பின் நாட்களில் தேவையற்ற மனசு கசப்புகளை தவிர்க்க உதவும் என்று நினைக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வீட்டுக்குள் பூரான் புகுந்து பயமுறுத்துதா.. இந்த எளிய வழிமுறைகளை செஞ்சா இனிமே எட்டி கூட பார்க்காது!
Hot take dating

பொருத்தமற்றவர்களை வடிகட்டுதல்:

தீவிரமான கருத்துக்களைப் பகிர்வதன் மூலம் முரண்பட்ட கருத்துக்களை கொண்டவர்களுடன் பழகுவதை தவிர்க்க முடிகிறதாக எண்ணுகிறார்கள். இதன் மூலம் பொருந்தாதவருடன் அதாவது பொருத்தமற்ற இணைகளை (Incompatible Matches) ஆரம்பத்திலேயே நீக்குவதை சிறந்ததாக நினைக்கின்றனர். நீண்ட நாட்கள் பழகி பிறகு ஒத்து வராது என்று பிரேக்-அப் செய்வதை விட முதல் சந்திப்பிலேயே தங்கள் எண்ணங்களை தெளிவுபடுத்துவது சிறந்தது என்று எண்ணுகிறார்கள்.

டின்டர் அறிக்கை - Tinder Report

2025 -26 ஆம் ஆண்டிற்கான டின்டரின் 'Year in Swipe' அறிக்கையின்படி இந்த முறை பிரபலம் அடைந்து வருகிறது. ஆனால் இந்த அணுகுமுறை சில நேரங்களில் தேவையற்ற விவாதங்களுக்கு வழிவகுக்கலாம். எனவே கருத்துக்களை தெரிவிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஹாட் டேட்டிங்கின் மூலம் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து, தங்களின் உண்மையான கருத்துக்களை ஆரம்பத்திலேயே கூறிவிடுவதும், அடிப்படை மதிப்புகள் ஒத்துப்போகும் நபர்களை விரைவாகக் கண்டறியவும் இது உதவுவதாக நம்புகிறார்கள். இது 2k கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமாகி வரும் ஒரு அணுகுமுறையாகும். இது சாதாரணமாகப் பேசும் பழக்கத்தை மாற்றி ஆழமான உரையாடல்களை ஊக்குவிக்குவிக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com