வீட்டிலேயே தொட்டியில் புதினா அடர்த்தியா வளர்க்கும் ரகசியம் இதோ!

உங்கள் வீட்டில் தொட்டியில் புதினா செடியை செழிப்பாகவும் அடர்த்தியாகவும் வளர்க்க உதவும் எளிய முறைகள் மற்றும் அறிவியல் பூர்வமான வழிமுறைகள் இங்கே.
புதினா வளர்ப்பு | Mint plant
புதினா வளர்ப்பு | Mint plant
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on

சமையலறையின் நறுமணம் முதல் ஆன்மீகப் புத்துணர்ச்சி வரை அனைத்திலும் புன்னகையூட்டும் புதினா, உங்கள் வீட்டிலும் பச்சைப் பசேலெனப் புதர் போல அடர்த்தியாக வளர வேண்டுமா? இதற்காக விலையுயர்ந்த ரசாயனங்களோ அல்லது கடினமான முறைகளோ தேவையில்லை; நம் வீட்டில் இருக்கும் எளிய வழிமுறைகளே போதுமானது. சிறிய தொட்டியில் எப்படி கொத்து கொத்தாகப் புதினாவைச் செழிப்பாக வளர்ப்பது, மண் மற்றும் நீரின் சரியான சமநிலை என்ன என்பதை இந்தத் தொகுப்பில் முழுமையாகத் தெரிந்து கொள்வோம்!

நறுமணத்தை அள்ளி கொடுக்கும் புதினா. கோயில், வீட்டு பின்புறம், சமையல் என்று அனைத்திலும் புத்துணர்ச்சியை உண்டாக்கும். அதற்காக நீங்கள் ‘பல விஷேச யுக்திகளை’ பின்பற்ற வேண்டுமா அல்லது நம் சாதாரண செலயல்பாடுகளே போதுமானதா? தெரிந்து கொள்வோம்.

புதினா வளர்ப்பு முறைக்கு தேவையான மண் மற்றும் தொட்டி அமைப்பு

இந்தியாவில் புதினாவை ‘வீட்டின் வெளியே’ வளர்ப்பது ஒரு இயற்கையான நன்மையை அதற்கு அளிக்கிறது. காரணம் அதன் தொடர் வளர்ச்சிக்கு நம் காலநிலை (climate) கச்சிதமாகப் பொருந்துகிறது.

புதினா 20–35°C வெப்பநிலையில் செழித்து வளரும்; இதோடு 40°C வரை வெப்பத்தையும் தாங்கும். அதை சுற்றி நீர் தேங்குவதைத் தவிர்த்தாலே, பருவமழை காலத்திலும் வீரியமாக வளரும். இந்த செடி அடர்த்தியாக வளர, அதன் பக்கத்தில் (இடது அல்லது வலது புறமோ) பரந்து வளர இடம் கொடுக்கப்பட வேண்டும்.

கொத்தமல்லியைப் போலல்லாமல், புதினா ‘மண்ணிலேயே ஊடுருவி’ அதன் அருகிலேயே பல செடிகளை உருவாக்க செய்கிறது. இதனால் அவை அகலமான அல்லது பெரிய தொட்டிகளிலோ வைக்கப்படும்போது, அதன் இலைகள் ஒருவித கூட்டமாக அடர்த்தியை உருவாக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
மரச் சாமான்களைத் தின்னும் கரையான்கள்: நொடியில் விரட்ட எளிய வழிகள்!
புதினா வளர்ப்பு | Mint plant
இதையும் படியுங்கள்:
வீட்டிலிருந்தே வேலை செய்பவரா? முதுகு வலியை நிரந்தரமாக விரட்ட 6 எளிய வழிகள்!
புதினா வளர்ப்பு | Mint plant

