பிரிட்ஜில் கரும்பு ஜூஸை பல நாட்கள் வரை பிரெஷ்ஷாக வைக்க இதோ ஒரு சூப்பர் ஐடியா!

sugarcane-juice
sugarcane-juice
Updated on

கோடைக்கால வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு வரும்போது, ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடித்தால் கிடைக்கும் அந்த சுகமே தனி ரகம். இதற்காகவே பலரும் வெளியே செல்லும்போது தாகம் தீர குடிப்பது மட்டுமில்லாமல், வீட்டிற்கும் பார்சல் வாங்கி வருவார்கள். ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. கரும்புச் சாறை வாங்கிய சில மணி நேரங்களிலேயே அதன் நிறம் கருத்துப்போய், சுவையும் ஒரு மாதிரி புளிப்பாக மாறிவிடும். 

இதை எப்படி கெட்டுப்போகாமல் நீண்ட நேரம் பிரெஷ்ஷாக வைத்துக்கொள்வது என்று பலருக்கும் தெரிவதில்லை. கரும்பு ஜூஸை எப்படிப் பல நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

எலுமிச்சை மற்றும் இஞ்சி!

கரும்புச் சாறை நீங்கள் வாங்கும்போதே அதில் கொஞ்சம் கூடுதலாக எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சேர்த்துக் கொள்வது ரொம்பவே நல்லது. எலுமிச்சையில் உள்ள இயற்கையான சிட்ரிக் ஆசிட், கரும்பு ஜூஸ் காற்றில் பட்டு ஆக்சிஜனேற்றம் அடைவதைத் தடுத்து நிறம் மாறாமல் பாதுகாக்கிறது. இஞ்சி அதன் சுவையைக் கூட்டுவதோடு, ஜூஸ் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க ஒரு இயற்கையான பாதுகாப்பு கவசமாகச் செயல்படுகிறது.

கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்துங்கள்!

பெரும்பாலும் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களிலோ அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களிலோ தான் பார்சல் கொடுப்பார்கள். அதை அப்படியே வீட்டிற்கு கொண்டு வந்து பிரிட்ஜில் வைப்பது மிகப்பெரிய தப்பு.

இதையும் படியுங்கள்:
கிட்ஸ் ஸ்பெஷல்: நாவூறும் சுவையில் மணக்கும் வெள்ளை பிரியாணி!
sugarcane-juice

கரும்புச் சாறை எப்போதுமே காற்றோட்டம் இல்லாத ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் மாற்றி வையுங்கள். பாட்டிலின் வாய் வரை முழுமையாக ஜூஸை நிரப்பி மூடி வைத்தால், உள்ளே காற்று புகாமல் ஜூஸ் நீண்ட நேரம் பிரெஷ்ஷாக இருக்கும்.

ஐஸ் கியூப்!

உங்களுக்குக் கரும்பு ஜூஸை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு குடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், இந்த ஐஸ் கியூப் ஐடியாவைத் தாராளமாக ட்ரை பண்ணலாம். கரும்புச் சாறை உங்கள் வீட்டில் உள்ள ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் உறைய வைத்து விடுங்கள்.

அது கெட்டியான ஐஸ் கட்டிகளாக மாறியதும், தேவைப்படும்போது அந்த ஐஸ் கட்டிகளை எடுத்து ஒரு கிளாஸில் போட்டு சிறிது நேரம் கழித்துக் குடிக்கலாம். இது முதல் நாள் வாங்கிய அதே சுவையோடு செம டேஸ்டாக இருக்கும். இதனுடன் புதினா இலைகளையும் சேர்த்து ஐஸ் ஆக்கினால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பணியாரம் முதல் லட்டு வரை: கரும்புச் சாறு மேஜிக்!
sugarcane-juice

கரும்புச் சாறு நமது உடலுக்குத் தேவையான உடனடி எனர்ஜியைக் கொடுக்கும் ஒரு அற்புதமான இயற்கை பானம். ஆனால் அது சீக்கிரம் கெட்டுப்போகும் தன்மை கொண்டது என்பதால், அதைச் சரியாகப் பராமரிப்பது மிக முக்கியம். வெளியே கடைகளில் வாங்கி வந்தாலும் சரி, அல்லது வீட்டிலேயே தயாரித்தாலும் சரி, மேலே சொன்ன இந்த சிம்பிளான ட்ரிக்ஸ்களை பயன்படுத்திப் பாருங்கள். 

இனிமேல் கரும்பு ஜூஸ் கருத்துப் போகும் என்ற கவலையே உங்களுக்கு இருக்காது. 

logo
Kalki Online
kalkionline.com