108 என்ற மந்திர எண் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள்!

Hinduism and Buddhism
Practice yoga or meditation
Published on

ற்போது 108 என்றால் அது ஓர் அவசர கால உதவி எண் என்பது பலருக்கும் தெரியும்.108 அவசர எண் என்பது வெறும் ஒரு சீரற்ற எண் மட்டுமல்ல, நமது இந்திய கலாச்சாரத்தில் அறிவியல் மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது என்பது தெரியுமா? அதைப் பற்றிய தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.

இந்து மதத்தில், 108 என்பது புனிதமான எண். விஷ்ணு மற்றும் சிவபெருமானுக்கு தலா 108 பெயர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. தாண்டவம் எனப்படும் சிவபெருமானின் பிரபஞ்ச நடனம் 108 தோரணைகளைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வைணவத்தில், விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்கள் உள்ளன. ருத்ராட்ச மாலையில் 108 மணிகள் உள்ளன. 108 முறை ஜபம் செய்வது புனிதமாக கருதப்படுகிறது.

இந்து மதம் மற்றும் புத்த மதத்தில், 108 என்ற எண்ணுக்கு மாய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. சாதுக்கள் 108 மணிகளைக் கொண்ட மாலையை மந்திரங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஜபத்தை 108 முறை மந்திரத்தை  உச்சரிப்பதன் மூலம் முடிக்கலாம், இது மாலையில் உள்ள 108 மணிகளால் அளவிடப்படுகிறது.

கிறிஸ்தவ மதத்தில், 'உண்மையில்' மற்றும் 'மன்னிக்க' என்ற வார்த்தைகள் பைபிளின் திருத்தப்பட்ட பதிப்புகளில் 108 முறை பயன்படுத்தப்படுகின்றன. மேலும், 108 ஒரு தேவதை எண்ணாகக் கருதப்படுகிறது. இது ஆதரவு மற்றும் ஊக்கத்தின் செய்தியாக நம்பப்படுகிறது.

யோகா அல்லது தியானம் பயிற்சி செய்யும்போது, ​​108 என்ற எண் ஆன்மீக நிறைவைக் குறிப்பதால் அது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பிராணயாமத்தின் போது 108 என்பது சுழற்சியை முடிக்க சிறந்த எண். சூரிய வணக்கம் பெரும்பாலும் 12 ஆசனங்களைக் கொண்ட ஒன்பது சுற்றுகளில் செய்யப்படுகிறது, மொத்தம் 108.

இதையும் படியுங்கள்:
வங்கி லாக்கரில் என்ன  வைக்கலாம்? எதை வைக்கக் கூடாது தெரியுமா?
Hinduism and Buddhism

108 இன் முக்கியத்துவத்திற்கான அறிவியல் விளக்கம் ஆச்சரியமளிக்கிறது. பூமத்திய ரேகையில் பூமியின் விட்டம் 7926 மைல்கள், அதே நேரத்தில் சூரியனின் விட்டம் சுமார் 108 மடங்கு, அதாவது 865,000. பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி அல்லது நடுப்புள்ளி தூரம் 93,020,000 மைல்கள்.

இது சூரியனின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகம். சந்திரனின் விட்டம் 2,180 மைல்கள். பூமியிலிருந்து சந்திரனுக்கான சராசரி தூரம் 238,800 மைல்கள். மீண்டும், இது சந்திரனின் விட்டத்தைப் போல சுமார் 108 மடங்கு அதிகம்! இந்தக் கணக்கீட்டு அம்சங்கள் அனைத்தும் 108 ஐ ஒரு சிறப்பு எண்ணாக ஆக்குகின்றன.

ஆயுர்வேதத்தில் மனித ஆன்மா ஒரு பயணத்தில் 108 நிலைகளைக் கடந்து செல்கிறது என்று நம்பப்படுகிறது. ஆயுர்வேதத்தில் சக்கரங்கள் என்பது ஆற்றல் கோடுகள் வெட்டும் புள்ளிகளைத் தவிர வேறில்லை. இதய சக்கரத்தை உருவாக்க மொத்தம் 108 ஆற்றல் கோடுகள் ஒன்றிணைகின்றன என்றும், இந்த சக்கரங்கள் ஒவ்வொன்றும் உடல் மற்றும் மனதை வளர்க்கின்றன என்றும் கூறப்படுகிறது.

இந்திய சாட்சியச் சட்டம், 1872 இன் பிரிவு 108, ஒரு நபரின் மரணத்தை ஊகிப்பதற்கான வழிகாட்டியைக் குறிக்கிறது, அதற்கு ஆதாரம் இல்லாதிருந்தால். ஏழு ஆண்டுகளாக அந்த நபரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றால், அந்த நபர் இறந்துவிட்டார் என்பதை நிரூபிக்க, பிரிவு 108 செயல்படுத்தப்படுகிறது.

உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.  குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.  மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள். 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது. "1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.

இதையும் படியுங்கள்:
பேச்சில் 10 (இத்தனை) வகைகளா? அப்பப்பா!
Hinduism and Buddhism

பௌத்தம் மற்றும் இந்து மதம் இரண்டும் ஒவ்வொரு மனிதனுக்கும் 108 வகையான உணர்வுகள் இருப்பதாக நம்புகின்றன. இவற்றில் 36 உணர்வுகள் அவர்களின் கடந்த காலத்தைச் சுற்றியும், 36 நிகழ்காலத்தைச் சுற்றியும், மீதமுள்ள 36 உணர்வுகள் அவர்களின் கனவுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை அடிப்படையாகக் கொண்டவை. உடலின் உட்புற வெப்பநிலை 108 டிகிரி பாரன்ஹீட்டை எட்டும்போது, ​​உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் செயல்படத் தொடங்கும் என்கிறது மனித அறிவியல்.கூடைப்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படும்  பந்தில் சரியாக 108 தையல்கள் இருப்பது கூட ஆச்சரியமானதுதானே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com