
தலைமைப் பதவி என்பது படிநிலையால் மட்டும் வரையறுக்கப்படுவது அல்ல. யாரும் பார்க்காதபோதும் கூட நீங்கள் மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதன் மூலம்தான் தலைமைப் பதவி வரையறுக்கப்படுகிறது. அந்த வகையில் நீங்கள் ஒரு தலைவர் என்பதற்கான ஏழு அசாதாரண அறிகுறிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. விரைவாகப் பாராட்டைப் பகிர்ந்து கொள்வது: யாராவது உங்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும்போது அதை உடனடியாக உங்கள் குழுவினருக்குக் கடத்தினால் இது தலைமைத்துவத்தின் முதல் அடையாளம். இயல்பான தலைவர்கள் மற்றவர்களை மேம்படுத்துவதற்காக காத்திருப்பதோடு, வெற்றி ஒரு தனி நபரின் செயல் அல்ல என்பதை முழுவதுமாக அறிந்திருப்பதோடு, தங்களைப் புகழ்ந்து பேசுவதை விட அணியின் பங்கை முன்னிலைப்படுத்த விரும்புவார்கள்.
2. மக்கள் இயல்பாகவே உங்களிடம் மனம் திறந்து பேசுவர்: நீங்கள் ஒருவருக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்போதுதான் உங்களிடம் அவர் மனம் விட்டுப் பேசுவார். இந்த உணர்ச்சிபூர்வமான வெளிப்படைத் தன்மை நம்பிக்கையுடன் வழி நடத்தும் தலைமைத்துவம் உள்ள ஒருவரின் அடையாளமாகும். மற்றவர்கள் உண்மையாக இருக்கவும் வசதியாக உணரும் சூழலை உருவாக்கும் தலைவர்கள் தங்கள் செல்வாக்கை கட்டாயப்படுத்த மாட்டார்கள்.
3. செயல்பாடுகளை கேள்வி கேட்பீர்கள்: பிரச்னைகளை உண்டாக்காமல் சூழலை மேம்படுத்துவதற்காக நீண்டகால செயல்முறைகளை கேள்விக்குள்ளாக்குவது தலைமைத்துவத்தின் சிறந்த பண்பாகும். இந்த நிலையை உண்மையான தலைவர்கள் மேம்படுத்தவும் ஆழமான பொறுப்பை உணர்ந்து எதிர்கொள்ளவும் பயப்பட மாட்டார்கள்.
4. தயக்கமின்றி பொறுப்பேற்கிறீர்கள்: மோசமான சூழல் நிலவும்போது, பலி கடாவை தேடாமல், பழியை திசை திருப்பாமல், குழுவை பாதுகாக்கவும் பொறுப்புகளை ஏற்கவும் முன்னணியில் இருந்து வழி நடத்துவது தலைவர்களின் தலையாயப் பண்பாகும்.
5. மற்றவர்களின் வளர்ச்சியில் உண்மையிலேயே ஈடுபாடு கொண்டவர்: சக ஊழியர் பெரிய வாய்ப்பைப் பெறும்போதும், மற்றவர் செழித்து வளர்வதைப் பார்த்து மகிழ்வதும், இளைய ஊழியர் தேர்ச்சி பெறுவதாக இருந்தாலும் அவர்களின் வெற்றிகளால், அதாவது மற்றவர்களின் வளர்ச்சியில் உணர்வுபூர்வமான முதலீடு தலைமைத்துவத்துக்கான முக்கியப் பண்பாக உள்ளது.
6. சொல்லப்படாதவற்றை கவனிக்கிறீர்கள்: சொல்லப்படுவது மட்டுமல்லாமல், சொல்லப்படாதவற்றையும் கேட்பது சரியான நேரத்தில் நுட்பமான உணர்வு மாற்றங்களை கண்டறிந்து உயர்ந்த நுண்ணறிவை வெளிப்படுத்துவது தலைவர்களின் அதிசிறந்த பண்பாக உள்ளது.
7. அணியின் ஆற்றலைப் பற்றி கவனத்தில் கொள்கிறீர்கள்: ஒரு அணியில் ஆற்றல் குறையும்போது அதை சரி செய்து, தொடர்ந்து குழுவின் இயக்கங்களை ஆராய்ந்து யார் விலகி இருக்கிறார்கள் அல்லது ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்திருப்பது தலைவர்களின் முக்கியப் பண்பாக உள்ளது.
மேற்கூறிய 7 பண்புகளும் உங்களிடம் இருந்தால் தலைமை ஏற்பதற்கு சற்றும் தயங்காமல் பொறுப்பேற்றுக்கொள்வது சாலச் சிறந்தது.