கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டால்... தப்பிப்பது எப்படி?

Crowd
Crowd
Published on

சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் தியேட்டர் ஒன்றில் 'புஷ்பா 2' பட ரிலீஸின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்ததாகவும் அவரது 8 வயது மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்தது.

இதேபோன்று சில மதங்களுக்கு முன் உத்திரபிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த மத விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழந்தனர் மற்றும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட செய்தி பீதியை கிளப்பியது.

சரியான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யாமல் இருப்பது தான் இந்நிகழ்வுகளுக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

கூட்ட நெரிசல் மிகவும் ஆபத்தானது. கடுமையான காயம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும். ஒரு வேளை கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் நம்மையும் குழந்தைகளையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து வல்லுனர்கள் கூறும் ஆலோசனைகளை இப்பதிவில் பார்க்கலாம் .

நெரிசலின்போது பாதுகாப்பாக இருப்பதற்கான மிக முக்கியமான வழிகளில் ஒன்று முன்கூட்டியே திட்டமிடுவது.

இடத்தின் தளவமைப்பைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

கூட்டம் கூடுவதற்கு முன்பு அவசரகால வெளியேறும் வழிகளை அடையாளம் காணவும்.

நெரிசலான பகுதிகளைத் தவிர்க்கவும், வெளியேறுவதற்கு தகுந்த இடங்களை தேர்வு செய்யவும் வேண்டும்.

உங்கள் சுற்றுப்புறங்களைக் கவனித்து வெளியேறுவதற்கான மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும், ஏனெனில் வழக்கம் போல் வெளியேறும் வழிகள் நெரிசலில் அடைக்கப்படலாம்.

நெரிசலின் போது கூட்டத்துடன் சேர்ந்து அந்த வழியிலேயே நகர்ந்து செல்ல வேண்டும். கூட்டத்துக்கு எதிராக தள்ளும்போது நசுக்கப்படுவதற்கு அல்லது சிக்கிக்கொள்ள வாய்ப்புண்டு.

நெரிசலின் போது ஏற்படும் காயங்களுக்கு மிகவும் பொதுவான காரணம் நசுக்கப்படுவது. குறிப்பாக மார்பு மற்றும் தலையில் அடிபட வாய்ப்புண்டு. உங்கள் மார்பு மற்றும் தலையை பாதுகாப்பது அவசியம்.

இதையும் படியுங்கள்:
2025-ல் அடுத்தடுத்து வெளியாகும் தனுஷ் படங்கள்... ரசிகர்களை கொண்டாட வைக்கும் அப்டேட்!
Crowd

நீங்கள் தரையில் தள்ளப்பட்டால் ஒரு பந்தாக சுருண்டு உங்கள் தலையை கைகளால் மூடி, ஒரு குத்துச்சண்டை வீரரைப் போல உங்கள் கைகளை உயர்த்தி உங்கள் விலா எலும்பைப் பாதுகாக்கவும். இந்த எளிய நடவடிக்கை உங்கள் மார்பைச் சுற்றி இடத்தை உருவாக்கி, சுவாசிப்பதை எளிதாக்குகிறது மற்றும் உயிருக்கு ஆபத்தான காயங்களைத் தடுக்கிறது.

கூட்ட நெரிசலில் சிக்கிய குழந்தைகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் தேவை. நெரிசல் ஏற்படும் நிகழ்வுகளுக்குச் செல்ல நேர்ந்தால் குழந்தைகள் எல்லா நேரங்களிலும் உங்களுக்கு அருகிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குழந்தைகளின் கைகளைப் பிடித்துக் கொள்வது அவசியம்.

இதையும் படியுங்கள்:
ராஷ்மிகா மந்தனா அழகு மற்றும் ஃபிட்னஸ் ரகசியங்கள்!
Crowd

சற்று வயதான குழந்தைகளும் நம் அருகே நெருக்கமாக இருக்கவும், கூட்டத்திற்கு எதிராக தள்ளுவதைத் தவிர்க்கவும், பாதுகாப்பான இடத்தை நோக்கி விரைவாகச் செல்லவும், அவர்களுக்கு கற்றுக்கொடுப்பது அவசியம். அவர்கள் விழுந்தால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு பந்தாக சுருண்டு கொள்ள கற்றுக்கொடுப்பதும் முக்கியம்.

நெரிசலின் போது உங்களுடன் வந்த யாராவது கூப்பிட்ட குரலுக்கு பதிலளிக்கவில்லை என்றால் விரைவாக செயல்படுவது அவசியம். மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம். மற்றவர்களின் உதவியுடன் உடனடியாக அந்த நபரை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்.

மேலும் சிக்கல்களைத் தடுக்க விரைவில் மருத்துவ உதவியை நாட வேண்டும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com