

Clean the house for Pongal: பொங்கல் பண்டிகை வர இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. அதற்குள் வீட்டை எப்படி சுத்தம் செய்வது என்று நினைப்பவர்களுக்கு , துடப்பத்தை மல்டி பர்ப்பஸ் ஆர்கனாக வைத்துக் கொண்டு அதனுடன் சாக்ஸை சேர்த்து பொங்கலுக்கு வீட்டை ஈஸியாக சுத்தம் செய்வது எப்படி என்பதற்கான டிப்ஸை இப்பதிவில் காண்போம்.
துடைப்பால் தான் வீட்டை பெருக்குகிறோம் .சுத்தம் செய்கிறோம். அது ஒரு மல்டி பர்ப்பஸ் பொருள் அதைப்பயன்படுத்தி வீட்டை சுத்தம் செய்யலாம். வளையும் தன்மையுடைய வீடுபெருக்கும் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு அதன் நுனியில் பழைய சாக்ஸை மாட்டி சிண்டுபோல் கட்டி விட வேண்டும். இதைக் கொண்டு இடுக்கு மற்றும் வளைவான பகுதிகளை நன்றாக சுத்தம் செய்து விடலாம். அது வளைந்து நெளிந்து சுத்தம் செய்வதற்கு வசதியாக இருக்கும். அந்த சாக்ஸின் இடையில் சிறிது ஓட்டை இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள் .
அந்த சாக்ஸின் ஓட்டையில் இரண்டு சூடம் அல்லது பாச்சை உருண்டையை பொடித்துப் போட்டு கையால் தட்டி பார்த்தால் அதன் துகள்கள் நன்றாக வெளிவருவதை உணரலாம். அதைக் கொண்டு மேஜையின் அடியில் உள்ள பகுதிகளில், ஃபேன் போன்றவற்றை சுத்தம் செய்தால் மலைச்சாரல் போல் இருந்த ஒட்டடை எல்லாம் கீழே விழுந்து நன்றாக சுத்தமாகும்.
வீட்டிலும் நல்ல ஃப்ராக்ரன்ஸ் வரும் . சிலந்தி வலைகள் எல்லாம் காணாமல் போகும். அது வளைந்து நெளிந்த சுத்தம் செய்வதால் கை வலி வராது. பிறகு ஈர சாக்சால் நன்றாக துடைத்துவிட்டு, பிறகு துணியில் டெட்டால் போட்டு துடைத்து சுத்தம் செய்துவிட்டு ஃபேனைப் பார்த்தால் எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்று சொல்வது போல் பளிச்சென்று இருக்கும். சாக்ஸைப் பார்த்தால் அதுவும் அப்படித்தான் சொல்லும். அது அழுக்காகி விடும். துடப்பத்திற்கு எந்தவித பாதிப்பும் வராது.
சிலருக்கு தென்னை துடப்பத்தை கையில் எடுத்தால் ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜி, கொப்பளம் போன்றவை வரும். அதற்கு அதன் அடிப்பகுதியில் கைப்பிடிக்கும் பகுதியில் சாக்ஸை போட்டு ஒரு ரப்பர் பேண்டை மாட்டி விட்டு சுத்தம் செய்தால் எந்த அலர்ஜியும் வராமல் கைக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
ஒரு மீடியம் சைஸ் ஸ்பாஞ்ச்சை எடுத்து அதன் நடுவில் ரோடு போல ஒரு கோடு போட்டுவிட்டு அதற்குள் சர்ப் எக்ஸெல் அல்லது ஏதாவது ஒரு கிளீனிங் பவுடரை கொட்டி நன்றாக ஷேக் பண்ணி விடவும். ஒரு பாத்திரத்தில் பச்சைத் தண்ணீரை வைத்து அதில் இந்த ஸ்பாஞ்ச்சை முக்கி எடுத்து பவுடர் நன்றாக கரைந்து வரும் பொழுது கிட்சன் மேடைப் பகுதியில் உள்ள டைல்ஸ் மற்றும் எந்தெந்த பகுதியில் டையில்ஸ் உள்ளதோ அவற்றையெல்லாம் துடைக்க சுத்தமாகி விடும்.
அடுத்து பழைய பல் துலக்கும் பிரஷ்சை வைத்து நிலை வாசல் படியில் உள்ள தூசுகளை எல்லாம் சுத்தம் செய்தால் நன்றாக தூசு அதில் ஒட்டிக்கொண்டு வந்து விடும். கொஞ்சம் ஒட்டிக் கொண்டுள்ள தூதுகளும் காற்றோடு பறந்துபோய்விடும் .பிறகு சோப்பு நீர் உள்ள ஸ்பாஞ்சால் நுரையுடன் துடைத்துவிட்டு பிறகு நன்றாக அந்த ஸ்பான்ஜை கழுவி துடைக்க நிலைப்படி , வாசல் கதவுகள் அனைத்தும் பளிச்சென்று மின்னும்.
வீட்டில் ஒட்டடை அடிக்க ஒட்டடை குச்சி இல்லை என்றால், பழைய துடப்பத்தை எடுத்து அதன் கைப்பிடியை கட் பண்ணினால் அதில் முத்துக்கள் போல் இருக்கும். அதனுடன் ஒரு பழைய மாப் ஸ்டிக்கை பொருத்தி தோட்டில் திருகாணி திருகுவது போல் திருகினால் அதில் நன்றாக ஒட்டிக்கொண்டு விடும் . மாப் ஸ்டிக் இல்லை என்றால் வேறு எந்த உயரமான ஸ்டிக்கையும் அதில் ஒட்டிக் கொள்ளுமாறு வைத்து திருகி மாடியில் மற்றும் உயரமான பகுதிகளில் உள்ள ஒட்டடைகளை அடித்து வீட்டை சுத்தம் பண்ணலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து, அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் பாத்திரம் தேய்க்கும் லிக்யூடு சேர்த்து ,அவைகளுடன் ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் ஒரு வாரம் வரை அதை பயன்படுத்தலாம். அதனுடன் வினிகரையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை வரும்.
இந்த ஹோம்மேடு லிக்வீடை வேஸ்ட் பவுடர் டப்பாவில் ஊற்றி வைத்து டைல்ஸை சுத்தம் செய்ய டைல்ஸ் சுத்தமாக இருக்கும். மொத்தத்தில் பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்வதற்கு இந்த எளிமையான எட்டு டிப்ஸ்களை பின்பற்றினால் கைக்கு எந்த தீங்கும் வராமல் வீட்டை பளிச்சென்று வைத்துக் கொள்ளலாம். பண்டிகையையும் சிறப்பாகக் கொண்டாடலாம்.