கறை படிந்த பழைய வெள்ளை சாக்ஸை நிமிடங்களில் புதுசு போல மாற்றும் சீக்ரெட் ட்ரிக் இதோ!

dirty-white-socks
dirty-white-socks
Published on

நமது அன்றாட ஆடைகளில் வெள்ளை நிற சாக்ஸ் முக்கியமான ஒன்று. என்னதான் பார்த்துப் பார்த்து ஆசையாக அணிந்து சென்றாலும், அதன் அடிப்பகுதியில் ஏற்படும் கருப்பு நிற அழுக்குகள் அவ்வளவு எளிதாகப் போகாது. விலை உயர்ந்த வாஷிங் பவுடர் போட்டு வாஷிங் மெஷினில் துவைத்தாலும் அந்த பிடிவாதமான கறைகள் அப்படியே தான் இருக்கும். இப்படி அழுக்கான சாக்ஸை யாருக்கு முன்பாவது கழட்ட நேர்ந்தால் அது நமக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். 

இந்த பிரச்சனைக்காகவே பலரும் பழைய சாக்ஸ்களை குப்பையில் வீசிவிட்டு புதியவற்றை வாங்குவார்கள். ஆனால் இனிமேல் அப்படிச் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. ஒரு சூப்பர் ஐடியா மூலம் பழைய சாக்ஸை கடையில் வாங்கிய புதுசு போல எப்படி மாற்றுவது என்று இப்போது பார்ப்போம்.

முக்கியமான பொருட்கள்!

பொதுவாக அழுக்கை நீக்க பலரும் கடினமான குளோரின் ப்ளீச் பயன்படுத்துவார்கள். அது துணியின் தரத்தை மோசமாகப் பாதிப்பதோடு, நாளடைவில் சிந்தெடிக் துணிகளை மஞ்சள் நிறமாக மாற்றிவிடும். மேலும் சாக்ஸில் உள்ள வண்ண டிசைன்களையும் அது மங்கச் செய்துவிடும். இதற்குப் பதிலாக ஆக்சிஜன் ப்ளீச் மற்றும் சாதாரண துணி துவைக்கும் பவுடர் ஆகிய இரண்டையும் பயன்படுத்துவது தான் மிகவும் பாதுகாப்பான ஒரு வழி.

ஆக்சிஜன் ப்ளீச் கலந்த சலவை பவுடர்கள் அல்லது நேரடியாகத் தனியாக விற்கும் ஆக்சிஜன் ப்ளீச் பவுடர் இப்போது கடைகளில் சுலபமாகக் கிடைக்கின்றன. இது துணிகளின் இழைகளுக்கு எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் கறைகளை மட்டும் குறிவைத்துத் தாக்கி அழிக்கும்.

சுத்தம் செய்யும் முறை!

இந்த முறையில் கறைகளை நீக்க நாம் கைகளை போட்டு கஷ்டப்பட்டு தேய்க்க வேண்டிய அவசியமே இல்லை. முதலில் ஒரு பெரிய பிளாஸ்டிக் டப் அல்லது வாளியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவு ஆக்சிஜன் ப்ளீச் மற்றும் கொஞ்சம் வாஷிங் பவுடரை போட்டு, சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்க வேண்டும். 

பவுடர் முழுமையாகக் கரைந்த பிறகு, அதில் தேவையான அளவு குளிர்ந்த நீரை ஊற்றிக்கொள்ளுங்கள். உங்கள் கைகளின் பாதுகாப்பிற்காக இந்த வேலையைச் செய்யும் போது ரப்பர் கிளவுஸ் அணிந்துகொள்வது நல்லது. கிளவுஸ் இல்லை என்றால் வேலை முடிந்ததும் கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவி விடுங்கள்.

இதையும் படியுங்கள்:
நாம் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது!
dirty-white-socks

ஊறவைக்கும் நேரம்!

தயார் செய்து வைத்துள்ள அந்த தண்ணீரில், அழுக்கு படிந்த உங்களின் வெள்ளை சாக்ஸ்களை முழுமையாக முக்கி ஊற வைக்க வேண்டும். கறையின் தீவிரத்தைப் பொறுத்து குறைந்தது ஆறு மணி நேரம் முதல் அதிகபட்சமாக பன்னிரண்டு மணி நேரம் வரை அப்படியே விட்டுவிடுங்கள். இரவு தூங்கச் செல்வதற்கு முன் இப்படி ஊற வைப்பது ஒரு ஸ்மார்ட்டான வழி. 

மறுநாள் காலை அந்த சாக்ஸை குளிர்ந்த நீரில் ஒரு முறை நன்கு அலசிவிட்டு, வழக்கம்போல உங்கள் வாஷிங் மெஷினில் போட்டுத் துவைத்து காய வையுங்கள். இப்போது உங்களின் சாக்ஸ் எப்படிப்பட்ட பிரகாசத்துடன் மின்னுகிறது என்பதைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். கறைகள் இன்னும் கொஞ்சம் இருந்தால் இதே முறையை மீண்டும் ஒருமுறை செய்து பார்க்கலாம்.

சில நேரங்களில் சாக்ஸின் அடிப்பகுதியில் சின்னச் சின்ன துணி நார்கள் அல்லது உருண்டைகள் சேர்ந்திருக்கும். அந்த உருண்டைகளில் தான் அதிக அழுக்குகள் தங்கி சாக்ஸை பழையது போலக் காட்டும். இதைப் போக்க ஒரு ஃபேப்ரிக் ஷேவர் எனப்படும் சிறிய கருவியைப் பயன்படுத்தி அந்த நார்களை மெதுவாக நீக்கிவிடுங்கள். இதைச் செய்தவுடனேயே உங்கள் சாக்ஸ் உடனடியாகப் பல மடங்கு வெண்மையாக மாறிவிடும்.

இதையும் படியுங்கள்:
சுவரில் உள்ள கிறுக்கல்களைப் பார்த்து பதற வேண்டாம்... இதோ எளிமையான தீர்வு!
dirty-white-socks

எளிமையான இந்த ஆக்சிஜன் ப்ளீச் முறையைப் பயன்படுத்திப் பாருங்கள். இது உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பிறர் முன்பாக காலணிகளைக் கழட்டி கம்பீரமாக நடக்கவும் ஒரு பெரிய தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com