குழந்தைகளின் நகம் கடிக்கும் பழக்கத்தை போக்குவது எப்படி?

Nail biting children
Nail biting children
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

நகம் கடித்தல் (Nail Biting) மனிதர்களின் அசாதாரணப் பழக்க வழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை நோயாகவே கருதப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Onychophagia என்கின்றனர். மனஅழுத்தம், மன முரண், குழப்பம், தாழ்வு மனப்பான்மை, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்ற பலவித உள்ளியல் காரணிகளால் இப்பழக்கம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்த மேலும் சில தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.

சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கின்றது. நகம் கடிக்கும் பழக்கும் பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயேத் தொடங்கி விடுகிறது. பருவ வயதில் அனேகமானவர்கள் இப்பழக்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. அவர்கள் வயது வந்த பின்னரும் இப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள். பெரும்பான்மையினர் தம்மை மறந்த நிலையிலேயே நகங்களைக் கடிக்கிறார்கள். பலர் தமது இந்தச் செயற்பாட்டினால் திருப்தியின்மையை அடைந்தாலும், இந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

ஒரு குழந்தை தனது நகங்களைக் கடிக்கத் தொடங்குவது, அந்தக் குழந்தைக்கு அது வாழும் சூழலில் ஏதோ ஒன்றுடனோ அல்லது யாரோ ஒருவருடனோ ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதற்கான அறிகுறி என்கின்றனர்.

  • குழந்தைகளில் 30 சதவிகிதம் பேர் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர்.

  • வயது வந்தவர்களில் 10 முதல் 15 சதவிகிதம் பேர் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றன்ர்.

  • நகம் கடிக்கும் பழக்கம் ஆழ்மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த மார்க்கஸ் பைபெல். பெரியவர்களிடம் அனேகமாக இந்த ஆழ் மன முரண் தொழில் இடங்களிலோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ ஏற்படும்.

  • குழந்தைகளிடம் அவர்களைச் சுற்றியுள்ள பிரச்சனைகளின் பிரதிபலிப்பும், அவர்களது கடினமான நிலைகளின் உணர்ச்சி வெளிப்பாடுகளும் கூட நகம் கடித்தலுக்குக் காரணமாகின்றன என்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த சிசெல்லா டிரேயர் என்பவர். நகம் கடித்தலின் மூலம் அவர்கள் தமது மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்குக் கொடுக்கும் அதீத செல்லம் ஆபத்தில் முடியும் என்பது தெரியுமா?
Nail biting children

பொதுவாக,

  • தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்கள் நகங்களைக் கடிக்கிறார்கள்.

  • தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத இயலாமை நிலையைக் கொண்டவர்கள் தங்கள் நகங்களைக் கடிக்கிறார்கள்.

    என்று நகம் கடிப்பதற்கான் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைப் பருவத்திலேயேப் பெரும்பான்மையாகத் தொடங்குவதால், அப்பருவத்திலேயே குழந்தைகளைப் அப்பழக்கத்திலிருந்து விடுவிக்க முயற்சிக்க வேண்டும். அதற்குக் கீழ்காணும் சில வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்.

  • கைகளுக்கு வேறு வேலைகள் கொடுத்தல். (குழந்தைகள் கடிக்கக் கூடிய வளையம், பந்து போன்ற பொருட்களைக் கைகளில் கொடுக்கலாம்.)

  • மருந்துக்கடையில் கிடைக்கக் கூடிய கசப்புத் தன்மையுள்ள மருந்து, எண்ணெய், சாயம் போன்றவற்றில் ஏதாவதொன்றை விரல்களில் பூசி விடுதல் அல்லது விரல்களை அவற்றுள் தோய்த்தெடுத்தல்.

  • விரல்களை துணிகளால் சுற்றிக் கட்டி விடுதல் அல்லது கையுறை போட்டு விடுதல். (குழந்தைகள் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் பொழுதுகளில் நகங்களை அதிகமாகக் கடிக்கிறார்கள். அந்த நேரங்களில் இந்த முறையைக் கையாளலாம்.)

  • குறிப்பிட்ட சிறிது நேரத்துக்கு நகங்களைக் கடிக்காமல் இருந்தால், குழந்தைக்கு மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு பொருளைத் தருவதாக வாக்குறுதி கொடுத்தல்

  • நகங்களைப் பராமரித்தல் (நகங்களை ஒட்ட வெட்டி, நகங்களுக்குரிய அரத்தால் தேய்த்து, நகங்களை உரமாக்கக் கூடிய சாயம் பூசி, அதன் பின் எண்ணெய் பூசி, மசாஜ் செய்து விடலாம்.)

  • குழந்தைகளின் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கண்டிப்பதோ, பேசுவதோ நகங்களைக் கடிப்பதிலிருந்து மீளுவதற்கு இதுவரை உதவியதில்லை. குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தைத் தீர்க்க உதவிட வேண்டும்.

  • குழந்தைகள் தம்மை மறந்த நிலையிலேயே நகங்களைக் கடிக்கிறார்கள். அந்த நேரங்களில் பெற்றோர் அதை மெதுவாகச் சுட்டிக் காட்ட வேண்டும். பொது இடங்களில் நகங்களைக் கடித்தல் கூடாது என்பதைக் குழந்தைக்கு அன்போடு அறிவுறுத்த வேண்டும்.

  • நகம் கடித்தல் மன அழுத்தத்தின் வெளிப்பாடு. ஆதலால், பெற்றோர் குழந்தை ஏதாவது வகையில் குழந்தை மனம் வருந்திக் கொண்டிருக்கிறதோ என்பதையும், அந்த மன அழுத்தம் குழந்தைக்கு வீட்டில் ஏற்பட்டதா? அல்லது பள்ளியில் ஏற்பட்டதா? என்பதைக் கண்டறிந்து அதிலிருந்து குழந்தை மீளுவதற்கான வழிகளைச் செய்ய வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com