
உங்கள் பயன்பாட்டுக்கு ஐஎஸ்ஐ முத்திரையுள்ள அயர்ன் பாக்ஸை வாங்கவும். நீண்ட காலம் பயன்படுத்துவதற்கு அதுதான் தகுந்தது.
ஈரமான கைகளுடன் ஆடைகளுக்கு அயர்ன் செய்வதைத் தவிருங்கள். அதனால் ஷாக் அடிக்கும் வாய்ப்புண்டு.
நீங்கள் இஸ்திரி போடும் பணியில் ஏற்பட்டிருக்கும்போது அந்த அறையில் வீட்டில் உள்ள குழந்தைகள் வராமல் பார்த்துக்கொள்ளவும்.
நீங்கள் பெட்டி போட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், உங்கள் வீட்டுக் காலிங் பெல் அடித்தால் இஸ்திரிப் பெட்டியை அப்படியே வைத்து விட்டுப்போகாமல் ஆஃப் செய்து விட்டுத்தான் போக வேண்டும். இதனால் அயர்ன் செய்யும் ஆடைகள் கருகிப்போவதைத் தவிர்க்கலாம். ஷாக் அபாயம் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
எலக்ட்ரிக் இஸ்திரிப்பெட்டியின் மீது எக்காரணம் கொண்டும் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இஸ்திரிப் பெட்டிக்குள் நீர் புகுந்துவிட்டால் ஷாக் ஏற்படலாம்.
அயர்ன் பாக்ஸில், இஸ்திரியிடும் பகுதியில் கறை ஏற்பட்டால் கொஞ்சம் உப்பைத் தடவி துணியால் அழுத்தித் துடைத்தால் கறைகள் அகன்றுவிடும்.
விலை மலிவாகக் கிடைக்கும் எலக்ட்ரிக் இஸ்திரிப் பெட்டியை உங்கள் வீட்டுத்தேவைக்கு வாங்குவதைத் தவிருங்கள். அது சீக்கிரம் செயலிழந்துவிடும் என்று மட்டுமல்லாமல் ஷாக் அடிக்கும் வாய்ப்பும் உண்டு.
வீட்டில் உள்ள அனைவரது ஆடைகளையும் ஒரு விடுமுறை தினத்தில் ஒன்றாக இஸ்திரி செய்து விடவேண்டும். இதனால் அவ்வப்போது அயர்ன் செய்வதினால் ஏற்படும் மின்சார விரயத்தை தவிர்க்கலாம்.
துணிகள் அயர்ன் செய்ய பயன்படுத்தும் ப்ளக் பாயிண்ட் நல்லதாக இருக்க வேண்டும்.
பட்டுப்புடவை போன்ற விலை உயர்ந்த புடவைகளை இஸ்திரி செய்யும்போது மிக கவனமாக செயல்பட வேண்டும்.
செல்ஃபோனில் பேசிக்கொண்டே இஸ்திரியிடும் வேலையை செய்யக்கூடாது. இதனால் ஷாக் அடிக்கும் வாய்ப்பு உண்டு என்று மட்டுமல்லாமல், உங்கள் கைதவறி செல்ஃபோன் சூடான இஸ்திரிப்பெட்டியில் விழுந்து விட்டால் உங்கள் செல்ஃபோன் செயலிழக்கவும் வாய்ப்புண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.
காட்டன், பாலிஸ்டர், பட்டு போன்ற துணி வகைகளுக்கு ஏற்ப வெப்ப நிலையை செட் செய்யத்தகுந்த இஸ்திரிப் பெட்டிதான் பயன்படுத்துவதற்கு சிறந்தது.
இதில் சொல்லியிருக்கும் குறிப்புகளை செயல் படுத்தவதன் மூலம் உங்கள் வீட்டு இஸ்திரிப் பெட்டியை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.