If you do all this, going for a walking is in waste!
If you do all this, going for a walking is in waste!

இதையெல்லாம் செய்தால் வாக்கிங் போறது வேஸ்ட்!

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘எங்க வீட்டுக்காரனும் கச்சேரிக்கு போகிறான்’ என்று. அது எதற்காக சொல்லப்படுவது என்றால், ஏதோ கடமைக்கு ஒரு விஷயத்தை நாமும் செய்கிறோம் என்ற பொருளில்தான். அதேபோல், நாமும் தினமும் வாக்கிங் செல்கிறோம். ஆனால், வாக்கிங் சென்று வீடு திரும்பும் வரை நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் என்னென்ன தெரியுமா?

சின்னச் சின்ன தவறுகளால் நாம் செல்லும் நடைப்பயிற்சி வீணடிக்கப்படுகிறது. நாம் நினைத்துக் கொண்டிருப்போம், ‘நடைப்பயிற்சி மேற்கொண்டு விட்டோம், கலோரிகளை எல்லாம் எரித்து விட்டோம், நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம்’ என்று. அது மிகப்பெரிய தவறு. நடைப்பயிற்சி மேற்கொள்ளும்பொழுது என்னென்ன செய்யக்கூடாது என்பதைக் குறித்தான விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.

முதலில், ‘வாக்கிங் குரூப்’ ஒன்றைத் தொடங்கிக்கொள்வது நல்லது. நண்பர்களோடு செல்லத் தொடங்கினால் நாம் ஒரு நாள் சோம்பல் பட்டாலும் அவர்கள் நம்மை இழுத்துச் சென்றுவிடுவார்கள். ஆனால், மிகவும் சத்தமாகப் பேசிக்கொண்டு சண்டை வரும் வரையான காரசாரமான விவாதங்களை வாக்கிங் செல்லும்போது செய்யக்கூடாது.

சிலருக்கு பாடலை மெதுவான ஒலியில் கேட்டுக்கொண்டே வாக்கிங் செல்லப் பிடிக்கும். நல்ல பழக்கம்தான். அதற்காக வெளியே சத்தமாக இருக்கிறது என்று உங்களின் பாடல் ஒலியை அதிகரித்துக்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்யும் பட்சத்தில் மனம் சீக்கிரமே சோர்வாகி விடும்.

வெளியில் சென்று சூரிய ஒளியில் வாக்கிங் செல்வதே நல்லது. சிலருக்கு அப்படிச் செல்ல வாய்ப்பும் இடமும் கிடைக்காது. ஆனால், பலருக்கு வெளியில் இயற்கையை ரசித்துக்கொண்டே வாக்கிங் செல்ல வாய்ப்பு இருக்கும். ஆனால், அதைத் தவிர்த்து வீட்டுக்குள்யேயே செல்ல விரும்புவார்கள். அப்படியான சொகுசான வாக்கிங் செல்ல ஆசைப்படக் கூடாது.

இதையும் படியுங்கள்:
அதிகரிக்கும் வெப்பம்! சருமப் புற்றுநோய்க்கான அபாயம்!சரும பாதுகாப்பு மருத்துவர்கள் கூறுவது என்ன?
If you do all this, going for a walking is in waste!

வாக்கிங் செல்வதற்கென தனியாக ஷூ வாங்கிக்கொள்ளுங்கள். அதை வீண் செலவு என நினைக்காதீர்கள். கால்களுக்கு ரொம்பவும் இறுக்கமான ஷூவைத் தவிருங்கள். மென்மையான ஷூக்களை தேர்ந்தெடுக்க மறக்காதீர்கள்.

நீண்ட தொலைவு வாக்கிங் செல்லும்போது கடைகள் பலவற்றைப் பார்ப்பீர்கள். உடனே சூடான வடை, பஜ்ஜி, டீ, காபி என்று குடிக்கவும், சாப்பிடவும் இறங்கி விடாதீர்கள். அப்படிச் செய்தால் அன்றைக்கு நீங்கள் சென்ற வாக்கிங் வீண்தான்.

‘எண்ணெய் பலகாரம், டீ, காபி குடிக்க மாட்டேன். ஆனால், அங்கே கீரை, காய்கறி விற்கும். அதை வாங்கிக்கொண்டு வருவேன்’ என்று சிலர் சொல்வார்கள். செல்லும் வழியில் ஏதேனும் கிடைத்தால் வாங்கி வருவது தவறு அல்ல. ஆனால், தினமும் அதைச் செய்துகொண்டிருக்காதீர்கள். நீங்கள் செல்வது வாக்கிங்தானே ஒழிய, ஷாப்பிங் அல்ல.

சிலர் வாக்கிங் செல்லும்போது புகை பிடிக்கும் பழக்கம் வைத்துள்ளார்கள். இது வேண்டவே வேண்டாம். வாக்கிங் செல்லும்போது உடல் உறுப்புகள் நன்கு இயங்க ஆரம்பிக்கும். குறிப்பாக, நுரையீரல் நன்கு சுத்தமான காற்றைச் சுவாசித்திருக்கும். அந்த நேரத்தில் புகையை உள்ளே அனுப்பி உடலைப் பாழ்படுத்தி விட வேண்டாமே!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com