கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடா? இந்த சூப்பரான இண்டக்ஷன் அடுப்புகளில் ஒன்றை உடனே வாங்குங்கள்!

Induction Stove buying tips
Induction Stove buying tips
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on: 

Induction Stove buying tips:

தமிழ்நாட்டில் இப்போது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனால் பல வீடுகளில் காலை நேர அவசரத்தில் சமையல் வேலை பாதியிலேயே நின்றுவிடுகிறது. இப்படிப்பட்ட நெருக்கடியான நேரங்களில் நமக்கு கைகொடுக்கும் ஒரே ஆபத்பாந்தவன் இண்டக்ஷன் (Induction Stove) அடுப்புதான். கேஸ் அடுப்பைவிட இதில் மிக விரைவாக சமைத்து விடலாம் என்பது பெரிய பிளஸ். 

ஆனால் கடைகளிலும் ஆன்லைனிலும் எக்கச்சக்கமான பிராண்டுகளில் பல மாடல்கள் குவிந்து கிடக்கின்றன. அதில் நமது வீட்டு பயன்பாட்டிற்கு எது சரியாக வரும் என தேர்ந்தெடுப்பது சற்று குழப்பமான விஷயம்தான். நீங்கள் புதிதாக ஒரு இண்டக்ஷன் அடுப்பு வாங்க திட்டமிட்டிருந்தால், இந்தப் பதிவை படித்துவிட்டு வாங்கவும்.

சரியான பவர் மற்றும் வாட்டேஜ்!

ஒரு இண்டக்ஷன் அடுப்பு வாங்கும்போது முதலில் கவனிக்க வேண்டியது அதனுடைய பவர் திறன்தான். வாட்டேஜ் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு சமையல் மிக சீக்கிரமாக முடியும். நமது இந்திய முறை சமையலுக்கு 1800 முதல் 2000 வாட்ஸ் பவர் கொண்ட அடுப்புகள் மிகச் சரியாக இருக்கும். இது மின்சாரத்தையும் அதிக அளவில் வீணாக்காது. 

சிறப்பான வாட்டேஜ் கொண்ட டாப் பிராண்ட் மாடல்கள் வாங்க...

நம்ம ஊரு சமையலுக்கான ப்ரீசெட் மெனுக்கள்!

ஒவ்வொரு வகையான உணவுக்கும் ஒவ்வொரு அளவிலான வெப்பம் தேவைப்படும். தோசை சுடுவது, பால் காய்ச்சுவது, டீ போடுவது அல்லது குழம்பு வைப்பது என நமது தென்னிந்திய சமையலுக்கு ஏற்றவாறு பிரத்யேகமான ப்ரீசெட் மெனு பட்டன்கள் உள்ளதா என்பதை சரிபார்த்து வாங்குங்கள். இது நாம் அடிக்கடி வெப்பத்தை மாற்றுவதை தவிர்த்து வேலையை சுலபமாக்கும். 

இப்படிப்பட்ட ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்த அடுப்புகளை வாங்க...

இதையும் படியுங்கள்:
நம்ம ஊர் ஊறுகாய் மாதிரிதான், ஆனா இது வேற லெவல்! கொரியர்களின் விருப்ப உணவு!
Induction Stove buying tips

பாதுகாப்பு வசதிகள்!

வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் Child Lock வசதி இருக்கும் மாடல்களை வாங்குவது மிக மிக அவசியம். அதேபோல அடுப்பின் மீது பாத்திரம் இல்லை என்றாலோ அல்லது பாத்திரம் அதிகப்படியாக சூடாகி விட்டாலோ, அடுப்பு தானாகவே அணைந்துவிடும் ஆட்டோ கட்-ஆஃப் வசதி கட்டாயம் இருக்கவேண்டும். அதோடு வோல்டேஜ் ஏற்ற இறக்கங்களை தாங்கி நிற்கும் திறன்கொண்ட மாடல்கள் நீண்ட காலத்திற்கு உழைக்கும். 

இந்த அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் கொண்ட சிறந்த அடுப்புகள் வாங்க...

மேற்பரப்பு, பாத்திரத்தின் அளவு!

அடுப்பின் மேல் பகுதி நல்ல உறுதியான மற்றும் சுலபமாக சுத்தம் செய்யக்கூடிய மைக்ரோ கிரிஸ்டல் கிளாஸ் மூலம் செய்யப்பட்டிருக்க வேண்டும். நாம் வைக்கும் அகலமான பாத்திரங்கள் முழுமையாக சூடாகும் அளவிற்கு அடுப்பின் பேனல் சைஸ் சற்று பெரிதாக இருப்பதை தேர்ந்தெடுப்பது எப்போதுமே சிறந்தது.

எதிர்பாராமல் வரும் கேஸ் தட்டுப்பாடு நேரங்களில் ஒரு தரமான இண்டக்ஷன் அடுப்பு வீட்டில் இருப்பது பல டென்ஷன்களை குறைக்கும். வெளியே சென்று அலைந்து திரிவதை விட, வீட்டில் இருந்தபடியே பல நல்ல மாடல்களை நாம் ஒப்பிட்டு பார்த்து வாங்க முடியும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீடு தெற்கு பார்த்ததா? அப்போ உங்களுக்கு அடிச்சது ஜாக்பாட்!
Induction Stove buying tips

மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளைப் பயன்படுத்தி உங்கள் பட்ஜெட்டிற்கு செட் ஆகும் ஒரு அருமையான மாடலை இன்றே ஆர்டர் செய்யுங்கள். சமையல் வேலையை இனி ஈஸியாகவும் வேகமாகவும் செய்து முடித்துவிடுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com