

கைகளால் துவைப்பது ஒவ்வொரு துணியையும் தனித்தனியாக மெதுவாக கையாளுவதால் இயற்கையாகவே துணி சுருக்கம் குறைகிறது. பிழிந்து முறுக்காமல், ஈரத்துணியை காய்ந்த டவெளில் மீது வைத்து சுருட்டி, பின் ஹேங்கரில் காயவைத்தால் துணி தரம் காக்கப்படுகிறது. விவியன் வெஸ்ட் வுட் கூறும் ‘குறைவாக வாங்கி, நன்றாகப் பயன்படுத்தும்’ கலாச்சார பார்வைபோல், சரியான துவைப்பு முறைகள் துணியின் ஆயுளையும், மின்சார, நேரச் செலவையும் குறைக்கின்றன.
ஆடைகளில் சுருக்கம் வருகிறதா? இதனால் உங்களுக்கு என்னென்ன இழப்புகள் தெரியுமா? பழைய மற்றும் புதிய சலவை இயந்திரங்களில் ஏற்படும் துணி சுருக்கங்கள்:
பல வீடுகளில் இன்றும் பழைய டாப்-லோடிங் வாஷிங் மெஷின்களையே பயன்படுத்தி வருகின்றனர். இவை துணிகளை கடுமையாக முறுக்கி, அதிவேகத்தில் சுற்றுகின்றன. இப்படி உண்டாகும் அழுத்தம் ஈரமான துணிகளை அழுத்தி, அவை காய்ந்து வரும்போது ‘ஈரத்தில் உண்டான மடிப்புகளை அதே நிலையிலே வைத்துவிடுகிறது.
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின்(University of Manchester) ஆய்வுகள் படி, சுருக்கங்கள் ஏற்படுவது மெஷினின் டிரம் சூழல் வேகம் மற்றும் அதிலுள்ள மொத்த துணிகளின் சுமையுடன்(weight) வலுவாக தொடர்புடையது என்பதைக் காட்டுகின்றன. எனவே அதிக எடையுடன் துவைப்பது மற்றும் மெஷினின் வேகமான சுழற்சி; சில துணிகளில் மடிப்புகளை அதிகரிக்கின்றன. இதற்கு மாறாக, இப்போதுள்ள நவீன வாஷிங் மெஷின் மாடல்கள் துவைக்கும் துணிகளின் மேல் அழுத்தத்தைக் குறைக்க, நீராவி புத்துணர்ச்சி மற்றும் அவை தானாகவே(Auto) ‘சோப்பு நுரைகளின் அளவை’ தீர்மானித்து பயன்படுத்துகின்றன.
இந்த நீராவி தொழில்நுட்பம் துணிகளில் உள்ள நூல்களை(polymers) மென்மையாகத் தளர்த்தி; அவை காய்வதற்கு முன் சுருக்கங்கள் நீக்க அனுமதிக்கிறது. இதனால் பழைய வாஷிங் மெஷினில் இருந்து வரும் துணிகளை ஒப்பிடும்போது, புதிய மெஷின்களிலிருந்து துவைத்து முடித்து வரும் துணிகளுக்கு; ஐயன் பண்ண வேண்டிய வேலை சற்று குறைகிறது.
சுருக்கங்களை தடுக்க கைகளால் முடியுமா?
கைகளால் துவைத்தால் அது இயற்கையாகவே சுருக்கங்களை தடுக்கிறது. காரணம் ஒவ்வொரு துணியாக எடுத்து நாம் கையாளுகின்றோம்.
பொதுவாக துணிகளை குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, அதை தேய்ப் பதற்குப் பதிலாக மெதுவாக அலசி, அதை இறுதியில் பிழிந்து எடுப்பதை தவிர்ப்பதன் மூலம்; துணிகள் எந்த பிரச்னையுமின்றி பராமரிக்கப் படுகின்றன.
மேலே கூறியதுபோல் ஈரமான துணிகளை அப்படியே ஒன்றோடு ஒன்று அழுத்தி, பின்னர் அதே நிலையிலே காயும்போதுதான் சுருக்கங்கள் உருவாகின்றன. இதே கைகளால் துவைத்தால், தனித்தனியாக ஆடைகளைத் கையாள வைக்கிறது. பின் அலசிய பிறகு, துணியில் உள்ள நீரை உறிஞ்சுவதற்காகத் ஒரு சுத்தமான ‘காய்ந்த டவெளிலை(Towel)’ ஈரத்துணியை வைத்து அதை சுருட்டி பின்னர் அவற்றை ஹேங்கர்களில் காற்றில் காயவைத்தால், துணிகளின் தரம் நல்ல முறையில் காக்கப்படுகிறது. இதை தான் ’ஜவுளி அறிவியலும்’ உறுதிப்படுத்துகிறது.
கலாச்சார பார்வை:
ஆடை வடிவமைப்பாளர் விவியன் வெஸ்ட் வுட்(Vivienne Westwood) கூற்றுப்படி, “எதையும் குறைவாக வாங்குங்கள். நன்றாகத் தேர்ந்தெடுங்கள். அதை நீடித்து உழைக்க செய்யுங்கள்.” என்று கூறினார். இந்த சொற்கள் நம் சலவைப் பராமரிப்புக்கும் நேரடியாகப் பொருந்துகிறது.
என்னதான் நாம் ஆடைகளில் சுருக்கங்களைத் தடுத்தாலும், அது ஆடைகளைப் பாதுகாப்பது மட்டும் செய்வதில்லை; அது ஒரு துணியின் நீண்ட பயன் பாட்டையும் உறுதி செய்கிறது.
இந்தியாவில் காட்டன் சட்டைகள் சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ளன, நிறைய பேர் அதில் போடப் பட்டிருக்கும் ‘துவைக்கும் முறைகளை’ பார்ப்பதில்லை. இதை தெரிந்து வைத்துக்கொண்டால் ‘மீண்டும் மீண்டும் ஐயன்’ செய்ய வேண்டிய தேவையையும் குறைக்கின்றன, மின்சார பயன் பாட்டையும் குறைகின்றன.
ஆக, ஆடைகளில் ஏற்படும் சுருக்கங்கள் சாதாரண பிரச்னை மட்டுமல்ல, அவை பல வழிகளில் நமக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன. என்னதான் பழைய சலவை இயந்திரங்கள், நவீன இயந்திரங்கள் என்று காரணம் சொன்னாலும். கைகளால் துவைப்பது சில நேரங்களில் நன்மையை தரத்தான் செய்கின்றன.
ஒருபுறம் என்னதான் கைகளால் நன்மை இருந்தாலும்; ‘நேரம்’ அனைவருக்கும் இருப்பதில்லை. எனவே மேலே கூறியதுபோல் ‘குறைவான துணி அளவு மற்றும் ஒரு அளவான மெஷின் டிரம் அல்லது சுழற்சி வேகம்’ இந்த பிரச்னையும், பல இழப்புகளையும் தடுக்கிறது.