கருகிய பாத்திரத்தை தேய்க்காமல் பளிச்சென மாற்றும் எளிய வழிகள்! பாத்திர வகைக்கேற்ப டிப்ஸ்!

பேக்கிங் சோடா முதல் வினிகர் வரை, கை வலிக்காமல் கருகிய கறைகளை அகற்றும் முறைகள்!
பாத்திரம்
பாத்திரம்Gemini image
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on: 

சமையல் செய்யும்போது நிதானம் தவறி கவனக் குறைவாக இருந்தால் பருப்பு, சாதம், பால், குழம்பு அடிப்பிடித்து பாத்திரத்தின் அடிப்பகுதி கருகிவிடும். அப்போது பாத்திரத்தை தேய்ப்பது கடினமாக வேலையாக மாறிவிடும். அந்த வகையில் அழுந்த தேய்க்காமல் பாத்திரத்தின் வகைகளை பொறுத்து கருகிய பாத்திரங்களை பளிச்சென மாற்றும் எளிய வழிகளை இப்பதிவில் காண்போம்.

கருகிய உணவு படலத்தை மென்மையாக்க முதலில் பாத்திரம் கழுவும் திரவம், வெந்நீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊறவைத்து மென்மையான நார் அல்லது பஞ்சால் தேய்த்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதும் கறைகள் போகவில்லை என்றால் இரவு முழுவதும் ஊறவைத்து பாத்திரத்தை தேய்க்க வேண்டும். ஒட்டாத பூச்சு கொண்ட பாத்திரங்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.

கருகிய பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று மேசை கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து கறை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் சுமார் 10 - 15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிட்டு முழுமையாக ஆறியதும் தண்ணீரை வெளியேற்றி மென்மையான பஞ்சு கொண்டு தேய்க்க வேண்டும்.

பேக்கிங் சோடாவின் மென்மையான காரத் தன்மையால் கடுமையான கறைகளும் அழுந்த தேய்க்காமல் காணாமல் போய்விடும். அலுமினிய பாத்திரம் நிறம் மாறக்கூடும் என்பதால் இம்முறை அலுமினிய பாத்திரங்களுக்கு பொருந்தாது.

சிறிதளவு புளியை தண்ணீர் சேர்த்து கெட்டியாக குழைத்து கருகிய பகுதியில் நன்றாக பூசி 15 முதல் 30 நிமிடங்கள் ஊறவைத்து மென்மையான பஞ்சால் தேய்த்து வெந்நீரில் கழுவ புளியில் இருக்கும் டார்டாரிக் அமிலம் கருகிய உணவு படலத்தை தளர்த்தி விடாப்படியான கறைகளையும் விரட்டிவிடும். செம்பு, பித்தளை துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்களுக்கு இம்முறை மிகச்சிறந்த முறையில் பலன் அளிக்கும்.

பாத்திரம்
பாத்திரம்Gemini image

ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி வெட்டிய பகுதியில் சிறிதளவு உப்பு தேய்த்து புதிதாகவும் லேசாகவும் இருக்கும் கறையுள்ள பாத்திரத்தின் கருகிய பகுதியில் மூன்று நிமிடங்கள் வட்டமாக தேய்த்து அதன் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கறையை தளர்த்தி எளிதாக அகற்றிவிடும். தடிமனான கருப்பு படலத்திற்கு இம்முறை சரிவராது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
அடுப்பு பக்கத்துல இந்த அழுக்கு இருக்கா? பூச்சி தொல்லை முதல் தீ அபாயம் வரை எச்சரிக்கை!
பாத்திரம்

கருகிய பாத்திரத்தில் அடிப்பகுதி மூழ்கும் அளவு தண்ணீர் மற்றும் வெள்ளை வினிகர் சேர்த்து கொதிக்கவிட்டு 30 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் மெதுவான பஞ்சால் தேய்த்து கழுவினால் வினிகரில் இருக்கும் அசிட்டிக் அமிலம் படிந்த உணவு கறைகளை மென்மையாக்கி பாத்திரத்தை பளிச்சென மாற்றிவிடும். வார்ப்பு இரும்பு பாத்திரத்திற்கு இம்முறை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கருகிய பாத்திரத்தில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரம் கழுவும் மாத்திரையை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து ஆறிய பிறகு மென்மையான பஞ்சால் தேய்க்க பாத்திரம் கழுவும் மாத்திரைகளில் இருக்கும் சுத்தம் செய்யும் பொருட்கள் கறை படிந்த உணவுகளை தளர்த்தி ஒட்டிய உணவுகளை அகற்றி பாத்திரத்தை சுத்தமாக்கும்.

இம்முறையை பயன்படுத்தும்போது பாத்திரத்தை நன்றாக சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவுவதோடு உற்பத்தியாளர் பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
தண்ணீர் பாட்டிலில் துர்நாற்றமா? தூக்கி எறியும் முன் இதைச் செய்யுங்க!
பாத்திரம்

அமிலத்தன்மை கொண்ட பொடியான பேக்கிங் செய்வதற்கு பயன்படுத்தப்படும் கிரீம் ஆப் டார்டரை உலோகப் பொருட்கள் மற்றும் பீங்கான் மேற்பரப்புகளில் உள்ள கருகிய கறையுள்ள இடத்தில் தூவி சிறிதளவு தண்ணீர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து விழுதாக குழைத்து கறையுள்ள இடத்தில் நன்கு தடவி மென்மையான பஞ்சால் தேய்க்க கறைகள் அகன்று விடும். பொதுவாக கிடைக்காத இந்த பொருளை மாற்று வழியாக கையாளலாம்.

கருகிய பாத்திரங்களை சுத்தம் செய்யும்போது கருகிய படலத்தை மென்மையாக்குவதுதான் சரியான தீர்வாகும். அழுந்த தேய்ப்பது மட்டும் தீர்வாகாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

கை வலிக்கக் கருகிய பாத்திரங்களைத் தேய்க்கத் தேவையில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப (அலுமினியம், பித்தளை, ஸ்டீல், நான்-ஸ்டிக்) சரியான பொருளைப் பயன்படுத்தி, சிரமமின்றி பாத்திரங்களைப் பளிச்சிட வைக்கும் வழிமுறைகளை அறிந்துகொள்வீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com