பூண்டு - பக்காவா? போலியா? உதவும் பத்து விதமான பரிசோதனைகள்...

Garlic
Garlic
Published on

நாம் உபயோகிக்கும் பூண்டு தரமானதுதானா என்பதைக் கண்டறிய 10 வழிமுறைகள்!

நாம் சமையலுக்காக கடைகளில் வாங்கும் உணவுப் பொருள்களில் பல தரமற்றதாகவும் கலப்படம் செய்யப்பட்டதாகவும் இருக்கக்கூடும். இவ்வாறான சந்தேகம் தீர, பூண்டு வாங்கும்போது செய்ய வேண்டிய பத்து விதமான பரிசோதனைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் காணலாம்.

1. முகர்ந்து பாருங்கள்: பூண்டை முகர்ந்து பார்க்கும்போது ஒரு கடுமையான (pungent) ஸ்மெல் வரும். அது போலியான பூண்டாயிருந்தால் வாசனையின்றி அல்லது மிதமான ஸ்மெல் உள்ளதாயிருக்கும்.

2. பூண்டின் தோலை பரிசோதித்துப் பாருங்கள்: நிஜமான பூண்டின் தோல் பேப்பர் போன்ற மெல்லிய தடிமனில் சுலபமாக உரிக்க ஏதுவானதாக இருக்கும். அதுவே தரமற்றதாக இருக்கும்பட்சத்தில் தோல் கடினமானதாகவும் செயற்கைத் தோற்றம் கொண்டும் காணப்படும்.

3. பூண்டின் வேர்ப் பகுதியைப் பாருங்கள்: தரமான பூண்டின் அடிப்பகுதியில் மிச்சம் மீதி போன்று சில வேர்கள் காய்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும். போலிப் பூண்டின் அடிப்பகுதி தட்டையாகவும் 'மொழுக்' கென்றும் தோற்றம் தரும்.

இதையும் படியுங்கள்:
QR Code காவலாளி: இனி ஜிமெயிலுக்கு SMS தொல்லை இல்லை!
Garlic

4. பூண்டுப் பற்களின் வடிவத்தை சோதித்துப் பாருங்கள்: இயற்கையான ஒரிஜினல் பூண்டின் பற்கள் ஒன்றுக்கொன்று வித்யாசமான வடிவம் கொண்டிருக்கும். போலிப் பூண்டின் பற்கள் இரசாயன முறைத் தயாரிப்பில் உருவாகி ஒரே மாதிரியான வடிவம் கொண்டுள்ளதாக இருக்கும்.

5. பூண்டின் நிறத்தைக் கவனித்துப் பாருங்கள்: தரமான பூண்டின் நிறம் வெள்ளை அல்லது பர்ப்பிள் நிறத்தின் சாயல் கொண்டிருக்கும். போலி பூண்டின் நிறம் ப்ளீச் செய்தது போல் பளிச்சென்ற வெள்ளை நிறத்தில் இருக்கும்.

6. பூண்டின் தன்மையை (texture) தொட்டுப் பாருங்கள்: ஒரிஜினல் பூண்டின் டெக்ச்செர் உறுதியாகவும் கச்சிதமாகவும் இருக்கும். போலியானது செயற்கையான ஸ்மூத்னஸ் மற்றும் மென்மைத் தன்மை கொண்டதாக இருக்கும்.

7. பூண்டின் பற்களை சோதித்துப் பாருங்கள்: உண்மையான பூண்டின் பற்கள் தெளிவான பழவகையை சார்ந்தது போன்றிருக்கும். போலிப் பூண்டின் பற்கள் வெற்றிடம் கொண்டு சுருங்கிப் போன மாதிரியான தோற்றம் தரும்.

8. சுவையை சோதித்துப் பாருங்கள்: தரமான பூண்டு ஸ்பைசியான சுவையுடன் இருக்கும். போலிப் பூண்டின் சுவை சிறிது கசப்புத் தன்மை கொண்டிருக்கும்.

9. முளை கட்டும் திறன் உள்ளதா என சோதித்துப் பாருங்கள்: ஒரிஜினல் பூண்டு சில நாட்கள் கிச்சனில் வைத்திருக்கும் போது முளை கட்ட (Sprout) ஆரம்பிக்கும். இரசாயனம் சேர்த்து தயாரிக்கப்படும் பூண்டு அவ்வாறு விரைவில் முளை விட ஆரம்பிக்காது.

இதையும் படியுங்கள்:
சப்பாத்தி பூரிக்கு ஏற்ற பாரம்பரிய குருமா வகைகள்..!
Garlic

10. பூண்டு கிடைக்கும் இடத்தின் நம்பகத் தன்மையை அறிந்து, பிறகு வாங்குங்க: அதிகளவில் தயாரிக்கப்படும் இடங்களில் வாங்கும் பூண்டு போலியாக இருக்க வாய்ப்புண்டு. வழக்கமாக வாங்கக் கூடிய நம்பகமான கடைகளில் வாங்குவதே சிறப்பு.

அடுத்த முறை பூண்டு வாங்கும்போது மேலே கூறியுள்ள வழிமுறைகளை மனதிற் கொண்டு கவனத்துடன் சோதித்து வாங்குங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com