கார்த்திகை தீபம் ஸ்பெஷல்... ஈஸியாக விளக்கை புதிது போல மாற்றலாம்..!

Lamp
Lamp
Published on

நாடு முழுவதும் இன்று பெரிய கார்த்திகை தீபம் வழிபட்டு வரும் நிலையில், விளக்கை புதிதாக மாற்ற சூப்பர் டிப்ஸை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்து மத நம்பிக்கையின் படி அனைத்து மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை தான். அப்படி ஒரு மாதம் தான் கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் தான் ஐயப்ப சீசனும் வரும். அதாவது இந்த மாதம் கடும் குளிர், மழை என இருந்தாலும் பக்தர்கள் மண்டல விரதம் இருந்து, மாலையணிந்து கேரளாவிற்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். அப்படிப்பட்ட விஷேசம் நிறைந்த இந்த மாதத்தின் மற்றொரு சிறப்பு தான் கார்த்திகை தீபம்.

இந்த தீபத்திற்கு பிரசித்தி பெற்ற தலம் திருவண்ணாமலை ஆகும். சபரிமலையிலும் மகர ஜோதி ஏற்றப்பட்டாலும், அண்ணாமலையாரின் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தீபம் அணையாமல் 1 வாரம் ஒளிர்வதே அதிசயமானதாகும்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக திகழ்ந்து வருகிறது. நினைத்தாலே முக்தி தரும் தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலை இருந்து வருகிறது. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பௌர்ணமியும் இணைந்து வரக்கூடிய நாளில் தான் தீபம் ஏற்றுவது வழக்கம் ஆகும். அப்படி இந்த நாளில் தான் மக்களும் வீடுகள் முழுவதிலும் விளக்கேற்றி ஒளிர செய்வார்கள்.

கார்த்திகை தீபம் 2024:

2024ஆம் ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருநாள் இன்று டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்.

இதையும் படியுங்கள்:
இத தெரிஞ்சுகிட்டா, இப்படி இருக்கும் கேஸ் அடுப்பு இப்படி ஆகிடும்! 
Lamp

விளக்கேற்றும் நேரம் என்ன?

இன்று (டிசம்பர் 13ஆம் தேதி) சரியாக மாலை 6 மணிக்கு நல்ல நேரமாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தீபம் ஏற்றுவது சிறப்பாகும்.

பொதுவாக தீபத்திருநாளில் விளக்கேற்றுவது வழக்கம். பலரது வீடுகளில் விளக்கு எங்கேயோ கிடந்திருக்கும். தற்போது அதை தேடி எடுத்து தூசி தட்டி வைத்திருப்பீர்கள். மேலும் அதை சுத்தம் செய்ய பலரும் பல முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தற்போது வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியாக விளக்கை புதிது போல் மாற்ற டிப்ஸை தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
இப்படி செய்தால், பழைய நான் ஸ்டிக் தவாவை புதியது போல மாற்றலாம்! 
Lamp

தேவையான பொருட்கள்:

சர்க்கரை - 1 ஸ்பூன்

உப்பு - 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு - அரை பழம்

பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்

பாத்திரம் விளக்கும் ஜெல் - தேவையான அளவு

இந்த 5 பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கிண்டி கொள்ளவும். அப்போது நுரை ஏற்படும் இதில் நீங்கள் பார்ட் பார்ட்டாக கழட்டி வைத்திருந்த விளக்கை உள்ளே போட்டு பிரட்டி பிரட்டி எடுக்கவும், கை வலிக்க தேய்க்க கூட தேவையில்லை. சிறுது நேரம் அந்த கலவையில் வைத்தாலே போது விளக்கு புதிதாக மாறிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com