ரயில் பயணத்தின்போது பொது டிக்கெட்டை எடுத்துவிட்டு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் (reserved compartment) பயணிக்கலாம். இந்திய ரயில்வேயில் உறுதிப்படுத்தப்பட்ட கன்ஃபார்ம் டிக்கெட்டை பெறுவதற்கான எளிய வழிகள் உள்ளன. ஆன்லைன், ஆஃப்லைன் இரண்டிலுமே டிக்கெட் முன்பதிவு பெறும் வாய்ப்பு உள்ளது. இது ரயில் பயணத்திற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு கூட உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை பெரும் வசதியை வழங்குகிறது.
போக்குவரத்து வசதியில் குறைவான பட்ஜெட்டில் வசதியான பயணத்தை கொடுக்கும் ரயில்வே துறை நாம் அவசரமாக பயணம் செய்யவேண்டி இருக்கும் சமயங்களில், டிக்கெட்டுகள் கிடைக்காதபோது கவலைப்பட வேண்டாம். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இருக்கையைப் பெற வசதிகள் உள்ளன.
இதற்கு IRCTC செயலியை திறந்து, 'விளக்கப்படம் காலியிடம்' விருப்பத்திற்கு செல்லவும். நாம் பயணம் செய்ய வேண்டிய ரயிலின் எண், ஏறும் ரயில் நிலையம் மற்றும் பயணம் செய்ய வேண்டிய தேதி உள்ளிட்ட 'விவரங்களைப் பெறு' என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது அந்த ரயிலில் உள்ள அனைத்து காலியான இருக்கைகளையும் அந்த செயலி காண்பிக்கும். தகவல் கிடைத்ததும் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டருக்கு சென்று அந்த இருக்கைகளில் ஒன்றை முன்பதிவு செய்ய முடியுமா என்று ரயில்வே ஊழியரிடம் கேட்கலாம். அவர்கள் அனுமதித்தால் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை வாங்கி வசதியாக பயணம் செய்யலாம். சில சமயம் டிக்கெட் கவுண்டரில் உள்ள ஊழியர் உங்கள் கோரிக்கையை நிராகரித்தால் கவலைப்படாமல் ஒரு பொது டிக்கெட்டை வாங்கி ரயிலில் ஏறி விடலாம்.
செயலி மூலம் முன்பு சரிபார்த்த பட்டியலில் இருந்து ஒரு காலி இருக்கையை கண்டுபிடித்து அங்கு உட்காரலாம். டிக்கெட் கலெக்டர் (TC) வந்ததும் உங்கள் நிலைமையை விளக்கிச் சொல்லி முன்பதிவு செய்யக் கேட்கலாம் . தேவையான கட்டண வித்தியாசத்தை செலுத்தி டிக்கெட் கலெக்டர் உங்களை அந்த இடத்திலேயே உட்கார அனுமதிக்கலாம். இம்முறையில் முன்பதிவு செய்யாமலே முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்.
டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்பொழுது, 'தானியங்கி மேம்படுத்தலை' கருத்தில் கொள்வது நல்லது. இது மிகவும் பயனுள்ள அமைப்பாகும். உதாரணத்திற்கு ஒரு ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு, 'இறுதி விளக்கப்படம்' தயாரிக்கப்பட்டதும் ஏசி கோச்சில் காலியாக இருக்கைகள் இருந்தால் நம் டிக்கெட்டை தானாகவே மேம்படுத்தலாம்.
இதற்கு எந்தக் கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பிரீமியம் பயண அனுபவத்தை நம்மால் அனுபவிக்க முடியும். அதிலும் குறிப்பாக, ஆஃப் பீக் பருவங்களில் குறைந்த வகுப்பு டிக்கெட்டின் விலைக்கு வசதியான அனுபவத்தைப் பெறலாம். இதன் மூலம் நீண்ட தூரம் பயணிக்கும்பொழுது வசதியாகவும், பயனுள்ளதாகவும் அந்தப் பயணம் இருக்கும்.