பழைய தங்க நகை கறுத்துப்போச்சா? வீட்டிலேயே புதிது போல மின்ன வைக்க எளிய டிப்ஸ்!

பீரோவில் வைக்கும் நகைகள் மங்குவதை தடுத்து, எடை குறையாமல் பராமரிக்கும் ரகசிய வழிகள்.
தங்க நகை
தங்க நகைGemini image
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on

ங்கம் தமிழர்களின் பண்பாட்டின் அடையாளமாகவும், சமூக மதிப்பின் குறியீடாகவும் சிறந்த முதலீடாகவும் இருப்பதால் சேமிப்பு என்றால் முதலில் தங்கம் வாங்குவது என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது.

ஆனால் இன்றைய ஏற்ற இறக்கமான தங்கத்தின் விலை காரணமாக பழைய நகைகளை கொடுத்து புதிதாக வாங்க முடியாத நிலையில் பலரும் இருக்கின்றனர். அந்த வகையில் தலைமுறை தலைமுறையாக வீட்டில் இருக்கும் தங்க நகைகளை புதிது போல மாற்றும் எளிய டிப்ஸ்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

வெல்வெட் துணி சிறந்த பாதுகாப்பு

மென்மையான உலோகமான தங்கத்தில் 22 கேரட் நகைகள் செய்யும்போது சிறிதாக உரசினால் கூட கீறல்கள் விழ அதிக வாய்ப்புள்ளது. ஆகவே ஒன்றுடன் ஒன்று வைப்பதை தவிர்க்க வேண்டும். இரும்பு பெட்டிகளில் இருக்கும் ஈரப்பதம் காரணமாகவும் `ஆக்ஸிடேஷன்` என்ற ரசாயன மாற்றத்தாலும் நகைகள் கூட கறுத்து போகக் கூடும் என்பதால் நேரடியாக தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை இரும்பு பீரோவில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

மரப்பெட்டியின் உட்புறம் வெல்வெட் துணி வைத்து ஈரப்பதத்தை உறிஞ்ச `சிலிகா ஜெல்' பாக்கெட்டுகளை போட்டு வைத்து அதன் பிறகு தங்க நகைகளை வைத்தால் கருத்துப் போகாமல் எப்பொழுதும் புதிதுபோல பொலிவாக காட்சி தரும். மேலும் மரப்பெட்டியே தங்க நகை பொலிவிற்கு சிறந்த பாதுகாப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தங்க நகைகளை புதிதாக்கும் பூந்திக்கொட்டை

நம் உடலில் இருந்து வெளியேறும் அதிகப்படியான வியர்வையின் காரணமாக நகைகளில் வியர்வைகள் உப்பு படிவங்களாக படிந்து பொலிவிழக்கச் செய்கின்றன. அதனால் அழுக்கு மற்றும் உப்பை நீக்கி நகைகளை சுத்தப்படுத்த பூந்திக்கொட்டை ஊற வைத்த நீரில் நகைகளை ஊறவைத்து சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது உப்பு படிவங்கள் அழுக்குகள் நீங்கி தங்க நகைகள் புதிது போல காட்சி தரும்.

தங்க நகை
தங்க நகைGemini image

நகை பாலிஷில் அமிலக்கரைசலுக்கு 'நோ' சொல்லுங்க

பெரும்பாலான நகைக் கடைகளில் நகை பாலிஷிற்கு `அக்வா ரெஜியா` எனப்படும் அமிலக்கரைசல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த அமிலக்கரைசல் நகைகளை புதிது போல ஆக்கினாலும் மேற்பரப்பில் தேய்மானத்தை ஏற்படுத்தி எடை குறைப்பை உண்டாக்கும்.

இதையும் படியுங்கள்:
மொபைல் திரைக்குள் தொலைந்த நிம்மதி: தாத்தா-பாட்டி சொன்ன எளிய தீர்வு!
தங்க நகை

ஆகவே இந்த அமிலக்கரைசலில் பாலிஷ் போடும் கடைகளை தவிர்த்து நம்பிக்கையான மற்றும் உங்களுக்கு தெரிந்த கடைகளில் கொடுத்து தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்படும் தங்க நகையை பாலீஷ் செய்து பளிச்சென மாற்றலாம்.

கண்டிப்பாக காப்பீடு அவசியம்

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தற்போதைய காலகட்டத்தில் தங்க நகைகளுக்கு காப்பீடு என்பது மிகவும் அவசியமாகும். மேலும் லாக்கரில் நகைகளை வைக்கும் போது ஒவ்வொரு நகையின் புகைப்படம், மற்றும் அதன் பட்டியலை எடுத்து வைத்துக் கொள்வதோடு உங்கள் செல்போனில் டிராப் பாக்ஸ், கூகுள் டிரைவில் சேமித்து வைக்க வேண்டும். இது எதிர்பாராத சம்பவங்கள் அல்லது திருட்டு நடைபெறும் போது சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உதவிகரமாக இருக்கும்.

ரசீதும் எண்ணும் முக்கியம்

தங்க நகை வாங்கும்போது வழங்கப்படும் ரசீது தங்கத்திற்கான சட்டபூர்வமான உரிமை ஆவணமாக இருப்பதாலும், மேலும் ரசீது இல்லாமல் வாங்கினால் ஜிஎஸ்டி வரியை தவிர்க்கலாம் என நினைத்து தங்கத்தை வாங்குவது மிகப்பெரிய தவறாகும்.

இதையும் படியுங்கள்:
செம்பு பாத்திரத்தில் கறையா? விலையுயர்ந்த கிளீனர் தேவையில்லை... இதோ எளிய ஹேக்!
தங்க நகை

ஏனெனில் தங்க நகை ரசீதில் தான் எடை, செய்கூலி சேதாரம், ஆறு இலக்க HUID எண் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆகவே ஒவ்வொரு தங்க நகைகளின் ரசீதுகளையும் டிஜி லாக்கரிலோ அல்லது மின்னஞ்சலிலோ சேமித்து வைப்பது எதிர்கால பாதுகாப்புக்கு உத்தரவாதம் ஆகும்.

இந்தியா வருடம் தோறும் 700 முதல் 800 டன் தங்கம் வாங்குகிறது. உலக நாடுகளில் முதலிடத்தில் இந்தியா இருப்பதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை கூறுகிறது. அவ்வாறு வாங்கப்படும் தங்கத்தை முறையாக பராமரிப்பது பாதுகாப்பதும் ஒவ்வொரு குடிமக்களின் இன்றியமையாத கடமையாகும்.

தலைமுறை தலைமுறையாக வைத்திருக்கும் தங்க நகைகள் கறுக்காமல், எடை குறையாமல் எப்போதும் புதிது போல மின்னும் பராமரிப்பு நுட்பங்களை வாசகர்கள் அறிந்துகொள்வார்கள்.

logo
Kalki Online
kalkionline.com