உலகில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர். அப்படி இருக்கையில், பெண்கள் மனதளவில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதனால், தங்கள் இலக்கை எட்டமுடியாமல் சில பெண்கள் பின்வாங்குவது உண்டு. அது தவறு, நாம் தான் அதற்கேற்ற பக்குவத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.
இந்த பதிப்பில், நாம் உளவியல் ரீதியாக பெண்கள் உறுதியாக எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில் பெண்களுக்கு தேவையானது தைரியம். இவர்கள் என்ன சொல்வார்கள், அவர்கள் என்ன சொல்வார்கள் என்ற எண்ணத்தை தூக்கி எறிந்து பெண்கள் தைரியத்தை கையில் எடுத்து எட்டுவைத்தால் நாம் எட்டாத உயரத்தையும் அடையலாம். நமது தைரியம் தான் நம்மை காதலிக்க செய்யும், மற்றவர்களையும் வழிநடத்த செய்யும். அதனால் பெண்கள் தைரியமாக இருப்பதே மிகவும் முக்கியமானதாகும்.
என்ன தான் தைரியமாக இருந்தாலும் கூட சில பிரச்சனைகளின் போது, மனம் துவண்டு விடுகிறது என்று தானே நினைக்கிறீர்கள். நிச்சயமாக இருக்கத்தான் செய்யும் வீட்டில் ஏதேனும் பிர்ச்சனைகள் வந்தால் அதை தைரியமாக எதிர்கொண்டு மனதை சலனமடையாமல் வைக்க எப்போது உங்களை பிஸியாகவே வைத்து கொள்ளுங்கள். மனதளவில் தைரியமுள்ள பெண்கள் எனது நாளை சிறப்பிக்க நான் என்ன செய்ய வேண்டும் என ஓடி கொண்டே இருப்பார்கள்.
அடுத்ததாக பெண்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அவசியமானதாகும். நமது நேர்மறை எண்ணங்கள் தான் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். இந்த எண்ணம் தான் நமக்குள் தன்னம்பிக்கையை உருவாக்கும்.
மனரீதியாக உறுதியாக இருக்கும் பெண்கள், எப்போதும் அவர்களை பற்றி சிந்திப்பார்கள். பொதுவாகவே பெண்களின் இயல்பு என்பது குடும்பத்தை பார்த்து பார்த்து தன்னை பார்க்காமல் விடுவது என்பது பேசப்படும் ஒன்று. அப்படி மற்றவர்களையே நினைத்து தன்னை பற்றி நினைக்காமல் இருந்துவிடுவார்கள். ஆனால், தன்னை பற்றி நினைத்து கொண்டே இருந்தாலும், நமக்காக ஒரு வாழ்க்கையை வாழ தொடங்கினாலே பெண்கள் மிகவும் உறுதியாக முடியும்.
எப்போதுமே நம்மை சிறுமையாக நினைக்க கூடாது, நம்மை நாம் தான் பெருமையாக கருத வேண்டும். அப்படி நினைத்தால் உறுதியாக முடியும். நமக்கு நாமே உண்மையாக இருந்தால் மன தைரியம் அதிகரிக்கும். மற்றவர்களிடம் நாம் பேசும் போது நம்மை எப்போதும் சிறியதாக கருதக்கூடாது. நமக்காக பேசுவதற்கு இங்கு யாரும் இல்லை. நம்மை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
கடைசியாக பெண்கள் மனரீதியாக உறுதியாக இருக்கும் பெண்களுடன் கலந்துரையாடும் போது, அவர்களை போன்றே இருக்க தோன்றும். உளவியல் ரீதியாக உறுதியாக இருப்பவர்கள் எப்போதும் அவர்களை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதை நோக்கி ஓடுவார்கள். அப்படிப்பட்டவர்களுடன் பழகினால் நாமும் அதே போன்று உறுதியாக மாறலாம். பெண்களே ஆண்களை விட மனதளவில் தைரியமுடையவர்கள். ஆனால், வீட்டில் உள்ள மற்றவர்களை கவனிப்பதில் பல பெண்கள் அவர்களை பற்றி கவலை கொள்வதில்லை. இதுவே அவர்களின் தன்னம்பிக்கை, சுயத்தை இழக்க வழிவகுக்கிறது. இதனால் பெண்கள் இந்த தகுதிகளை கொண்டிருந்தால் கண்டிப்பாக உறுதியாக முடியும்.