நெயில் கட்டர் நகம் வெட்ட மட்டுமா? பலருக்கும் தெரியாத இதன் 3 பயன்கள்!

Uses of Nail cutter
Nail Cutter
Published on

ம் வீட்டில், வேலைகளை எளிதாக்க உதவும் பல வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளன. அவற்றின் முழு பயன்பாட்டையும் அனைவரும் அறிந்திருப்பதில்லை. அவற்றில் ஒன்றான நெயில் கட்டர் (Nail Cutter), நகம் வெட்டுவதைத் தவிர வேறெந்த வேலைகளுக்குக்கெல்லாம் பயன்படும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நெயில் கட்டர், அநேகமாக எல்லோர் வீடுகளிலும் இருக்கக்கூடிய ஓர் அத்தியாவசியமான சிறிய உபகரணம். அதை வைத்து நாம் நகங்களை வெட்டவும், சுத்தப்படுத்தவும் செய்வோம். நெயில் கட்டரை கூர்ந்து கவனித்துப் பார்த்தால் அதன் உட்பகுதியின் கடைசியில் இரண்டு கூர்மையான கத்தி போன்ற அமைப்பு தென்படும். இது ஒன்றிற்கும் பிரயோஜனப்படாத இணைப்பு எனப் பலரும் எண்ணலாம். அந்த கத்திகளை உபயோகிக்க முயற்சித்துப் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். அல்லது சம்பந்தமில்லா வேறு வேலைக்குப் பயன்படுத்தியிருப்பர்.

இதையும் படியுங்கள்:
செங்கல் Vs சிபோரக்ஸ்: உங்கள் கனவு வீட்டிற்கு எது சிறந்தது?
Uses of Nail cutter

முதலில் உள்ள கத்தி, நகத்தை வெட்டிய பின் அங்கு தங்கியுள்ள அசுத்தங்களை நீக்கப் பயன்படுகிறது. பொதுவாக தூசி, அழுக்கு, கறை போன்ற அசுத்தங்கள் கைகளிலோ விரல்களிலோ நிரந்தரமாகத் தங்கியிருப்பதில்லை. ஆனால், அவை நகங்களின் அடியில் தங்கி பார்ப்போருக்கு ஓர் அருவறுப்பான உணர்வை உண்டு பண்ணும். நெயில் கட்டரில் உள்ள இந்த கத்தியை கவனமுடன் கையாள்வதன் மூலம் இந்த அசுத்தங்களை மொத்தமாக நீக்கி, நகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்.

இரண்டாவதாக உள்ள முனை வளைந்த கத்தி சற்று வித்தியாசமான அமைப்பு கொண்டது. மூடியை சீல் பண்ணி இறுக்கமாக மூடி வைத்திருக்கும் பாட்டில்களின் மூடியை சுலபமாக திறப்பதற்கு இந்த கத்தி பயன்படும். கத்தியின் வளைந்த முனை மூடியின் இறுகிய பிடியை திருகி தளர்வுறச் செய்யும். இதனால் மூடி எளிதாகக் கழன்று விடும்.

இதையும் படியுங்கள்:
கருவுற்ற பெண்களை அதிகமாக கொசுக்கள் கடிப்பது ஏன்?
Uses of Nail cutter

இந்த இரண்டு கத்திகளுமே, சில நேரம் பார்சலை சுற்றிக் கட்டியிருக்கும் மெல்லிய கயிறு மற்றும் நூலை வெட்டியெடுக்கப் பயன்படும். எதுவானாலும் இதை கவனமுடன் கையாள்வது கை காயமடையாமல் பாதுகாக்க உதவும். குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் நக வெட்டியை பத்திரப்படுத்தி வைப்பது நலம்.

அதிக ஆழமான அல்லது மென்மையான பகுதிகளில் இதை உபயோகிப்பதைத் தவிர்த்து விடலாம். நெயில் கட்டரின் அடிப்பகுதியில் சொரசொரப்பான வடிவமைக்கப்பட்ட ஒரு பகுதி உண்டு. அதை வைத்து, நகம் வெட்டிய பின் நகத்தை உரசி வழுவழுப்பாக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com