மக்கிய உரம் மற்றும் தேங்காய் நார் கலந்த வண்டல் மண்ணில், புதினா தண்டுகளை 8–10 செ.மீ இடைவெளியில் நடுவதன் மூலம்; ஒன்றன் மேல் ஒன்று படர்ந்து, பார்ப்பதற்கு அடர்த்தியாகவும், செழிப்பாகவும் தோன்றும் வளர்ச்சியை உங்களால் காண முடியும். ஒவ்வொரு 10–12 நாட்களுக்கும் அதன் மேல் பகுதி ‘நுனிகளை’ வெட்டுவது, கிளைகளை இன்னும் வளர தூண்டுகிறது. இதனால் செடி உயரமாகவும், அடர்த்தி குறைவாகவும் வளராமல்; பார்ப்பதற்கு ’புதர் போன்ற அடர்த்தியை’ உருவாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
ஒரு மரம் ஒரு நாளில் எவ்வளவு ஆக்சிஜன் தரும்? கணக்கு தெரிஞ்சா வியப்பீங்க!
புதினா வளர்ப்பு | Mint plant

புதினா வளர்ப்பு வெற்றிகரமாக அமைய நீர் மற்றும் உரம் மேலாண்மை:

புதினா வளர்ப்பு | Mint plant
புதினா வளர்ப்பு | Mint plant

அதன் மண் தொடர்ந்து ஈரப்பதமாக இருக்க வேண்டும், ஆனால் ஒருபோதும் நீர் தேங்கக்கூடாது. அதில் தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொண்டு, தேவையற்ற நீர் வடிய அனுமதிக்கும் வழிகளை பின்பற்றலாம். அதற்கு சுய-நீர்ப்பாசன (self watering) தோட்டிகள் அல்லது நல்ல மேடான நிலங்களை பயன்படுத்தலாம். 40% மண்புழு உரம், 30% தோட்ட மண், 20% தேங்காய் நார்க்கழிவு மற்றும் 10% மணல் ஆகியவற்றின் கலவையானது; செடி நறுமணத்தையும், அடர்த்தியையும் அதிகரிக்கச் செய்யும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கோடை மாதங்களில், 2-3 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சுவது மிகவும் அவசியம். அதேசமயம் குளிர் காலங்களில், 10-15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சுவது போதுமானது. ஒவ்வொரு 4-6 வாரங்களுக்கும் மாட்டு எரு அல்லது வேப்ப உரம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்துவது, அதன் சுவையைக் குறைக்காமல் செடியை ஊட்டச்சத்து நிறைந்ததாக என்றைக்கும் வைத்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
டீ கடை ஸ்டைல் மொறுமொறு மசாலா வடை: சொட்டு எண்ணெய் குடிக்காமல் வீட்டிலேயே செய்வது எப்படி?
புதினா வளர்ப்பு | Mint plant

அறிவியலால் உறுதிப்படபட்டவை:

புதினாவின் அடர்த்தியானது அதன் ‘வேர்கள் பரவலில்’ தான் சார்ந்திருக்கிறது என்று தாவரவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்; புதினா வளர்ப்பு குறித்த தோட்டக்கலை ஆய்வுகளில் இந்த உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலே கூறியது போல் அதனை ‘அப்பப்போ வெட்டுவது’ அதன் வளர்ச்சிக்கு மிகவும் பயனளிக்கும். மகாத்மா காந்தி ஒருமுறை கூறியது போல, “மண்ணைத் தோண்டவும், மண்ணைப் பராமரிக்கவும் மறந்துவிடுவது, நம்மையே மறந்துவிடுவதற்குச் சமம்” என்றார். இது, புதினா போன்ற செடிகளை பராமரிப்பது ஒரு அறிவியல்பூர்வமான மற்றும் ஆன்ம பூர்வமான செயல் என்பதை இது நினைவூட்டுகிறது.

இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிப்பதன் மூலம், உங்கள் வீட்டுச் சமையலறைக்குத் தேவையான நறுமணம் மாறாத புதினாவை எந்தவித ரசாயனமுமின்றி நீங்களே சொந்தமாக அறுவடை செய்து, ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சியான வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
இருட்டை கிழித்து பார்க்கும் பூனையின் சக்தி... நீங்களும் தெரிஞ்சுக்க இதை படிங்க!
புதினா வளர்ப்பு | Mint plant
logo
Kalki Online
kalkionline.com